Indian Railway VIKALP Scheme: ஐஆர்சிடிசி இணையதளத்தில் பயணிகள் வசதிக்காக பல்வேறு சிறப்பமசங்கள் செயல்பட்டு வருகின்றன. நாள் ஒன்றுக்கு ஐஆர்சிடிசி தளத்தில் மட்டும் லட்சக்கணக்காணோர் டிக்கெட்டுகளை புக் செய்து வருகின்றன. மிகவும் சுலபமாக இதன் நடைமுறை உள்ளதால் மக்களால் எளிதில் இதனை பயன்படுத்த முடிகிறது.
ஐ.ஆர்.சி.டி.சி. தற்போது, ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யும் வசதிகளையும் எளிமையாகவும் சிறப்பாகவும் மேம்படுத்தியுள்ளது ஐ.ஆர்.சி.டி.சி இன் விக்லாப் திட்டம் அதில் கவனிக்க வேண்டிய ஒன்று. இந்த திட்டத்தில் இருக்கும் முக்கிய அம்சங்களை பயணிகள் கண்டிப்பாக தெரிந்துக் கொள்ள மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
irctc vikalp scheme : சிறப்பம்சங்கள்!
இந்திய இரயில்வே விக்கால்ப் திட்டம் அனைத்து ரயில் சேவைகளிலும் செயல்படுத்தப்படுகிறது. ஒதுக்கீடு மற்றும் சலுகையைல் என அனைத்து காத்திருக்கும் பட்டியல் பயணிகளுக்கும் இந்த திட்டம் பொருந்தும்.
இந்த திட்டத்தின் கீழ், பயணிகள் அதிகபட்சம் 5 ரயில்கள் தேர்ந்தெடுக்கலாம்.விக்கால்ப் திடம் மூலம் முன்பதிவு செய்த காத்திருப்பு பயணிகளுக்கு அந்த ரயிலில் சீட் கிடைக்கவில்லை என்றால் மட்டுமே மற்ற ரயில்களில் இடம் தரப்படும்
முழுமையாக காத்திருப்பு பட்டியலில் இருக்கும் பயணிகள் சார்ட் தயார் செய்யும் முன்னே பி.என்.ஆர் என்னை பார்க்க வேண்டும் . பயணிகள் இடம் இருந்து கூடுதல் கட்டணம் எதுவும் வசூலிக்க படுவதில்லை
காத்திருப்பில் இருக்கும் பயணிகளுக்கு மாற்று ரயிலை தந்தப்பின் முன்பதிவு செய்த ரயிலில் எற கூடாது. மற்றொரு ரயிலில் இடம் கொடுத்தலும் சாதாரண பயணிகளுக்கான வசதிகள்தான் கிடைக்கும்.
மாற்று ரயில் இடம் தந்தப்பினும் சில சமயங்களில் மீண்டும் ரயில் மாற்றம் ஏற்படலாம். இதனால் பி என் ஆர் என்னை சரி பார்ப்பது அவசியம் . விக்கால்ப் திட்டத்தில் மற்றொரு ரயிலில் இடம் கொடுத்த பின் பயணிகள் டிக்கெட்டை கேன்சல் செய்தால் அதுக்கான கட்டணம் வசூலிக்கப்படும்
ஒரே நேரத்தில் 12 டிக்கெட்டுகளை புக் செய்ய என்ன செய்ய வேண்டும்?
ரயில் கிடைத்த பிறகு எந்த மாற்றத்தையும் பயணிகள் செய்ய முடியாது, கேன்சல் தான் செய்ய வேண்டும்.விக்கால்ப் திட்டத்திற் கீழ் தேர்ந்தெடுக்கப் படும் மாற்று ரயிலைகள் ஒரு தடவைக்கு மேல் மாற்ற முடியாது.