9 நாட்கள் ஜில்லுன்னு சிம்லா, மணாலி சுற்றி பார்க்கலாம் வாங்க! வெறும் 30 ஆயிரம் போதும்.

அனைத்து ஏற்பாடுகளையும் ஐஆர்சிடி பார்த்துக் கொள்ளும். 

IRCTC Tourism : அனலை கிளப்பும் இந்த கோடை வெயிலில் இருந்து தப்பித்து உங்களை 9 நாட்கள் குளு குளுவென வைத்திருப்பதே இந்த மிகச் சிறந்த திட்டம்.

ஐஆர்சிடிசி சுற்றுலாத் துறை சார்பில் 9 நாட்கள் சிம்லா மற்றும் மணாலி சுற்றுலாவிற்கு ரூ.29,710 கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தச் சுற்றுலாவில் சிம்லாவில் இருக்கு மிகவும் பிரபலமான இடங்கள், சுற்றுலா துறைக்கு சொந்தமான இடங்கள் ஆகியவற்றை சுற்றி பார்க்கலாம். 8 இரவுகள் 9 பகல் நீங்கள் சிம்லா மற்றும் மணாலியை ரசிக்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் IRCTC Tourism இணையதளத்திற்கு சென்று முன்பதிவு செய்துக் கொள்ளுங்கள். இந்த டூரில் பயண வசதி, உணவு வசதி, தங்கும் வசதி அனைத்தும் உங்களுக்கு ஏற்பாடு செய்து தருவதை ஐஆர்சிடிசி பார்த்துக் கொள்ளும்.

வரும் 11 ஆம் தேதி புனேவில் இருந்து புறப்படும் ரயிலில் உங்களது 9 நாட்கள் சுற்றுலாப்பயணம் தொடங்கும். மற்ற விவரங்கள் இதோ..

ஏசி வசதியுடன் கூடிய ஹோட்டல், படுகை  வசதி, ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க கார் வசதி,  3 வேளையும் உணவுக்கு ஏற்பாடு என அனைத்தும் இந்த டூர் பேக்ட்ஜில் அடங்கும். நீங்கள் வெறும் ரூ.29,710  கட்டி முன்பதிவு செய்தால் போது மற்ற அனைத்து ஏற்பாடுகளையும் ஐஆர்சிடி பார்த்துக் கொள்ளும்.

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close