IRCTC Ticket Booking : வெளியூர் செல்ல ரயில் டிக்கெட் பதிவு செய்ய வேண்டும் என்பவர்கள் ஐஆர்சிடிசி தளத்தில் மிகவும் எளிதில் புக் செய்துக் கொள்ளலாம். இந்த இணையத்தளத்தில், ஒவ்வொரு ரயில்கள் குறித்த விவரங்களும் இடம்பெற்றிருக்கும்.
எந்த ஊருக்கு செல்ல வேண்டும் என்றாலும், பயணிகளுக்கு ஈஸியாக டிக்கெட் புக் செய்ய இந்தியன் ரயில்வேத்துறை முறைப்படுத்தியிருக்கும் வசதி தான் ஐஆர்சிடிசி இணையத்தளம். இந்த தளத்தில் அக்கவுண்டு வைத்திருக்கும் யாராக இருந்தாலும், கம்ப்யூட்டர் அல்லது செல்போனிலேயே சில நொடிகளில் டிக்கெட் புக் செய்துக் கொள்ளலாம். அதிலும் அவசரமாக டிக்கெட் புக் செய்ய வேண்டும் என்பவர்களுக்கும் தட்கல் என்ற ஒரு வசதியை இந்தியன் ரயில்வேத்துறை வைத்திருக்கிறது.
ஒவ்வொரு ஊர்களுக்கு செல்லும் தொலைவை பொறுத்து கட்டண வசதிகள் பெறப்படுகிறது. நீங்கள் மேற்கொள்ளும் பயணத்தில் இருந்து 24 மணி நேரம் முன்னதாக மட்டுமே தட்கல் டிக்கெட் பெற முடியும். அதுவும் ஏசி பெட்டிகளுக்கு 10 மணிக்கும், சாதாரண பெட்டிகளுக்கு காலை 11 மணிக்கும் பதிவு செய்ய முடியும்.
IRCTC Ticket Booking : ரயில் டிக்கெட் புக் செய்வது எப்படி
ஐஆர்சிடிசி தளத்தில் டிக்கெட் பெறுவது எப்படி எனத் தெரியாதவர்களா நீங்கள்? இதற்காகவே ஏஜெண்டுகளிடம் சென்று கூடுதல் கட்டணம் செலுத்துகிறீர்களா? உங்களுக்காக தான் இந்த 5 ஈஸி டிப்ஸ். 5 முறைகளில் ரயில் டிக்கெட் புக் செய்யலாம்.
- மாஸ்டர் சார்டு/ விசா கார்டு / அமெக்ஸ் கார்டு வைத்திருந்தால் பணம் செலுத்தலாம்.
- இண்டர் நேஷனல் கார்டுகளில் எதுவாக இருந்தாலும் பணம் செலுத்த முடியும்... கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் என இரண்டு கார்டுகளிலுமே கட்டணம் செலுத்தலாம். ஆனால் இந்த ஆப்ஷன் இரண்டு நாட்களுக்கு முன்னதாக புக் செய்ய மட்டுமே உபயோகிக்க முடியும்.
- எஸ்.பி.ஐ, பிஎன்பி, இந்தியன் வங்கி, ஐசிஐசிஐ, எச்.டி.எஃப்.சி ஆகிய பிரபல வங்கிகளில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் நெட் பேங்கிங் மூலம் கூட இணையத்தில் டிக்கெட் புக் செய்யலாம்.
- இந்த கார்டு அந்த கார்டு என்று எந்த விதிமுறையும் இல்லை. எந்த கார்டு வைத்திருந்தாலும் டிக்கெட் புக் செய்யலாம்.
- UPI/BHIM மூலமாகவும் பணம் செலுத்தலாம்.
IRCTC: ப்ரீமியம் தட்கல் டிக்கெட் வாங்க நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியது இது தான்