Irctc Shirdi sai darshan ticket booking online : சாய் பாபாவைச் தரிசனம் செய்ய ஷீரடிக்கு செல்லும் பக்தர்களுக்கு நல்ல செய்தி இருக்கிறது.
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் (IRCTC) வலைத்தளத்திலிருந்து இப்போது பக்தர்கள் சாயி பாபாவின் தர்ஷன் டிக்கட்டை பதிவு செய்யலாம். ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் இந்த தகவலை ட்வீட் செய்தார்.
Irctc Shirdi sai darshan ticket booking online : ஐஆர்சிடிசி ஷீரடி சாய் பாபா தரிசனம் டிக்கெட் பதிவு
ஷீர்டி சாய் நகர், கொப்பார் கிராமம், மன்மத், நாசிக் மற்றும் நாகசசோல் ஆகிய இடங்களுக்கு பயணம் மேற்கொள்பவர்கள் மட்டுமே இந்த வசதியை பெற முடியும். இதற்கு, பயணிகள் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட் வைத்திருக்க வேண்டும். ஆனால் குறிப்பிடப்பட்டூள்ள பகுதிகளுக்கு அருகே உள்ள ரயில் நிலையங்களை தவிர, பயணிகள் வசதிக்கு ஏற்ப வேறு ஏதேனும் ரயில் நிலையத்தில் இருந்து பயணித்தால், இந்த வசதி கிடைக்காது.
ரயில் பயணத்தில் இதையெல்லாம் சந்தித்தால்... முழு பணத்தை வாபஸ்
ஷீரடி டிக்கெட்டை எப்படி புக் செய்வது ?
- மேலே குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் பயணம் மேற்கொண்டிருப்பவர்கள், ஐஆர்சிடிசி தளத்தில் உள்ள சாய் தர்ஷன் டிக்கெட்டைப் பதிவு செய்யும் ஆப்ஷனுக்கு செல்லவும்.
- பின்னர் உங்களின் உறுதி செய்யப்பட்டிருக்கும் டிக்கெட் விவரங்களை வைத்திருக்க வேண்டும்.
- ஒருவேளை நீங்கள் முன்பே இந்த டிக்கெட்டை பதிவு செய்திருந்தால், 'Philatelic Tickets' ஐ பதிவு செய்யலாம்.
- சாய் தர்ஷன் டிக்கெட்டைப் பதிவு செய்ய பக்தர்கள் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும்.