புதுச்சேரியில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக வசிக்கும் இருளர் மற்றும் பழங்குடி மக்களுக்கு இலவச மனைப்பட்டா வழங்க கோரி எலிகளை கையில் பிடித்தபடி 100-க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுச்சேரி ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட கோர்க்காடு ஏரிக்கரை பகுதியில் கடந்த 70 ஆண்டுகளுக்கு மேலாக 20-க்கும் மேற்பட்ட இருளர் மற்றும் பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் தங்களுக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்க புதுச்சேரி அரசை வலியுறுத்தி பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால், புதுச்சேரி அரசு இதுவரை எந்த நடவடிக்கை எடுக்காததை கண்டித்து பழங்குடியினர் விடுதலை இயக்கம் சார்பில் எலிகளை வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
/indian-express-tamil/media/media_files/2024/11/12/zzykbNYotWKKJkprdjs6.jpg)
பழங்குடியினர் விடுதலை இயக்கத்தின் புதுச்சேரி மாநில செயலாளர் ஏகாம்பரம் தலைமையில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பெதுச் செயலாளர் பாவாணன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு எலிகளை கையில் வைத்துக்கொண்டு அரசுக்கு எதிராக கண்டன முழுக்கங்களை எழுப்பினர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“