Advertisment

IRCTC North East Tour: ஷிலாங்க் - சிரப்புஞ்சி சுற்றிப்பார்க்க வேண்டுமா? சூப்பர் பிளான் இதோ

IRCTC Offering North East Air Package for 7D/6N : இந்தியாவின் வட கிழக்கு சுற்றுலா தளங்களை சுற்றிப்பார்க்க அருமையான திட்டம்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IRCTC North East Tour: ஷிலாங்க் - சிரப்புஞ்சி சுற்றிப்பார்க்க வேண்டுமா? சூப்பர் பிளான் இதோ

IRCTC North East tour package details

IRCTC North east tour package : இந்தியாவின் வட கிழக்கு சுற்றுலா தளங்களை சுற்றிப்பார்க்க அருமையான திட்டத்தை இந்தியன் ரயில்வேத்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

Advertisment

இந்தியாவில் அமைந்துள்ள சுற்றுலா தளங்களில் பிரபலமான சுற்றுலா தளங்கள் பெரும்பாலும் வடகிழக்கே அமைந்திருக்கிறது. எனவே அந்தத் தளங்களை சுற்றிப்பார்க்க ஐ.ஆர்.சி.டி.சி சூப்பர் பிளான் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

IRCTC : ஐ.ஆர்.சி.டி.சி வட கிழக்கு சுற்றுலா பயணம் திட்டம்

இந்த டூர் பேக்கேஜில், 7 நாட்கள் தங்கி கௌஹாத்தி, காஸிரங்கா, ஷிலாங்க் மற்றும் சிரப்புஞ்சி ஆகிய இடங்களை சுற்றிப்பார்க்கும் வகையில் அமைந்திருக்கிறது. மேலும், இந்த பேக்கேஜ்ஜில் பயணிப்பவர்கள் காமக்யா தேவி கோவில், காஸிரங்கா தேசிய பூங்கா, உமியம் ஏரி, ஷிலாங்க் அருங்காட்சியகம், லையும்க்ரா கேதட்ரல், எலிஃபண்டா அறுவி, நாகாலிகை அறுவி, மாஸ்மை குகை, நபக்ரஹா கோவில், சுக்ரேஸ்வர் கோவில் மற்றும் கௌஹாத்தி ஸூ ஆகிய இடங்களை சுற்றிப்பார்க்கலாம்.

இந்த திட்டத்தின் கீழ் என்னவெல்லாம் அடங்கும்:

  • ஜெட் ஏர்வேஸ் டிக்கெட் கட்டணம்
  • 6 இரவுகள் தங்க டீலக்ஸ் ஹோட்டல் கட்டணம்
  • 6 நாட்கள் காலை உணவு மற்றும் இரவு உணவு
  • சுற்றுலா தளங்களுக்கு கூட்டிச் செல்ல ஏசி பேருந்து
  • காஸிரங்கா தேசியா பூங்காவை சுற்றிப்பார்க்க ஜீப் கட்டணம்

irctc.co.in Thailand Package: புத்தாண்டு இரவை கொண்டாட IRCTC-ன் வாவ் அறிவிப்பு

இவை அனைத்தும் ஐ.ஆர்.சி.டி.சி தளத்தில் இந்த சுற்றுலா பேக்கேஜ்ஜின் டிக்கெட் செலவில் அடங்கும்.

IRCTC : ஐ.ஆர்.சி.டி.சி வட கிழக்கு சுற்றுலா பயணம் கட்டணம் விவரம்

IRCTC North East tour package

இந்த பேக்கேஜில் எந்த செலவுகள் எல்லாம் அடங்காது:

  • துணிகள் சலவை செய்வது, தொலைப்பேசியில் தொடர்புக்கொள்ளும் பில், டிப்ஸ், மினெரல் வாட்டர், குளிர்பாணங்கள், சுற்றுலா தளத்தில் சிறப்பு விளையாட்டுகள், கேமரா அல்லது வீடியோ கேமரா கட்டணம் ஆகியவற்றுக்கு நீங்களே செலவு செய்ய வேண்டும். டிக்கெட் கட்டணத்தைல் அடங்காது.
  • பேக்கேஜில் இல்லாத வேறு ஏதானும் இடத்தை சுற்றிப்பார்க்க விரும்பினால் அதுவும் உங்கள் செலவே.
  • காமாக்யா கோவில் உள்ளே செல்ல, விஐபி தரிசனம் மற்றும் வழிகாட்டி கட்டணம் ஏற்றுக் கொள்ளப்படாது.
  • யானை சவாரி மேற்கொள்பவர்கள் தாங்களே அதன் கட்டணத்தை செலுத்த வேண்டும்.
  • இயற்கை சீற்றம் அல்லது இயற்கை சேதத்தால் வரும் செலவுகளை தாங்களே ஏற்க வேண்டும். உதாரணத்திற்கு, மண் சரிவு, சாலை அடைப்பு அல்லது போராட்டம்/ சாலை மறியல் போன்ற நிகழ்வுகள் ஏற்பட்டால் அப்போது ஏற்படும் செலவுகளுக்கு பயணிகள் பணம் செலுத்த வேண்டும்.
  • திடீரென உயரும் வரி கட்டணம் அல்லது பெட்ரோல்/டீசல் விலை உயர்வின் பொழுது வழக்கத்தை விட விரைவில் புறப்படும் நிலை ஏற்படலாம்.
  • கூடுதல் உணவு மற்றும் இதற செலவுகளும் இந்த பேக்கேஜில் அடங்காது.
Indian Railways Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment