irctc waiting list : தீபாவளி நெருங்கி விட்டது. எல்லாரும் சொந்த ஊர் செல்ல நிறைய பிளான்களை போட்டு இருப்பீங்க. கடைசி நேரத்தில் பஸ், ரயில் டிக்கெட் புக் பண்ணா நிறைய சிரமங்களை பார்ப்பீர்கள்.
இதிலிருந்து ஈஸியாக தப்பிக்க முன்னரே டிக்கெட் புக்கிங் வேலைகளை செய்து விடுங்கள். IRCTC இணையதளம் மூலம் ஆன்லைனில் ரயில் டிக்கெட் புக் செய்ய திட்டமிட்டு இருங்கீங்களா? இந்த செய்தித் தொகுப்பு உங்களுக்கு தான். வெளியூர் செல்ல கடைசி நிமிடத்தில் அவசர அவசரமாக ஆன்லைனில் டிக்கெட் புக் செய்யவர்களுக்கு சில நேரங்களில் டிக்கெட்டுகள் வெயிட்டிங் லிஸ்டில் தான் கிடைக்கும். வேறு வழியில்லை போய் விடலாம் என நினைப்பவர்கள் வெயிட்டிங் லிஸ்டில் இருக்கும் டிக்கெட்டுக்களை புக் செய்வார்கள். அதன் பின்பு ஒருவேளை அந்த டிக்கெட்டுகள் கன்ஃபார்ம் ஆகவும் வாய்ப்புண்டு அதே நேரம் கேன்சல் ஆகவும் வாய்ப்புண்டு.
இந்த வீண் அலைச்சல், குழப்பம், பதற்றம் இனி வேண்டாம். ரயில் பயணிகள் புக் செய்யும் டிக்கெட்டுகளின் முன்பதிவு இறுதி நிலவரம், காலியிடங்கள் விவரம் ஆகியவற்றை இனிமேல் முன்பே தெரிந்துக் கொள்ள முடியும். இதற்காக ஐஆர்டிசிடிசி இணையதளத்தில் சார்ட்ஸ்/வேகன்சி என்ற புதிய வசதி அறிமுகம் ஆகியுள்ளது.
அவசரத்திற்காக புக் செய்யப்பட்ட ரயில்வே டிக்கெட்.. கட்டணமே இல்லாமல் கேன்சல் முறை இதுதான்!
வெயிட்டிங் லிஸ்டில் உள்ள பயணிகளும் காலியிருக்கை இருக்கை நிலவரத்தை தாங்களாகவே அறிந்து கொண்டு, டிக்கெட் பரிசோதகரை அணுகி தங்களின் வரிசைப்படி இடங்களை கேட்டு பெறவும் முடியும்.
irctc waiting list : இந்த புதிய சார்ட்ஸ்/வேகன்சி வசதி மூலம் என்னென்ன தகவல்களை அறியலாம்?
1. ஏற்கனவே புக் செய்யப்பட்டுள்ள இருக்கைகள் நீண்ட தூர முழு தூர பயணத்திற்காக புக் செய்யப்பட்டதா? அல்லது பாதி இடைவெளியில் பயணிகள் இறங்கி விடுவார்களா எனப்தை தெரிந்துக் கொள்ளலாம்.
2. இந்த முழு விபரம் அடங்கிய முதல் சார்ட் ரயில் புறப்படுவதற்கு 4 மணிநேரத்திற்கு முன்பும், இரண்வாவது சார்ட் ரயில் சென்றடையும் இறுதி ஸ்டேஷனுக்கு 30 நிமிடத்திற்கு முன்பும் கிடைக்கும்.
3. இந்த சார்ர்டில் பயணிகள் ரயில் எண், பெயர், பயண தேதி, புறப்படும் இடம் ஆகிய விவரங்களை டைப் செய்தால், இறுதி நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.