IRCTC Ticket Booking Discounts : ஏழைகளின் விமானம் என்று அழைக்கப்படும் ரயில் தான் இன்று இந்தியாவில் வாழும் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் வண்டியாகும். முன்பெல்லாம் ரயில் டிக்கெட் புக் செய்வது தொடங்கி, டி.டி.ஆர் வரை அனைத்தும் சிக்கல் தான். ஆனால் ஐ.ஆர்.சி.டி.சி இணையமும், செயலியும் வந்த பின்பு ரயில்வே துறையில் ஏராளமான மாற்றங்களும், ரயில் பயணிப்பவர்கள் நிறைய நிம்மதியையும் அடைந்துள்ளனர்.

பே.டி.எம். மற்றும் மொபிவிக் போன்ற செயலிகள் மூலமாக டிக்கெட்டுகள் புக் செய்தால் நம்மால் சலுகை கட்டணத்தில் டிக்கெட்டுகளை பெற முடியும். மாத பட்ஜெட்டில் குடும்பம் நடத்தும் குடும்பத்தினருக்கும், அடிக்கடி ரயில் பயணங்கள் மேற்கொள்பவர்களுக்கும், வெகு தூரம் ட்ரெயினில் பயணிக்க விரும்பும் அனைவருக்கும் இந்த செயலிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
IRCTC Ticket Booking Discounts - மொபிக்விக்
மொபிக்விக் ப்ளாட்பார்மில் இருந்து டிக்கெட்டுகளை புக் செய்தால் உங்களால் சுமார் 30% வரை சலுகை பெற இயலும்.
சலுகையாக திரும்பப் பெறப்பட்ட கட்டணம் நேரடியாக மொபிக்விக் சூப்பர் கேஷ் என்று வாடிக்கையாளர்களின் அக்கௌண்டில் சேர்த்து வைக்கப்படும்.
மேக்ஸிமம் கேஷ் பேக் என்பது 100 ரூபாய் ஆகும்.
சலுகையில் சேமிக்கப்பட்ட கட்டணத்தை மாதத்திற்கு ஒரு முறை வாடிக்கையாளர்கள் பயன்படுத்தி புதிய டிக்கெட்டுகளை முன் பதிவு செய்து கொள்ளலாம்.
பே.டி.எம்
பே.டி.எம்மில் ட்ரெய்ன் டிக்கெட்டுகள் புக் செய்தால், உங்களின் திரைப்பட டிக்கெட்டுகளுக்கான விலை குறைக்கப்படும்.
பே.டி.எம் மூலமாக புக் செய்யப்படும் டிக்கெட்டுகளுக்கு டி.ஆர். 100 (TR100) என்ற ப்ரோமோ கோடினை பயன்படுத்தி நீங்கள் இந்த சலுகையினை பெறலாம்.
டிக்கெட் புக் செய்த பின்பு 24 மணி நேரம் கழித்து உங்களின் அக்கௌண்டில் கேஷ் பேக் செய்யப்படும்.
இரண்டு திரைப்பட டிக்கெட்டுகள் புக் செய்யும் போது நீங்கள் இந்த பணத்தை பயன்படுத்திக் கொள்ளலாம்.
எஸ்.பி.ஐ கார்ட்
எஸ்.பி.ஐ ப்ளாட்டினம் கார்ட் மூலமாக ஒவ்வொரு முறையில் ஏ.சி.கோச்சில் டிக்கெட் புக் செய்யும் போது 10% கேஷ்பேக் பெறலாம். ஜீரோ பேமெண்ட் கேட்வே சார்ஜ், 1% ஃபூயல் சர்சார்ஜ், போனஸ் ரிவார்ட் பாய்ண்ட்ஸ் போன்ற சலுகைகளும் எஸ்.பி.ஐ. கார்டுகள் பயன்படுத்தும் போது மக்கள் பெற்றுக் கொள்ளலாம்.
மேலும் படிக்க : டிக்கெட் புக்கிங் மட்டுமில்லீங்கோ… ஜியோ ரயில் ஆப்-ல் இத்தனை வசதிகளா?
