IRCTC tamil news, irctc website upgraded: இந்திய ரயில்வே தனது இ-டிக்கெட் (ஐ.ஆர்.சி.டி.சி) வலைத்தளமான www.irctc.co.in மற்றும் ரெயில் கனெக்ட் மொபைல் சமீபத்தில் மேம்படுத்தியது. இந்த மேம்படுத்தப்பட்ட இ-டிக்கெட் வலைத்தளம் மற்றும் செயல்பாட்டை, ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கடந்த டிசம்பர் 31, 2020 அன்று தொடங்கி வைத்தார். தற்போது 6 கோடிக்கும் அதிகமான பயனர்கள் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தை பயன்படுத்தி வரும் நிலையில், தினமும் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய செய்யப்படுகின்றன. மேலும் முன்பதி செய்யப்படும் மொத்த ரயில் டிக்கெட்டுகளில் சுமார் 83% இந்த ஆன்லைன் முறை மூலம் முன்பதிவு செய்யப்படுகின்றன.
தற்போது ஐ.ஆர்.சி.டி.சி வலைத்தளத்தின் மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய அம்சங்கள் பற்றி பார்போம்:
ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் உள்ளே நுழைந்தவுடன் பயனாளர்கள் தங்களது, தனிப்பட்ட பகுதிக்கு சென்று, உணவு, அறைகள் மற்றும் ஹோட்டல்களை நேரடியாக டிக்கெட்டுகளுடன் சேர்த்து முன்பதிவு செய்ய வசதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் பயணிகளின் அளவில்லா தேவைகளுக்கு ஒரு தீர்வை வழங்கும்.
தேடல் நிலையங்களில் உள்ள தொந்தரவைக் குறைக்கவும், டிக்கெட் முன்பதிவில் நேரத்தை மிச்சப்படும்தவும் முன்கணிப்பு செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence )வசதி பயன்படுகிறது.
பயனர் தங்களது பணத்தைத் திரும்பப்பெறும் நிலையை எளிமையாகச் சரிபார்க்க கணக்குகள் பக்க வசதி செய்யப்பட்டுள்ளது.
வழக்கமான’ அல்லது ‘பிடித்த’ பயணங்கள் தொடர்புடைய விவரங்களை தானாகவே உள்ளிடுவதன் மூலம் எளிதாக முன்பதிவு செய்யலாம்.
பயணிகள் தங்களது தகவல்களை ஒரு பக்கத்தில் வைப்பதன் மூலம் பயன்படுத்தும் நேரத்தைக் குறைப்பதற்கும் முன்பதிவு அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் ரயில் தேடல் மற்றும் தேர்வு எளிமைப்படுத்தப்படுகிறது.
இதற்கு முன் ஒவ்வொரு ரயிலின் காலியாக உள்ள இருக்கை மற்றும் கட்டணங்களை அந்த ரயிலில் தனித்தனியாக கிளிக் செய்த பின்னரே காண முடியும். ஆனால் தற்போது ஒரு பக்கத்தில் உள்ள அனைத்து தகவல்களும் அனைத்து ரயில்களுக்கும் அனைத்து வகுப்பினருக்கான கட்டணங்களுடன் காட்டப்படும். இதன் மூலம் விரும்பிய ரயில் மற்றும் வகுப்பை ‘முன்பதிவு’ செய்துகொள்ளலாம்.
முன்பதிவு செய்யும்போது, கிடைக்கும் நிலையை (status) வழங்கவும், கிடைப்பதை ஏற்றுவதில் உண்டாகும் தாமதத்தைத் தவிர்க்கவும் பின்தளத்தில் ஒரு ‘கேச் சிஸ்டம்’ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு முன் ஒவ்வொரு காத்திருப்பு பட்டியல் நிலையையும் தனித்தனியாக சரிபார்க்க வேண்டியிருந்தது. ஆனால் தற்போது காத்திருப்பு பட்டியலில் இருந்தால், அதன் ‘உறுதிப்படுத்தல் நிகழ்தகவு’ காட்டப்படும். மேலும் பிற தேதிகளுக்கான பயணத்தின் தன்மையை இந்த பக்கத்திலேயே மாற்றலாம்.
குறைவான கணினி பழக்கம் உள்ள பயனர்களுக்கு முன்பதிவு எளிதாக்குவதற்கு முன்பதிவு செயல்பாட்டின் போது, வலைத்தளத்தைத் தேடுவதற்காக இணையதளத்தில் அலைந்து திரிவதில் அவரது நேரத்தை மிச்சப்படுத்தவும் வசதி செய்யப்பட்டுள்ளது.
பயண விவரங்கள் கட்டணப் பக்கத்திலும் காண்பிக்கப்படும். மேலும் அச்சுக்கலை பிழைகள் இருந்தால், அதனை சரிசெய்ய பயனர்கள் பிஆர்எஸ் மையத்தைப் பார்வையிடுவதன் மூலம் மட்டுமே சரிசெய்ய முடியும்.
பொருத்தமான கேப்ட்சாக்களைப் பயன்படுத்தி இணைய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கான உள்ளமைக்கப்பட்ட அம்சங்களைக் கொண்டுள்ளது.
RB, CRIS மற்றும் IRCTC இன் அதிகாரிகள் வலைத்தளத்தின் செயல்பாட்டை மேலும் மேம்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். ஐ.ஆர்.சி.டி.சி என்பது அரசுக்கு சொந்தமான பொது வரையறுக்கப்பட்ட நிறுவனமாகும். அதன் பங்குகள் மற்றும் பட்டியலிட்டுள்ள அரசு, இந்த மாத தொடக்கத்தில் ஐ.ஆர்.சி.டி.சி பங்குகளுக்கு அரசாங்கம் ஒரு OFS ஐ அறிமுகப்படுத்திடுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.