ஐஆர்சிடிசி டிக்கெட் புக்கிங்.. பயணிகளின் டிக்கெட் விலை உயர்கிறதா?

IRCTC Online Ticket Booking Charges : இதற்கு முன்பு இருந்த சேவைக்கட்டணமும் கடந்த 2016 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது

IRCTC Online Ticket Booking Charges : இதற்கு முன்பு இருந்த சேவைக்கட்டணமும் கடந்த 2016 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
irctc ticket booking cost

irctc ticket booking cost

IRCTC Ticket Booking: ஐஆர்சிடிசி இணையதளத்தில் பயணிகள் வசதிக்காக பல்வேறு சிறப்பம்சங்கள் செயல்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு ஐஆர்சிடிசி தளத்தில் மட்டும் லட்சக்கணக்காணோர் டிக்கெட்டுகளை புக் செய்து வருகின்றன. மிகவும் சுலபமாக இதன் நடைமுறை உள்ளதால் மக்களால் எளிதில் இதனை பயன்படுத்த முடிகிறது.

Advertisment

ஐ.ஆர்.சி.டி.சி. தற்போது, ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் வசதிகளையும் எளிமையாகவும் சிறப்பாகவும் மேம்படுத்தியுள்ளது. பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் புதுப்புது சேவைகளை புகுத்தி வரும் நிலையில், இதுவரை ஐஆர்சிடிசி யில் ஆன்லைனில் டிக்கெட் புக்கிங் சேவைக்கு எந்தவித கட்டணமும் வசூலிக்கப்படவில்லை.

இதற்கு முன்பு இருந்த சேவைக்கட்டணமும் கடந்த 2016 ஆம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. அதன் பின்பு தான் ஐஆர்சிடிசி தளம் புதுபிக்கப்பட்டு மக்களால் அதிகம் விரும்பப்படும் இணையதள சேவையாக உயர்ந்தது.

இதில் வெறும் டிக்கெட் புக்கிங் வச்தி மட்டுமில்லை உணவில் தொடங்கி கால்டாக்சி, ஆட்டோ, இருக்கைகள் வசதி என ஏகப்பட்ட சிறப்பம்சங்கள் உள்ளன. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள தகவலின் படி, ஐஆர்சிடிசி யில் ஏசி நான் ஏசி டிக்கெட் புக்கிங்கில் டிக்கெட் விலை உயர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment
Advertisements

ரயிலில் ஏறிய பின்பும் டிக்கெட் கேன்சல் செய்யலாம்..அதுவும் கட்டணமில்லாமல்! ஐஆர்சிடிசியில் வசதி

ஏசி மற்றும் நான் ஏசி டிக்கெட்டுகளை செய்யும் போது கட்டணமாக ரூ. 15 மற்றும் ரூ. 30 வசூலிக்க இருப்பதாகவும், ஆன்லைன் பேமண்ட் வசதியை பொருத்து பயணிகளிடம் இருந்து ரூ. 10 மற்றும் ரூ,20 வசூலிக்க திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Irctc

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: