IRCTC Ticket Booking for 12 People from a Single User ID : இந்திய ரயில்களில் பயணம் செய்யும் பயணிகளின் பயணம் மற்றும் அனுபவம் சிறப்பாக அமைவதற்கு தன்னால் இயன்ற அளவிலான மாற்றங்களை எப்போதும் செய்து கொண்டே உள்ளது ஐ.ஆர்.சி.டி.சி. தற்போது, ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் வசதிகளையும் எளிமையாகவும் சிறப்பாகவும் மேம்படுத்தியுள்ளது இந்திய ரயில்வே.
பயணி ஒருவர் மாதம் ஒன்றிற்கு ஒரு ஐ.டியில் இருந்து 6 முறை டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் தற்போது அந்த எண்ணிக்கையை மாற்றி பயனாளர் ஒரு ஐ.டி.யில் இருந்து 12 முறை டிக்கெட் புக் செய்து கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறது.
உங்கள் ஆதார் கார்ட் எண்ணை, ஐ.ஆர்.சி.டி.சியுடன் இணைத்துக் கொண்டால், நீங்கள் ஒரு மாதத்திற்கு 12 டிக்கெட்கள் புக் செய்து கொள்ளலாம்.
மேலும் படிக்க : 6 நாட்கள் கேரளாவை சுற்றிப் பார்க்கலாம்… போட் ஹவுஸிலும் தங்கலாம்
IRCTC Ticket Booking : ஐ.ஆர்.சி.டி.சியுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி ?
ஐ.ஆர்.சி.டி.சியில் இருக்கும் மை ப்ரொபைலை க்ளிக் செய்தால் ஆதார் கேஒய்சி ஆப்சன் இருக்கும்.
அதில் உங்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும்.
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் உங்களின் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் அனுப்பப்படும்.
அதனை அப்டேட் செய்தால் உங்களின் ஆதார் எண் ஐ.ஆர்.சி.டி.சியுடன் இணைக்கப்பட்டுவிடும்.
மாஸ்டர் லிஸ்ட் படி, உங்களுடன் பயணிக்க இருப்பவரின் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும். இந்த இரண்டையும் இணைக்கும் பட்சத்தில் நீங்கள் மாதம் ஒன்றிற்கு 12 டிக்கெட்கள் புக் செய்து கொள்ளலாம்.
பயணிகளின் விபரங்களை பூர்த்தி செய்ய 25 நொடிகள் தான் தரப்படுகிறது. அதே போல், கேப்ச்சா கோடினை பதிவு செய்யவும் 5 நொடிகள் தான் தரப்பட்டுள்ளது.
தக்கல் முறையில் டிக்கெட் புக் செய்பவர்கள் கவனத்திற்கு
ஏ.சி. கோச்சில் புக் செய்பவர்கள் காலை 10 மணியில் இருந்து புக் செய்யலாம்
ஸ்லீப்பர் க்ளாசில் புக் செய்ய விரும்புபவர்கள் 11 மணியில் இருந்து புக் செய்யலாம்.
ட்ராவல் ஏஜென்சியில் இருப்பவர்கள் டிக்கெட் புக் செய்ய 08:00 -08:30 வரையும், 10:00 -10:30 வரையும், 11:00 - 11:30 மணி வரையும் நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.