/tamil-ie/media/media_files/uploads/2019/04/VBKEDAPPADIDAY1jpg-2.jpg)
irctc train ticket booking charges
irctc rac ticket booking : இந்திய ரயில்களின் டிக்கெட் முன்பதிவு தளமான ஐ.ஆர்.சி.டி.சி-யில் பயணிகளின் பயணத்தை சிறப்பாக்கும் வகையில் ஏகப்பட்ட வசதிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நீண்ட தூர ரயில் பயணத்தை மேற்கொள்பவர்கள் இதுப் போன்ற வசதிகளை கட்டாயம் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
1. ரயில் நிலையங்களில் ஆன்-லைனில் தங்கும் அறையை பதிவு செய்வதற்காக அங்கே கம்யூட்டர்கள் வைக்கப்பட்டுள்ளன. அதோடு www.railtourismindia.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம். இதன்படி 60 நாட்களுக்கு முன்னதாக தங்கும் அறையைப் பதிவு செய்ய முடியும். உறுதி செய்யப்பட்ட ரயில் டிக்கெட் அல்லது ஆர்.ஏ.சி. டிக்கெட்டின் (இருக்கை உறுதி செய்யப்பட்ட டிக்கெட்) பி.என்.ஆர். எண் மற்றும் புறப்படும் இடம், போய்ச்சேரும் இடத்தைக் குறிப்பிட்டு தங்கும் அறையை பதிவு செய்யலாம்.
2. இந்திய ரயில்வேயின் இணையதளமான இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிஸம் கார்ப்ரேஷன் பதிவு செய்த டிக்கெட்டுகளை கேன்சல் செய்து கொள்ளவும் வழிவகை செய்துள்ளது. ஆன் லைனில் பதிவு செய்த டிக்கெட்டுகளை ஐஆர்சிடிசி ஆப் வழியாகவோ அல்லது ஐஆர்சிடிசி இணையதளம் வழியாகவோ கேன்சல் செய்ய முடியும். கேன்சல் செய்யப்பட்ட டிக்கெட்டின் பணம் பதிவு செய்யப்பட்ட கணக்கிற்கே திரும்ப செலுத்தப்படுகிறது. கேன்சல் செய்ததற்கு குறிப்பிட்ட அளவு பணம் பிடித்தம் செய்யப்படும்.
3.கன்ஃபார்ம் ஆன டிக்கெட்டை ரயில் புறப்படுவதற்கு 48 மணிநேரத்திற்கு முன் கேன்சல் செய்தால் , ஏசி முதல் பிரிவு டிக்கெட்டாக இருந்தால் ரூ. 240 பிடித்தம் செய்யப்படும். ஏசி 2வது பிரிவாக இருந்தால் ரூ.200 ஆகவும், ஏசி 3 வது பிரிவாக இருந்தால் ரூ.180வாகவும், சிலிப்பர் வகுப்பாக இருந்தால் ரூ.120 ஆகவும் இரண்டாம் வகுப்பாக இருந்தால் ரூ.60 ஆக இருக்கும்.
4. சதவித அளவில் தட்கல் சார்ஜ் வசூலிக்கப்படுகிறது. இரண்டாம் வகுப்பு பயணச்சீட்டு கட்டணத்தில் இருந்து 10 சதவிதமும், மற்ற வகுப்பு கட்டணத்தில் இருந்து 30 சதவிதமும் தட்கல் சார்ஜ் வசூலிக்கப்படுகிறது.
5. பயணிகள் பெயர் பதிவு மூலம் அதிகபட்சமாக நான்கு நபர்களுக்கு மட்டுமே தட்கலில் பயணச்சீட்டு முன்பதிவு செய்ய அனுமதி உள்ளது.ஒரு நாளிற்கு, ஒரு இரயிலில் ஒரு தட்கள் பயணச்சீட்டு மட்டுமே ஐஆர்சிடிசியின் வலை சேவை முகவர்களால் பதிவு செய்ய முடியும்.
6. பதிவு செய்யப்பட்ட டிக்கெட்கள் திரையில் வரும். அதில் நீங்கள் எந்த பயணத்தை கேன்சல் செய்ய விரும்புகிறிர்களோ அந்த டிக்கெட்டை தேர்வு செய்து கேன்சல் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.