தற்கொலை லைவ் : அயர்லாந்தில் இருந்து போன் மூலம் மும்பை போலீஸை உஷாராக்கிய ஃபேஸ்புக்

இரவு 8 மணிக்கு ஆரம்பித்து விடிய விடிய ஒரு நபரிடம் பேசி தற்கொலை முயற்சியில் இருந்து அவரை காப்பாற்றியுள்ளது டெல்லி மற்றும் மும்பை காவல்துறை.

Somya Lakhani

Ireland to Delhi to Mumbai: Call from Facebook foils suicide bid : முகநூலின் அயர்லாந்து தலைமை அலுவலகத்தில் இருந்து வந்த அழைப்பு டெல்லி, மும்பை டி.சி.பி, காவல் கண்காணிப்பாளர் மற்றும் அவரின் மனைவி ஆகியோரை ஒரு நொடி கூட தூங்கவிடாமல் செய்துவிட்டது. சனிக்கிழமை இரவு 8 மணிக்கு டெல்லி சைபர் செல் டி.சி.பி. அன்யேஷ் ராய்க்கு அயர்லாந்தில் இருந்து அழைப்பு ஒன்று வந்துள்ளது. “முகநூல் நிர்வாகத்திடம் இருந்து அந்த அழைப்பு வந்திருக்கிறது. முகநூல் பக்கத்தில் டெல்லியை சேர்ந்த ஒரு நபர் தற்கொலை செய்து கொள்ள இருப்பதாக பதிவுகளை வெளியிட்டு வருகிறார் என்று கூறினர். பிறகு அவருடைய ஐ.பி, முகநூல் கணக்கு, அவர் பதிவிட்ட வீடியோ, அவருடைய முகநூல் கணக்குடன் இணைக்கப்பட்டிருக்கும் அலைபேசி எண் ஆகியவறையும் ஷேர் செய்தனர். நாங்கள் உடனே இந்த போன் நம்பரை ட்ரேஸ் செய்ய துவங்கினோம். இது போன்ற விவகாரங்களில் நேரம் மிகவும் முக்கியமானது” என்று ராய் கூறினார்.

அந்த எண் கிழக்கு டெல்லியில் அமைந்திருக்கும் மந்தவாளி பகுதியை சேர்ந்தது. உடனே ராய் டெல்லி கிழக்கு டி.சி.பி. ஜஸ்மீத் சிங்கிற்கு போன் செய்தார். அப்போது காவல்நிலையத்தில் இருந்த காவலர்கள் மதுவிஹாரில், அந்த அலைபேசி எண்ணுடன் தொடர்புடைய வீட்டிற்உ சென்றனர். அங்கே ஒரு பெண் இது எதை பற்றியும் தெரியாமல் விழித்துக் கொண்டிருக்க அந்த முகநூல் கணக்கு பற்றி விசாரிக்க துவங்கினார்கள். அந்த பெண்ணின் கணவர் முகநூல் கணக்கை தன்னுடைய எண் கொண்டு துவங்கினார் என்று கூறீனார். கணவர் பற்றி கேட்ட போது இரண்டு வாரங்களுக்கு முன்பு அந்த பெண்ணுடன் சண்டை போட்டுக் கொண்டு மும்பைக்கு சென்றுவிட்டதாக கூறினார். மும்பையில் அவர் எங்கே இருக்கிறார் என தெரியவில்லை என்றும் அவர் கூறினார்.

To read this article in English

இரவு 09:30 மணிக்கு டாக்டர் ரஷ்மி கர்ந்திகாருக்கு (மும்பை சைபர் செல் டி.சி.பி) இந்த தகவல் தெரிவ்க்கப்பட்டது. அவருடைய மனைவி கொடுத்த எண்ணிற்கு நான் தொடர்ந்து போன் செய்து கொண்டிருந்தேன். அவர் போனை எடுக்கவும் இல்லை. ஸ்விட்ச் ஆஃப் செய்யவும் இல்லை. என்னுடைய ஒரு குழு அவருடைய எண்ணை ட்ரேஸ் செய்து அவருடைய இருப்பிடத்தை கண்டறிய முயற்சி செய்து கொண்டிருந்தனர். அதே நேரத்தில் இன்ஸ்பெக்டர் ப்ரமோத் கோபிகர் அந்த நபரையும், அவருடைய மனைவியையும் தொடர்ந்து தொடர்பு கொண்டு பேசினார் என்று கூறினார்.

மேலும் படிக்க : சுயசார்பு இந்தியா : 101 வெளிநாட்டு ராணுவ ஆயுதங்களுக்கு தடை!

கோபிகர் இது குறித்து கூறும் போது, நானும் என் மனைவியும் இரவு நேர சாப்பாடு சாப்பிடும் சமயத்தில் போன் கால் வந்தது என்று கூறினார். சில முறை அந்த நபருக்கு போன் செய்தும் அதை அவர் எடுக்கவில்லை. அவருடைய மனைவியிடம் மிகவும் உருக்கமாக வாய்ஸ் மெசேஜ் அனுப்பவும், அவர்களின் குழந்தை புகைப்படத்தை பகிரவும் கேட்டுக் கொண்டேன். சிறிது நேரத்தில் அதில் ப்ளூடிக் வரவும் அவருடைய மனைவி எங்களுக்கு தெரியபடுத்தினார். 11:30 மணிக்கு தன்னுடைய மெசேஜ்களை அவர் பார்த்ததாக அவருடைய மனைவி கூறினார். அதனை தொடர்ந்து போனில் அவரை தொடர்பு கொள்ள கூறினேன். பின்பு கான்ஃப்ரஸ் கால் மூலம் என்னுடைய எண்ணையும் இணைக்க கூறினேன். ஆனால் அது வேலை செய்யவில்லை. பிறகு என்னுடைய எண்ணில் இருந்து போன் செய்து அவரை கான்ஃபிரஸில் இணைத்தேன். அந்த நேரத்தில் அவருடைய இருப்பிடம் கண்டறியப்பட்டது. அவர் தொடர்ந்து தன்னுடைய வாழ்க்கையை முடித்துக் கொள்ள விரும்புவதாக கூறிக் கொண்டே இருந்தார். அதற்காக இரண்டு முறை முயற்சி மேற்கொண்டதாகவும் கூறினார். அதே சமயத்தில் அவருடைய இருப்பிடம் கண்டறியப்பட்டது. பயந்தார் (Bhayandar) பகுதியில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பள குறைவு, பணத்தட்டுப்பாடு காரணமாக மன உளைச்சலில் இருந்து வந்தார் என்பது தெரிய வந்தது. அவருக்கு கொரோனா நோய் தொற்று வந்துவிடுமோ என்ற அச்சம் ஏற்பட்டதும் தெரிய வந்தது. அவருடைய மனைவி அவரை எவ்வளவு நேசிக்கிறார் என்பதை தொடர்ந்து கோபிகர் தெரிவித்தார். ஆனாலும் அவருடைய வார்த்தைகள் வேலை செய்யவில்லை என்பதை உணர்ந்த அவர், கோபிகர் தன்னுடைய மனைவியை அழைத்து, கணவர் – மனைவிக்கு கவுன்சிலிங் தர கூறினார். அப்போது கோபிகரின் மனைவி கோபிகரும் அவரும் எப்படி தொடர்ந்து சண்டையிடுவார்கள் என்று கூறினார்.

கொரோனா வைரஸ் குறித்து அவர் அச்சம் தெரிவித்த போது கோபிகருக்கும் ஏற்கனவே கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அவர் தற்போது நலமாக இருக்கிறார் என்று பொய் கூறியுள்ளார் கோபிகரின் மனைவி. பணப் பற்றாக்குறை குறித்து பேசிய போது, கோபிகரிடம் கார் இருக்கிறது என்றும் அதனை ஓலாவுடன் ரெஜிஸ்டர் செய்து ஓட்டிக் கொள்ளலாம் என்றூ கூறீனார். மேலும் மும்பை காவல்துறை உங்களுக்கு எப்போதும் உறுதுணையாய் இருக்கும். நீங்கள் உங்கள் மனைவியை அழைத்துக் கொண்டு மும்பை வாருங்கள் என்றும் கோபிகர் கூறியுள்ளார்.

இந்த பேச்சுவார்த்தை முடிந்து அவர் சமாதானம் அடைய ஞாயிறு காலை 3 மணி ஆகிவிட்டது. மீண்டும் 10 மணிக்கு அவருக்கு போன் செய்தேன் அவர் நன்றாக இருப்பதாக தெரிவித்தார். ஆனாலும் நான் அவர் பற்றிய ஒரு கண்காணிப்பில் இருப்பேன் என்று கூறியுள்ளார் அவர்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Ireland to delhi to mumbai call from facebook foils suicide bid

Next Story
கேரளா நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 43 ஆக உயர்வுkerala rains, kerala landslide, kerala idukki landslide, கேரளா, மூணாறு, நிலச்சரிவு, பலி எண்ணிக்கை உயர்வு, munnar lanslide, rajamala landslide, rajamala news, munnar news, idukki, kerala rains news, இடுக்கி, kerala rains updates, kerala floods
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com