Advertisment

உங்களின் பி.என்.ஆர் ஸ்டேட்டஸை தற்போது SMS மூலமாக அறிந்திடலாம்... IRCTC-யின் புதிய அப்டேட்

IRCTC PNR Status by SMS and irctc.co.in: எப்போது ரயில் கிளம்பியது, எப்போது நீங்கள் இருக்கும் இடத்துக்கு அது வந்து சேரும், எப்போது உங்களை இலக்கை அடைவீர்கள் உள்ளிட்டத் தகவல்கள் தெரியபடுத்தப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
irctc vikalp scheme

irctc vikalp scheme

IRCTC PNR Status By SMS & Online in irctc.co.in: இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருக்கும் மெஸேஜிங் தளங்களில் ஒன்று வாட்ஸ்அப். 20 கோடி பேருக்கு மேல் தினம் தினம் வாட்ஸ்அப் செயலியை பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். அடிக்கடி பல அசத்தல் அப்டேட்டுகளை அள்ளிவிடும் வாட்ஸ்அப் நிறுவனம், தற்போது இந்திய மக்களுக்கு மிகவும் பயனளிக்கும் வகையிலான ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது.

Advertisment

ரயில் மூலம் பயணம் செய்பவர்கள், இனி தங்களுக்கான பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் மற்றும் குறிப்பிட்ட ரயில் குறித்தான பிற தகவல்களை வாட்ஸ்அப் மூலமே அறிய முடியும்.

இந்திய ரயில்வே துறையின் ஐஆர்சிடிசி, மேக் மை ட்ரிப் நிறுவனத்துடன் ஒரு ஒப்பந்தம் போட்டுள்ளது. இந்த ஒப்பந்தப்படி தான் வாட்ஸ்அப் மூலம் ரயில் சேவை குறித்தான தகவல்களை பெற முடியும்.

IRCTC PNR Status by SMS and irctc.co.in: பிஎன்ஆர் ஸ்டேட்டஸை தெரிந்து கொள்வதற்கான வழிகள்:

1.உங்கள் மொபைலில் உள்ள கான்டேக்ட்ஸில் மேக் மை ட்ரிப் தளத்தின் வாட்ஸ்அப் எண்-ஐ  சேமித்துக் கொள்ளவும்.

2.இதையடுத்து, வாட்ஸ்அப்-க்குச் சென்று, மேக் மை ட்ரிப் எண்ணுடன் மெஸேஜ் செய்ய ஆரம்பிக்க வேண்டும்.

3.பிஎன்ஆர் (PNR) என்று ஆங்கிலத்தில் டைப் செய்து, ஒரு இடைவெளி விட்டு உங்களது பிஎன்ஆர் எண்ணை தட்டுங்கள். பிறகு மெஸேஜ் அனுப்புங்கள்.

இதையடுத்து, உங்களது பிஎன்ஆர் ஸ்டேட்டஸ் தானாகவே தெரியபடுத்தப்படும்.

மேலும் படிக்க : ஐ.ஆர்.சி.டி.சியில் ஆதாரை இணைத்தால் 1 மாதத்தில் 12 டிக்கெட்கள் புக் செய்து கொள்ளலாம்…

ரயில் சேவை குறித்தான தகவல்களை தெரிந்து கொள்வதற்கான வழிகள்:

1. முன்னர் போலவே, மேக் மை ட்ரிப் வாட்ஸ்அப் எண் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள்.

2.மேக் மை ட்ரிப் வாட்ஸ்அப் சாட்டுக்கு சென்று ரயில் எண்ணை மட்டும் தட்டி அனுப்புங்கள். சிறிது நேரத்தில் எப்போது ரயில் கிளம்பியது, எப்போது நீங்கள் இருக்கும் இடத்துக்கு அது வந்து சேரும், எப்போது உங்களை இலக்கை அடைவீர்கள் உள்ளிட்டத் தகவல்கள் தெரியபடுத்தப்படும்.

சில நேரங்களில் பதில் வர தாமதமாகலாம். ஆனால், அது சாதரணமானது தான். இந்த வசதியை பயன்படுத்துவதற்கு முன்னர் வாட்ஸ்அப் செயலியின் கடைசி அப்டேட்டை தரவிறக்கம் செய்துவிட்டதை உறுதி செய்து கொள்ளுங்கள். இந்த அனைத்து சேவையையும் வாட்ஸ்அப் இலவசமாகவே தனது பயனர்களுக்குக் கொடுக்கிறது.

ஐ.ஆர்.சி.டி.சி இணையதளம் வழியான பி.என்.ஆர். ஸ்டேட்டஸ் பார்ப்பது எப்படி ?

முதலில் http://www.irctc.co.in. இணைய தளத்திற்கு செல்லுங்கள்

அங்கு ட்ரெய்ன்ஸ் என்ற ஆப்சன் இருக்கும்.

அதன் கீழ் பி.என்.ஆர் என்கொயரி என்ற ஆப்சனை க்ளிக் செய்து தங்களின் பி.என்.ஆர் ஸ்டேட்டஸ் தெரிந்து கொள்ள இயலும்.

Indian Railways Irctc
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment