IRCTC's New PNR Linking Rule : இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கார்ப்பரேஷன் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி, பயணிகளுக்கு உதவுவதற்காக தொடர்ச்சியாக பல சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.
Advertisment
அவற்றில் ஒன்று, பயணிகள் இணைப்பு ரயில்களில் பயணிக்கும் போது பிஎன்ஆர் எண்ணை அந்த ரயில்களில் இணைப்பது. சில நேரங்களில் ஒரு நிலையத்திலிருந்து மற்றொரு நிலையத்திற்கு நேரடி ரயில்கள் இல்லை என்றால், பயணிகள் இணைப்பு டிக்கெட்டை முன்பதிவு செய்வார்கள். ஐ.ஆர்.சி.டி.சியின் இந்த புதிய பி.என்.ஆர் இணைக்கும் சேவை அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஒரு பயணியின் முதல் ரயில் தாமதமாகினால், அதனை இணைக்கும் ரயிலை தவற விட்டு விடுவார்கள். ஆனால், டிக்கெட் முன்பதிவு செய்யும் போது இரு ரயில்களின் பி.என்.ஆர் எண்களை அந்த பயணி இணைத்திருந்தால், அவர் தவறவிட்ட இரண்டாவது ரயிலுக்கான பணத்தைத் திரும்பப் பெற முடியும்.
Advertisment
Advertisements
பி.என்.ஆர் எண்களை எப்படி இணைப்பது?
ஐஆர்சிடிசி தளத்தில் ‘ட்ரெயின்ஸ்’ என்பதற்குக் கீழ், ‘கனெக்டிங் ஜர்னி புக்கிங்’ என்று கொடுக்கப்பட்டிருக்கும்.
ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் ரயில்களைச் சரிபார்த்து, உங்கள் சேருமிடத்தை அடைய பொருத்தமான ரயில்களைக் கண்டறியவும்.
ரயில் பட்டியலில் விரும்பிய ரயில்கள், இருக்கைகள் இருக்கிறதா என்று பார்க்கவும்.
இரண்டு பி.என்.ஆர்களை இணைக்க, ஒரே பயனர் ஐ.டி-யில் அந்த இரண்டு டிக்கெட்டுகளும் புக் செய்திருக்க வேண்டும்.
"முன்பதிவு" பட்டனை கிளிக் செய்து இணைக்கும் பிஎன்ஆர் எண்ணை உள்ளிடவும்.
இணைக்கப்பட்ட பி.என்.ஆர் எண்களை ஐ.ஆர்.சி.டி.சி சரிபார்க்கும். இதற்குப் பிறகு, பயணிகளின் விவரங்கள் தானாகவே அப்டேட் ஆகும்.
இணைக்கும் பயணத்தை சரிபார்க்க ஐ.ஆர்.சி.டி.சி பயணிகளின் மொபைல் எண்ணுக்கு ஒரு ஓ.டி.பி அனுப்பும்.
முதல் மற்றும் இரண்டாவது ரயிலுக்கு இடையிலான நேர இடைவெளி ஐந்து நாட்களுக்கு மேல் இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
உறுதிப்படுத்தப்பட்ட அல்லது ஓரளவு உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டுகளை மட்டுமே பிஎன்ஆரில் இணைக்க முடியும். இரண்டு டிக்கெட்டுகளில் ஏதேனும் ஒன்று ரத்து செய்யப்பட்டால், பி.என்.ஆர்-கள் தானாக பிரிந்துவிடும். இரண்டு டிக்கெட்டுகளிலும் பயணிகளின் விபரங்கள் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும். பி.என்.ஆர்-கள் இணைக்கப்பட்டவுடன் மாற்றங்களைச் செய்ய முடியாது.