தீபாவளிக்கு சொந்த ஊர் போறீங்களா? அதுவும் ரயிலில்.. இதை பண்ணுங்கள் உங்களுக்கு டிக்கெட் கன்ஃபார்ம்

ஏ.சி இல்லாத வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கு முன்பதிவு தொடங்கும்.

By: October 24, 2019, 12:55:54 PM

irctc train ticket booking charges : தீபாவளி நெருங்கி விட்டது. தொடர் 3 நாட்கள் விடுமுறை என்பதால் சொந்த ஊர்களுக்கு செல்ல அனைவரும் தயார் ஆகி இருப்பீர்கள். பெரும்பாலும் நீண்ட நேர பயண்ம் என்றால் பலரும் ரயில் பயணத்தை தான் தேர்வு செய்வார்கள்.

நேரம், சோர்வு, பயண தூரம் தெரியாமல் நிம்மதியாக பயணிக்க ரயில் பயணம் மிகச் சிறந்த தேர்வாகும். தீபாவளிக்கு ஊருக்கு செல்ல் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்ய காத்திருப்பவர்கள், அல்லது டிக்கெட் கன்ஃபார்ம் ஆவதற்கு வெயி செய்துக் கொண்டிருப்பவர்களுக்கு தான் இந்த பதிவு. இந்த அவசியமான பதிவை முடிந்தவரை மற்றவர்களுக்கும் பகிருங்கள்.

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் என்று அழைக்கப்படும் ஐ.ஆர்.சி.டி.சி இணையதளத்தில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும். அதேபோல “ரயில் கனெக்ட் ஆப்’ என்ற ஐ.ஆர்.சி.டி.சி. அதிகாரப்பூர்வ ஆப் மூலமும் ரயில்வே டிக்கெட் மற்றும் தட்கல் டிக்கெட்டை முன்பதிவு செய்யும் முறை உள்ளது.

பயணத்திற்கு ஒருநாளுக்கு முன் தட்கல் டிக்கெட் புக் செய்யலாம். ஏ.சி வகுப்புகளுக்கு காலை 10 மணிக்கு முதல் தட்கல் முன்பதிவு ஆரம்பிக்கும். ஏ.சி இல்லாத வகுப்புகளுக்கு காலை 11 மணிக்கு முன்பதிவு தொடங்கும்.

irctc train ticket booking charges: தட்கல் புக்கிங், டிக்கெட் செலவு, முழு விபரம்!

1. குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்லும் ரயில்கள் ஏதும் இல்லை என்றால், ’Flexible with Date’ என்பதை க்ளிக் செய்தால் எந்த தேதியில் ரயில்கள் உள்ளது எனத் தகவல் கிடைக்கும்.

2. இப்போது பயண நேரம், புறப்படும் நேரம், போய்ச்சேரும் நேரம் போன்ற தகவல்களுடன் ரயில்களின் பட்டியல் திரையில் வரும்.

3. ரயில் பட்டியலுக்கு மேல் உள்ள கோட்டா (Quota) என்பதில் தட்கல் என்பதைத் தேர்வு செய்ய வேண்டும்.

4. இருக்கை விபரம் மற்றும் கட்டணத்தைத் தெரிந்துக் கொள்ள ‘Check availability & Fare’ என்பதை கிளிக் செய்யலாம். இப்போது, ரயிலில் இருக்கை விவரம், கட்டணம் ஆகியவை தெரியும்.

5. ‘Book Now’ என்பதை கிளிக் செய்து அடுத்த பக்கத்துக்குச் செல்லவும்.

6. பயணிகளின் பெயர், வயது ஆகிய விபரங்களைச் சரியாக டைப் செய்யும். முதியோருக்கு சலுகை பெற Senior Citizen Concession என்பதை தேர்வு செய்ய வேண்டும். (முதியோர் சலுகை பெற தகுதியான குறைந்தபட்ச வயது ஆண்களுக்கு 60, பெண்களுக்கு 58)

7. கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் என ஏதாவது ஒரு வழியில் டிக்கெட் கட்டணத்தை செலுத்தலாம். பணம் செலுத்தி டிக்கெட் உறுதி செய்யப்பட்டதும் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு டிக்கெட் விவரமும் ஈமெயிலுக்கு டிக்கெட்டும் அனுப்பி வைக்கப்படும்.

8. மெயிலில் கிடைத்த டிக்கெட்டை பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக்கொள்ளலாம்.

கட்டண முறைகள்:

எல்லா விவரமும் பதிவிட்ட பிறகு உங்கள் வங்கி கார்டு தயாராக இருக்க வேண்டும். எனெனில் பணம் கட்டும்போது ஓடிபி போன்ற விவரங்கள் தேவைப்படும். எனவே கார்டு, செல்போன் ஆகியவற்றை அருகிலேயே வைத்துக் கொண்டு டிக்கெட் புக் செய்ய உட்காரவும்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Irctc train ticket booking charges irctc train ticket booking online irctc ticket booking irctc ticket booking online irctc train ticket booking tatkal

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X