ரயில்களை முன்பதிவு செய்யும் IRCTC.co.in -ல், பயணிகள் ரயிலை முன்பதிவு செய்வதற்கு புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
மத்திய ரயில்வே துறையின் ஐ.ஆர்.சி.டி.சி., பொதுமக்களின் வசதிக்காக, ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு வசதியை வழங்கி வருகிறது. சமீபத்தில் இந்த இணையதளம் ரயில்களில் உணவு கள் ஆர்டர் செய்வது, கால்டாக்சி புக்கிங் உட்பட பல்வேறு அப்டேட்களுடன் களம் இறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வசதிகள் பொதுமக்களை பெருமளவில் கவர்ந்துள்ளன.
இதனைத்தொடர்ந்து, தற்போது ரயில் முன்பதிவு செய்வதற்கும் புதிய விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதோ அந்த விதிமுறைகள்..
1. டிக்கெட் முன்பதிவின்போது, காத்திருப்பு பட்டியல் அல்லது ஆர்ஏசியாக இருந்தால் அந்த டிக்கெட் உறுதியாகும் வாய்ப்புகள் குறித்து பயணிகள் உடனடியாக அறிந்து கொள்ளலாம்.
2. டிக்கெட் முன்பதிவின்போது, குறிப்பிட்ட ஒரு ரயிலில் டிக்கெட் கிடைக்காவிட்டால், அதேநாளில் அதே தடத்தில் மற்ற நேரங்களில் செல்லும் ரயில்களில் டிக்கெட் இருப்பு நிலையையும் பார்க்க முடியும்.
3. டிக்கெட் முன்பதிவின்போது, இருக்கை அல்லது படுக்கை வசதி இருப்பு நிலை, காத்திருப்பு எண்ணிக்கை உள்ளிட்ட விபரங்களை வெளிப்படையாக தெரிந்துக் கொள்ளலாம்.
4. ரயில்களில் வழங்கப்படும் உணவுகள் மற்றும் அதன் விலைப் பட்டியல், விடுமுறை நாட்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் உள்ளிட்ட விபரங்களை எளிமையாக மக்கள் பார்க்கும் வகையில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
5. சர்வர் தரநிலைப்படி, ஒரு நிமிடத்துக்கு 15 ஆயிரம் டிக்கெட்களை இதில் முன்பதிவு செய்ய முடியும்.
6. பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதைப் பொறுத்து ஐ.ஆர்.சி.டி.சி சர்வரின் வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது.