irctc tatkal booking : இன்று காலை முதல் தட்கல் டிக்கெட் முன்பதிவின் போது IRCTC இணையத்தளம் முடங்கியதாக பயணிகள் புகார் தெரிவித்துள்ளனர். மேலும், இணையத்தளம் மற்றும் மொபைல் செயலி(Mobile App) இரண்டிலும் ஐஆர்சிடிசி இணையதளத்தின் சேவையை பயன்படுத்த இயலவில்லை என்றும் பயணிகள் தெரிவித்துள்ளனர்.
தட்கல் டிக்கெட் முன்பதிவு என்பது நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்காக மக்களால் பயன்படுத்தப்படும் சேவையாகும். IRCTC இணையதளம் மூலம் பயணிகள் விரைவாகவும், சுலபமாகவும் ஆன்லைனில் ரயில்டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருகின்றனர். ஒரே நேரத்தில் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் IRCTC இணையதளம் என்பதால் அதன் சேவையை சிறப்பாக மக்களுக்கு கொண்டு போய் சேர்க்க இந்தியன் ரயில்வே நிர்வாகம் பல முயற்சிகளை அறிமுகப்படுத்தி அதில் வெற்றியும் கண்டுள்ளது.
டிக்கெட் முன்பதிவு தொடங்கி, உணவு டெலிவரி வசதி, ஓலா புக்கிங் என IRCTC இணயதளத்த்கில் பயணிகளுக்கு ஏகப்பட்ட வசதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், இன்றைய தினம் காலை 11மணி முதல் IRCTC இணையதள சேவை முடங்கியது பொதுமக்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியது.
இந்நிலையில், பராமரிப்பு பணி காரணமாக IRCTC சேவைகளை பயன்படுத்த முடியாது என்று IRCTC இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பலர் ஒரே நேரத்தில் பயன்படுத்தியதால் தான் IRCTC கணினிகளில் சர்வர் முடங்கியதாக தெரிகின்றது.
/tamil-ie/media/media_files/uploads/2019/05/DSC02610-300x169.jpg)
முதல் வகுப்பு மற்றும் எசி முன்பதிவில் போது 10:00 மணி முதல் 10:26 வரையும். பின் படுக்கை (Sleeper) வகுப்பின் முன்பதிவு 11:00 மணிக்கு துவங்கிய போதும் 30 நிமிடங்களுக்கு மேல் நீடித்த இந்த பிரச்சனை, காலை 11:35 மணிக்கு பிறகு சரியாகியது. சமூக வலைத்தளங்களில் பல IRCTC பயனாளர்கள் இதுகுறித்து இந்திய ரயில்வே துறையிடம் புகார் அளித்தனர்.
சுமார் 5 ஆண்டுகளுக்கு முன் தான் பலரும் ஒரே நேரத்தில் டிக்கெட் பதிவு செய்யும் பொழுது தினமும் IRCTC சர்வர்காலால் இது போன்ற கணினி பிரச்சனைகள் வந்தன. தற்போது மீண்டும் இது போன்ற கணினி சர்வர் வர தொடங்கியுள்ளது.