இனி ரயில் பயணமும் ஜாலி தான்.. ஜியோ ஆப்பில் டிக்கெட் புக்கிங் வசதியும் வந்தாச்சி!

Reliance Jio Introduced Great Features for Rail Passengers: ஜியோ வாடிக்கையாளர்கள் மட்டுமில்லை ரயில் பயணிகளும் மகிழ்ச்சி

JioRail App : ரயில்வேயில் டிக்கெட் புக் செய்ய இனிமேல் சிரமப்பட வேண்டிய அவசியமே இல்லை. ஜியோ நிறுவனம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஜியோ ரயில் என்ற புதிய செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் ஜியோவின் அறிமுகத்திற்கு பின்பு நிகழ்ந்த மாற்றங்கள் ஏராளம். டெலிகாம் சேவை தொடங்கி ஜியோ டிவி, என ஏகப்பட்ட வசதிகளை வாடிக்கையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி வருகிறது ஜியோ நிறுவனம். அந்த வகையில் இனி ஜியோ பயனாளிகள் தங்களின் ஜியோ போன் மூலமாகவே ரயில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம்.

இதற்காக `ஜியோ ரயில்’ (Jio Rail) என்னும் செயலியை அறிமுகம் செய்துள்ளது அந்த நிறுவனம். இது, ரயில்வே துறையின் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் இயங்கும். இந்தியாவின் தரைவழி போக்குவரத்து ரயில் பயணமான ரயில்வே டிக்கெட் புக்கிங்கை ஜியோ போன், ஜியோ போன் 2 போன் மூலம் டிக்கெட் முன்பதிவு, பிஎன்ஆர் விபரங்களை பெற ஜியோ நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது.

Reliance Jio Launched JioRail App for Railway Ticket Booking: ஜியோ ரயில் ஆப்!

ஜியோ ஸ்டோரில் இந்த ஆப்பை டவுண்லோடு செய்துக் கொள்ளலாம். இந்த ஆப் மூலம் ரயில் பயண அட்டவனை, பி.என்.ஆர்., நிலவரம், டிக்கெட் பதிவு செய்த வரலாறு, முன்பதிவு செய்த டிக்கெட் ரத்து செய்வது, தட்கல் முன்பதிவு செய்ய ஜியோ ரயில் ஆப் பயன்படுகிறது

ஐஆர்சிடிசி (IRCTC) பயனர்கள், ஐஆர்சிடிசி தளத்தினுள் செல்லாமல் ஜியோ ரயில் ஆப் மூலம் தங்கள் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகள், இ-வாலெட்டுகளை பயன்படுத்தி ரயிலில் இருக்கை முன்பதிவு செய்யலாம். ஐஆர்சிடிசி பயனர்களாக பதிவு செய்திடாதவர்களுக்கு ஜியோ ஆப் ஐஆர்சிடிசி தளத்திற்கு வழிகாட்டும்.

இதுத் தொடர்பாக ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ”ஜியோ ரயில் ஆப் ரயில் வேயின் ஐ.ஆர்.சி.டி.சி மூலம் இயங்குகிறது. வரும் காலத்தில், ரயிலில் பயணம் செய்யும்போதே உணவு ஆர்டர் செய்வதுபோன்ற பல்வேறு திட்டங்களை இந்த ஆப் மூலம் அறிமுகம் செய்ய உள்ளோம்” என்று கூறியுள்ளது.

ஜியோ நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஜியோ வாடிக்கையாளர்களை மட்டுமில்லை ரயில் பயணிகளையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest India news in Tamil.

×Close
×Close