Advertisment

IRCTC: ரயிலில் ‘போஸ்ட் பெய்டு’ டிக்கெட் புக்கிங் தெரியுமா? உங்களுக்கான டாப் 5 வசதிகள் இங்கே...

Indian Railways Latest Features You Must Know:பல வசதிகளை ஐ.ஆர்.சி.டி.சி செய்திருக்கிறது. ரயில் பயணிகள் இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IRCTC Next Generation E-Ticketing, இந்தியன் ரயில்வே டிக்கெட் முன்பதிவு வசதிகள்

IRCTC Next Generation E-Ticketing, இந்தியன் ரயில்வே டிக்கெட் முன்பதிவு வசதிகள்

IRCTC Next Generation E-ticketing Website Recent Features: ரயிலில் ‘போஸ்ட் பெய்டு’ டிக்கெட் புக்கிங் வசதி இருப்பது தெரியுமா? அதேபோல ஐ.ஆர்.டி.சி. வழங்கும் டாப் 5 வசதிகளை இங்கு காணலாம்.

Advertisment

ரயில் பயணத்திற்காக நேரடியாக கவுண்டர்களுக்கு சென்று டிக்கெட் எடுப்பது வெகுவாக குறைந்துவிட்டது. இதற்கு காரணம் ஐ.ஆர்.சி.டி.சி எனப்படும் இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலாக் கழகம் செய்து தரும் வசதிகள்தான்.

ஐ.ஆர்.சி.டி.சி அண்மைக் காலத்தில் உருவாக்கிக் கொடுத்த 5 முக்கிய வசதிகளை இங்கே காணலாம்.

1. டிஷா சாட்போட் ( டிஜிட்டல் இன்ட்ராக்‌ஷன் டு ஸீக் ஹெல்ப் எனி டைம்) என்பது முக்கியமான ஒரு வசதி. அதாவது, 24 மணி நேரமும் பயணிகளின் தேவைகளுக்கு உதவுகிற மாதிரியான ஆன் லைன் அமைப்பு.

இந்த அமைப்பின் மூலமாக டிக்கெட் புக்கிங், டிக்கெட் ரத்து, உணவு வசதி உள்ளிட்ட தேவைகளுக்கு பதில் பெறலாம்.

2. ‘Book now pay later’ என்கிற போஸ்ட் பெய்டு வசதி மிக முக்கியமானது. ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் புக் செய்கிற டிக்கெட்டுகளுக்கு பின்னர் பணம் செலுத்துகிற வசதி இது. ‘ePaylater’ மற்றும் ‘Pay-on-Delivery’ வசதிகள் சாதாரண மற்றும் தட்கல் ஆகிய இரு முன்பதிவுகளிலும் இருக்கிறது.

இ டிக்கெட் ‘புக்’ செய்து 15 நாட்களிலோ அல்லது 24 மணி நேரத்தில் டிக்கெட் டெலிவரியின்போதோ ஆன் லைனில் இந்த வசதியை பயன்படுத்தி பணம் செலுத்தலாம்.

3. பெருமளவில் மக்கள் ஆன் லைன் புக்கிங் வசதியை பயன்படுத்த தொடங்கிவிட்டாலும், இன்னமும் கவுண்டர்களில் டிக்கெட் எடுப்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் திடீரென டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டும் என்றால், கவுண்டர்களுக்கே போகவேண்டிய நிலை இருந்தது. அதை மாற்றி, கவுண்டர்களில் எடுக்கப்படும் டிக்கெட்டுகளையும் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் மூலமாக ரத்து செய்யும் வசதி கொண்டு வரப்பட்டிருக்கிறது.

4. ஐ.ஆர்.சி.டி.சி வழங்கும் லேட்டஸ்ட் வசதிகள் மற்றும் அறிவிப்புகளை அறிந்து கொள்ள உங்கள் இணையதள அக்கவுண்டில், அல்லது ‘ஆப்’பில் ‘புஷ் நோட்டிஃபிகேஷன்’ வசதியை ஆக்டிவ் செய்து வைக்கவும். இதன் மூலமாக ஐ.ஆர்.சி.டி.சி அப்டேட்களை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம்.

5. ஐ.ஆர்.சி.டி.சி-யில் டிக்கெட் புக் செய்கிறவர்களுக்கு ரூ 1 லட்சம் வரையிலான தொகைக்கு பரிமாற்றக் கட்டணம் கிடையாது. நெட் பேங்கிங், கிரெடிட் கார்ட், இ வாலட், கேஷ் கார்ட் ஆகியவற்றின் மூலமாகவும் இந்த வசதியை பெறலாம்.

இதேபோன்ற பல வசதிகளை ஐ.ஆர்.சி.டி.சி செய்திருக்கிறது. ரயில் பயணிகள் இவற்றை பயன்படுத்திக் கொள்ளலாம்.

Indian Railways Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment