/tamil-ie/media/media_files/uploads/2018/09/3-32.jpg)
irctc train ticket booking
irctc train ticket booking :பயணிகளின் தேவையை கருத்தில் கொண்டு, ரயில்வே நிர்வாகம் புதுப்புது சேவைகளை புகுத்தி வரும் நிலையில், ஐஆர்சிடிசி இணையதளத்தில் பயணிகள் வசதிக்காக பல்வேறு சிறப்பமசங்கள் செயல்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு ஐஆர்சிடிசி தளத்தில் மட்டும் லட்சக்கணக்காணோர் டிக்கெட்டுகளை புக் செய்து வருகின்றன. மிகவும் சுலபமாக இதன் நடைமுறை உள்ளதால் மக்களால் எளிதில் இதனை பயன்படுத்த முடிகிறது.
ஐ.ஆர்.சி.டி.சி. தற்போது, ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் வசதிகளையும் எளிமையாகவும் சிறப்பாகவும் மேம்படுத்தியுள்ளது இந்திய ரயில்வே.பயணி ஒருவர் மாதம் ஒன்றிற்கு ஒரு ஐ.டியில் இருந்து 6 முறை டிக்கெட் பதிவு செய்து கொள்ளலாம். ஆனால் தற்போது அந்த எண்ணிக்கையை மாற்றி பயனாளர் ஒரு ஐ.டி.யில் இருந்து 12 முறை டிக்கெட் புக் செய்து கொள்ளலாம் என்று அறிவித்திருக்கிறது இது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்.
உங்கள் ஆதார் கார்ட் எண்ணை, ஐ.ஆர்.சி.டி.சியுடன் இணைத்துக் கொண்டால், நீங்கள் ஒரு மாதத்திற்கு 12 டிக்கெட்கள் புக் செய்து கொள்ளலாம்.
irctc train ticket booking: ஐ.ஆர்.சி.டி.சியுடன் ஆதார் எண்ணை இணைப்பது எப்படி ?
ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்கும் உங்களின் மொபைல் எண்ணிற்கு ஒன் டைம் பாஸ்வேர்ட் அனுப்பப்படும்.அதனை அப்டேட் செய்தால் உங்களின் ஆதார் எண் ஐ.ஆர்.சி.டி.சியுடன் இணைக்கப்பட்டுவிடும்.
ஊருக்கு செல்ல தட்கல் டிக்கெட் புக் செய்பவர்கள் கவனத்திற்கு.. இவ்வளவு மாற்றம் வந்தாச்சி தெரியுமா?
மாஸ்டர் லிஸ்ட் படி, உங்களுடன் பயணிக்க இருப்பவரின் ஆதார் எண்ணையும் இணைக்க வேண்டும். இந்த இரண்டையும் இணைக்கும் பட்சத்தில் நீங்கள் மாதம் ஒன்றிற்கு 12 டிக்கெட்கள் புக் செய்து கொள்ளலாம்.பயணிகளின் விபரங்களை பூர்த்தி செய்ய 25 நொடிகள் தான் தரப்படுகிறது. அதே போல், கேப்ச்சா கோடினை பதிவு செய்யவும் 5 நொடிகள் தான் தரப்பட்டுள்ளது.ஸ்லீப்பர் க்ளாசில் புக் செய்ய விரும்புபவர்கள் 11 மணியில் இருந்து புக் செய்யலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.