IRCTC Tourism vaishno devi trip : வைஷ்ணவி தேவி கோவிலுக்கு ஆன்மீக சுற்றுலா செல்ல விரும்புவோர்க்கு புதிய திட்டம் அறிமுகம் செய்துள்ளது இந்தியன் ரயில்வே.
ஜம்மு காஷ்மீரில் கத்ரா பகுதியில் உள்ளவைஷ்ணவி தேவி கோவிலுக்கு 4 அல்லது 3 நாட்கள் ஆன்மீக சுற்றுலா செல்ல ஐ.ஆர்.சி.டி.சி சார்பில் புதிய பேக்கேஜ் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
IRCTC E-Ticket Booking: உங்கள் செல்போனில் இந்த செயலி இருந்தால் போதும்... ஈஸியாக டிக்கெட் வாங்கலாம்
IRCTC Tourism vaishno devi trip : வைஷ்ணவி தேவி டூர் பேக்கேஜ்
இந்த பயணத்திற்காக சாதாரண டிக்கெட் அல்லது டீலெக்ஸ் டிக்கெட்டுகளை பயணிகள் தேர்வு செய்துக் கொள்ளலாம். இதனை ஐ.ஆர்.சி.டி.சி இணையத்திலோ அல்லது மையங்களிலோ புக் செய்யலாம்.
பேக்கேஷ் விவரங்கள்:
- சாதாரண டிக்கெட் மற்றும் டீலெக்ஸ் டிக்கெட் வசதி உள்ளது.
- இந்த பயணத்தில் காலை உணவு மற்றும் தங்கும் இடங்கள் அனைத்து அளிக்கப்படும்.
- பேங்கங்காவில் பிக் அப் செய்யப்பட்டு அங்கேயே டிராப் செய்யப்படும்.
- சாதாரண பேக்கேஜ்ஜில் 2 நாள் இரவு ரயில் பயணம், ஒரு நாள் விருந்தினர் அறையில் தங்கி கோவில் வழிபாடுக்கு என ஒதுக்கப்பட்டுள்ளது.
- டீலெக்ஸ் பேக்கேஜ்ஜில், காலை உணவு அளிக்கப்பட்டு, டீலெக்ஸ் அறையில் தங்க வைக்கப்படுவீர்கள். இதுவும் 2 இரவுகள் ரயில் பயணமாகவும், ஒரு நாள் விருந்தினர் அறையில் தங்கி கோவிலை சுற்றிப் பார்க்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.
- இரண்டு பேர் படுக்கும் கட்டில் கொண்ட அறை இரண்டு வகை டிக்கெட் பயணிகளுக்கு வழங்கப்படும்.
விதிமுறைகள்
- பயணிகளின் அடையாள அட்டை மற்றும் தேவைப்படும் ஆதாரங்களை கையில் வைத்திருக்க வேண்டும். ஆதார், வாக்காளர் அட்டை, ஓட்டுனர் அட்டை போன்றவற்றை எடுத்துச் செல்லலாம். மாணவர்கள் தங்களின் ஐடி கார்டு எடுத்துச் செல்லலாம்.
- ஜம்மு காஷ்மீர் விதிமுறைப்படி, வீட்டு விலாசம் இல்லாத ஆதார அட்டையை எடுத்துச் செல்ல அனுமதியில்லை.
- மதியம் 12 மணிக்கு அறைகளின் வசதி தரப்படும். தவிர்க்க முடியாத நிலை ஏற்பட்டால் மட்டுமே தாமதமாக அறையை விட்டு கிளம்ப அனுமதி வழங்கப்படும்.
- ரயில்களிலும் சீட்டுகள் உங்கள் விருப்பம்போல் கிடைக்க வாய்ப்பிருக்காது. தனித் தனியே தான் கிடைக்கும்.
- பயணிகள் அனைவரும், போஸ்டு பெயிட் வசதி கொண்ட செல்போன்களை எடுத்துச் செல்லவும். ஜம்மு காஷ்மீரில், ப்ரீ பெயிட் போன்கள் வேலை செய்யாது.
மேலும் படிக்க : IRCTC Agra Tour : ஆக்ரா போகலாம் வாங்க... 2550 ரூபாய் இருந்தால் போதும்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.