New Update
IRCTC: Indian Railways Rule and Charges of 'Premium Tatkal' Tickets Booking : தட்கல் ரயில் டிக்கெட் எளிதில் புக் செய்வது குறித்து பல எளிய முறைகள் தெரிந்திருப்பீர்கள். பிரீமியம் தட்கல் டிக்கெட் எப்படி பெறுவது?
Advertisment
IRCTC: Rules and charges of booking 'Premium Tatkal' tickets : ப்ரீமியம் தட்கல் டிக்கெட் விதிமுறைகள்
இந்தியன் ரயில்வே, வெளியூர் பயணம், மற்றும் ஐஆர்சிடிசி சலுகைகள் குறித்தும், தட்கல் டிக்கெட்டுக்களை எப்படி எளிய முறையில் வாங்குவது என்பது குறித்த விவரங்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் ஒரு தொகுப்பாக உங்களுக்கு அளித்தது.
Tatkal Booking : இதெல்லாம் செய்தால் தட்கல் டிக்கெட் எடுப்பது ரொம்ப ஈஸி
இன்றைய தொகுப்பில் ப்ரீமியம் தட்கல் டிக்கெட் எப்படி புக் செய்வது, என்னென்ன விதிமுறைகள் உள்ளது என்பது குறித்து கூறுகிறோம்.
- கடைசி நிமிடத்தில் ஊருக்கு செல்ல வேண்டும் என்று திட்டம் இருந்தால், நீங்கள் என்று ஊருக்கு செல்ல இருக்கிறீர்களோ அதற்கு முந்தைய நாள் தட்கல் டிக்கெட் வாங்கலாம். அதற்கான பதிவுகள் சரியாக காலை 10 மணிக்கு தொடங்கும். ஏசி பெட்டிக்கு 10 மணிக்கும், சாதாரண பெட்டிக்கு காலை 11 மணிக்கும் தொடங்கும்.
- ஆனால் இந்த தட்கல் புக்கிங்கில் இரண்டு வகை உள்ளது. தட்கல் மற்றும் ப்ரீமியம் தட்கல்
ப்ரீமியம் தட்கல் டிக்கெட் வாங்க என்ன செய்ய வேண்டும்
- முதலில் ஐஆர்சிடிசி இணையத்தளத்தில் லாக் - இன் செய்துக் கொள்ளுங்கள்.
- நீங்கள் செல்ல இருக்கும் ஊர், தேதி, எந்த மாதிரியான டிக்கெட் என்ற விவரங்களை பதிவிடுங்கள்
- ஓகே அல்லது ‘Find trains’ என்ற அப்ஷனை கிளிக் செய்யவும்.
- பிறகு அதில், “ப்ரீமியம் தட்கல்” தேர்வு செய்யவும்.
- பின்னர் பயணிகளில் பெயர், விவரம் என அனைத்து விவரங்களையும் பதிவிட்டு நெக்ஸ்ட் கொடுக்கவும்.
- இறுதியாக கட்டணம் செலுத்திய பிறகு “டன்” கொடுத்தால் போதும். ப்ரீமியம் தட்கல் டிக்கெட் பதிவாகும்.
யாரெல்லாம் ப்ரீமியம் தட்கல் டிக்கெட் புக் செய்ய முடியாது
- ஏஜெண்டுகள் யாரும் இந்த டிக்கெட்டை புக் செய்ய முடியாது.
- உறுதி செய்யப்பட்ட டிக்கெட் வைத்திருக்கும் பயணிகள் ஒருவேளை ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமென்றால் கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படும்.
- இந்த ப்ரீமியம் டிக்கெட்டை RAC மற்றும் வெயிட்லிஸ்ட் பயணிகள் உபயோகிக்க முடியாது.
- வெறும் இ- டிக்கேட்களுக்கு மட்டுமே இந்த வசதி. ஐ - டிக்கெட்டுகளுக்கு இல்லை
Advertisment
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.