ரயில் பயண டிக்கெட் முன்பதிவு என்றாலே, அனைவர் மனதிலும் முதலில் நினைவுக்கு வருவது IRCTC இணையதளம் தான். அந்த இணையதளம் புதிய வடிவமைப்புடன் மட்டுமல்லாது, பயனாளர்களின் எளிதில் பயன்படுத்தி சேவைகளை பெறும் வகையில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
IRCTC இணையதளத்தின் மூலம் இதுவரை ரயில் டிக்கெட் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டு வந்தது. தற்போது IRCTC இணையதளத்தை லாகின் செய்யாமலேயே, ரயில்கள் காலியாக உள்ள இருக்கை / பெர்த் உள்ளிட்டவைகளின் நிலையையும் அறிந்துகொள்ளலாம்.
IRCTC இணையதளத்தின் முகப்பு பக்கத்திலேயே 'train ticket search' பகுதி இடம்பெற்றுள்ளதால், எளிதாக அனைவராலும் பயன்படுத்தும் வகையில் உள்ளது.
'Book Your Ticket' பகுதி, இடதுபக்கத்தில் அமைந்துள்ளது. இதில் உங்களது விருப்பத்திற்கு ஏற்ப ரயில்களை தேர்வு செய்துகொள்ளலாம். எந்த தேதியில் பயணம் மேற்கொள்ள போகிறீர்கள்? ரயிலில் அன்றைய நாளில் இருக்கை அல்லது பெர்த் நிலை உள்ளிட்ட விபரங்களை, லாகின் பண்ணாமலேயே பெற முடியும். டிக்கெட் முன்பதிவு செய்யும் நேரத்தில் மட்டும் லாகின் செய்தால் போதும் என்ற நிலை, பயனாளர்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.
பிஎன்ஆர் எண்ணை கொண்டு, ரயில்களின் தற்போதைய இருக்கை / பெர்த் நிலையை தெரிந்துகொள்ள, இடதுபக்கத்தில் அமைந்துள்ள 'Book Your Ticket' பகுதியில், பிஎன்ஆர் எண்ணை பதிவு செய்து தேவையான விபரங்களை பெறலாம்.
ரயில்கள் மட்டுமல்லாது, ரயில்களில் உள்ள இருக்கைகள் / பெர்த்தின் தற்போதைய நிலையை லாகின் பண்ணாமலேயே தெரிந்துகொள்ள 'Charts/Vacancy' பிரிவில், தேவைப்படும் ரயில் எண் அல்லது ரயிலின் பெயரை பதிவிட்டால், காலியாக உள்ள இருக்கைகள் / பெர்த்தின் நிலைகளை அறிந்து கொள்ளலாம்.
இந்த வசதிகள் மட்டுமல்லாது, விகால்ப் திட்டமும், IRCTC இணையதளத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், வெயிட்டிங் லிஸ்டில் உள்ள பயணிகள் மாற்று ரயில்களில் உறுதி செய்யப்பட்ட பெர்த்திற்கு செல்ல வழிவகை ஏற்படுத்தப்பட்டுள்ளது.