சொர்க்க பூமி சிக்கிமில் சுற்றுலா செல்ல வேண்டுமா ? ஐ.ஆர்.சி.டி.சி வழங்கும் ஸ்பெசல் ஆஃபர்!

IRCTC Tourism Offers 6-Day Tour to Gangtok, Pelling and Siliguri : லாண்ட்ரி, ரூம் சர்வீஸ்கள், மற்றும் கூடுதலாக சுற்றிப்பார்க்கும் இடங்கள் இந்த...

IRCTC Offers 5N 6D Package to North East :  சிக்கிம் என்றவுடன் நம் நினைவிற்கு வருவது இயற்கை விவசாயம் தான். இந்தியாவில் உள்ள மாநிலத்தில் 100% இயற்கை உணவுகளுக்கு தங்களையும் தங்களின் விவசாயத்தையும் பழக்கிக் கொண்ட மாநிலம் இது தான். இதன் இயற்கை எழில் கொஞ்சும் அழகினை ரசிக்க ஆயிரக்கணக்கில் இங்கு சுற்றுலாவினர் குவிவது வழக்கம்.

மழை முகடுகள், பனிச்சிகரங்கள், பசுமை போத்திய புல்வெளிகள் என்று எங்கு திரும்பினாலும் இயற்கை எழில் கொஞ்சும் மாநிலமாக இது இருக்கிறது. சமீபத்தில் ஐ.நா, இம்மாநிலத்தின் இயற்கை விவசாய முறைகளுக்காக விருது வழங்கி சிறப்பித்தது.

தென்னிந்தியாவில் இருந்து இங்கு சுற்றுலா செல்ல விரும்பும் ஒவ்வொருவருக்கும் வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது ஐ.ஆர்.சி.டி.சியின் இந்த பேக்கேஜ். ஜூன் 1ம் தேதி துவங்கும் இந்த சுற்றுலா 6 பகல்களையும் 5 இரவுகளையும் கொண்டது. ஒரு நபருக்கு ரூ.24,700 கட்டணமாகும்.

IRCTC North East Package, IRCTC North East Package, IRCTC Tourism Offer, Green Sikkim Air Package

IRCTC North East Package : க்ரீன் சிக்கிம் ஏர் பேக்கேஜ் என்று சொல்லப்படும் அந்த பேக்கேஜ் பற்றிய முழு விபரங்கள் இதோ

சுற்றுலா தளங்கள் – கேங்க்டாக் 2 இரவுகள், பெல்லிங் – 2 இரவுகள், சிலிகுரி – 1 இரவு

உணவு – காலை சிற்றுண்டி மற்றும் இரவு உணவு

தங்குமிடங்கள் – கேங்க்டாக் – ஹோட்டல் கஜ்ராஜ்
பெல்லிங் – ஹோட்டல் பெமாலிங்
சிலிகுரி – வெங்கடேஷ் ரெசிடென்ஸி

IRCTC North East Package, IRCTC North East Package, IRCTC Tourism Offer, Green Sikkim Air Package

IRCTC North East Package – கட்டணம்

இருவர் பேக்கேஜில் – ரூ. 26,340 (தலா ஒருவருக்கு)

மூவர் பேக்கேஜில் – ரூ.24,700 (தலா ஒருவருக்கு )

குழந்தைகளுக்கு – 5 -11 வயதுக்குட்பட்டவர்களுக்கு (ரூ. 21,425)

பெங்களூரு – பக்த்ஹோரா – பெங்களரூ என்று ஒரு ரவுண்ட் சுற்றாக இருக்கும்.

லாண்ட்ரி, ரூம் சர்வீஸ்கள், மற்றும் கூடுதலாக சுற்றிப்பார்க்கும் இடங்கள் இந்த பேக்கேஜில் அடங்காது.

IRCTC North East Package, IRCTC North East Package, IRCTC Tourism Offer, Green Sikkim Air Package

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close