IRCTC Tatkal Booking : தினமும் அயிரக்கணக்கானோர் ரயில் டிக்கெட் புக் செய்கின்றனர். அதிலும் சொந்த அவசரமாக செல்ல வேண்டும் என்றால் தட்கல் மட்டுமே அனைவருக்கும் உடனே தோன்றும் யோசனை.
ஆனால் இந்த தட்கல் டிக்கெட் பதிவு செய்வதற்குள் ஒருவரின் பொறுமையும் போய்விடும், டிக்கெட்டுகளும் தீர்ந்துவிடும். தினமும் 10 மணி வந்தால் போல் இந்தியாவின் ஒவ்வொரு இடத்திலும் யாரோ ஒருவர் தட்கல் டிக்கெட் புக் செய்வதற்கு காத்திருப்பார்கள்.
IRCTC Tatkal Booking : தட்கல் டிக்கெட் புக் செய்வது எப்படி
அதிலும், ஒரு சிலர் ஏதோ போருக்கு தயாராவது போல தட்கல் புக்கிங்கிற்கு தயாராவார்கள். உண்மை தான்... போர் கூட உன் கைவசம் வந்து விடலாம் ஆனால் தட்கல்? இதற்காக தான் இந்த தொகுப்பு. வெறும் 5 முக்கிய விஷயங்களை கடைப்பிடித்தால் போதும், டட்கல் டிக்கெட் கிடைப்பது சுலபம்.
1. பயணப் பட்டியலை தயாராக வைத்துக்கொள்ளுங்கள்
சில நொடிகளிலேயே தட்கல் டிக்கேட் தீர்ந்துவிடும் நிலை இருப்பதால், நேரம் மிகவும் அவசியமான ஒன்று. அந்த நேரத்தில் ஒவ்வொரு விவரமாக தேடி எடுத்துக் கொண்டிருந்தால், காரியம் அனைத்தும் கெட்டுவிடும். எனவே, ஐஆர்சிடிசி இணையத்தளத்திற்குள் சென்று, உங்களின் கணக்கில் தேவையான விவரங்கள் பயணம் மேற்கொள்பவர்கள் விவரம் அனைத்தையும் பதிவிட்டு தயாராக வைத்துக் கொள்ளவும். தட்கல் பயணத்திற்கு தனியாக ஒரு பட்டியலை தயார் செய்யவும். இந்த பட்டியல் அவசரமாக டிக்கெட் பதிவு செய்யும்போது உதவும்.
2. உங்கள் இலக்கு ரயில் நிலையத்தின் பதிவு எண் முன்னதாக குறித்து வைக்கவும்
பலரும் இதில் தான் தவறு செய்கின்றார்கள். உங்கள் ஊரில் இருந்து வேறு ஒரு ஊருக்கு செல்லும்போது அந்த இடத்தின் ரயில் நிலையம் பதிவு எண் தெரிந்து வைத்திருப்பது சாத்தியமில்லை. டிக்கெட் புக் செய்யும்போது அதனை இணையத்தில் தேடும்போது நேரம் கடந்துவிடுகிறது. எனவே முன்னதாகவே நீங்கள் சென்றடையும் இலக்கிற்கான நிலையத்தின் எண் குறித்து வைப்பது அவசியம்.
3. பயணிகளின் விவரங்கள் தயார்
கம்பியூட்டரில் எங்காவது ஒரு இடத்தில் பயணம் மேற்கொள்பவர்களின் பெயர், வயது, விவரம் என அனைத்தையும் தயாராக வைத்திருக்கவும். ஐஆர்சிடிசி இணையத்திற்குள் லாக்-இன் செய்ததும், வேகமாக இந்த விவரங்களை காபி பேஸ்ட் செய்யலாம். இதன் மூலம் நேரம் வீனாகாமல் இருக்கும்.
4. எந்த பெர்த் வேண்டும் என்பதை முன்பே முடிவெடுங்கள்
நீங்கள் பயணிக்கும்போது எந்த பெர்த் இருந்தால் உங்களுக்கு வசதி என்பதை முன்பே முடிவு செய்துக் கொள்ளவும். லாக்-இன் செய்த பிறகு யோசித்துக் கொண்டிருந்தால், டிக்கெட்டும் கிடைக்காது பெர்த்தும் கிடைக்காது.
5. கட்டணம் செலுத்தும் வங்கி விவரங்கள் தயாராக இருக்க வேண்டும்
எல்லா விவரமும் பதிவிட்ட பிறகு உங்கள் வங்கி கார்டு தயாராக இருக்க வேண்டும். எனெனில் பணம் கட்டும்போது ஓடிபி போன்ற விவரங்கள் தேவைப்படும். எனவே கார்டு, செல்போன் ஆகியவற்றை அருகிலேயே வைத்துக் கொண்டு டிக்கெட் புக் செய்ய உட்காரவும்.
Read More: IRCTC: ரயிலில் ‘போஸ்ட் பெய்டு’ டிக்கெட் புக்கிங் தெரியுமா? உங்களுக்கான டாப் 5 வசதிகள் இங்கே...
இந்த 5 எளிய முறைகளை பின்பற்றினால் நிச்சயம் தட்கல் டிக்கெட் எளிமையாக பெறலாம்.
IRCTC E-Ticket Print: ரொம்ப சுலபம்தான்... பி.என்.ஆர். நம்பரை வைத்து இ-டிக்கெட் டவுன்லோடு செய்யத் தெரியுமா?