scorecardresearch

கணவர்கள் மனைவிகளை அடிப்பது நியாயமானதா? இந்திய ஆண்கள், பெண்கள் கூறும் கருத்துகள் என்ன?

வீட்டில் நடைபெறும் குடும்ப வன்முறை தொடர்பான மனப்பான்மையை காணும் போது, இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது தேசிய குடும்பநல கணக்கெடுப்பு.

husband justified in beating the wife

Rupsa Chakraborty

Husband justified in beating the wife Survey : குறையும் கருவுறுதல் விகிதமும், வங்கிக் கணக்கில் உயரும் பணமும் பெண்கள் மத்தியில் வளர்ந்து வரும் அதிகாரத்தைக் காட்டுகிறது. ஆனால் வீட்டில் நடைபெறும் குடும்ப வன்முறை தொடர்பான மனப்பான்மையை காணும் போது, இன்னும் வெகு தூரம் பயணிக்க வேண்டும் என்பதையே காட்டுகிறது தேசிய குடும்பநல கணக்கெடுப்பு.

உங்களைப் பொறுத்தமட்டில் வீட்டில் மனைவியை கணவர் அடிப்பது நியாயப்படுத்தப்படுகிறதா என்ற கேள்விக்கு 18 மாநிலங்கள் மற்றும் ஜம்மு காஷ்மீர் மக்களின் பதில் என்ன என்பதை விளக்குகிறது இந்த கட்டுரை.

நடத்தப்பட்ட சர்வேயில் தெலுங்கானாவைச் சேர்ந்த பெண்கள் கணவர்கள் மனைவியை அடிப்பது நியாயமானதே என்று கூறியுள்ளனர். இப்படியான பதிலை 83.8% பெண்கள் கூறி தெலுங்கானாவை முதல் இடத்தில் வைத்துள்ளனர். ஹிமாச்சல் பிரதேசத்தில் 14.8% பெண்கள் மட்டுமே மனைவியை அடிப்பது நியாயம் என்று கூறியுள்ளனர். ஆண்கள் மத்தியில் கேட்ட போது கர்நாடகாவில் 81.9% ஆண்கள் இது போன்ற செயல்கள் நியாயமானது தான் என்று கூறியுள்ளனர். ஹிமாச்சல் பிரதேசத்தில் 14.2% ஆண்கள் மட்டுமே அடிப்பது நியாயம் என்று கூறியுள்ளனர்.

கணவரிடம் சொல்லாமல் வெளியே சென்றால்; குழந்தையையோ அல்லது வீட்டையோ புறக்கணித்தால்; கணவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டால்; கணவருடன் உடலுறவு வைத்துக் கொள்ள மறுத்தால்; முறையாக சமைக்கவில்லை என்றால்; சந்தேகத்திற்கு இடம் தரும் வகையில் அப்பெண் நடந்துகொள்கிறார் என்று கணவர் நினைத்தால்; மாமனார் மாமியாரிடம் மரியாதை காட்டவில்லை என்றால் – இது போன்ற சூழலில் என்ன செய்வீர்கள் என்ற கேள்வியை எழுப்பியது கணக்கெடுப்பு.

மாமியார், மாமனாருக்கு மரியாதை தராமல் இருப்பது, குழந்தை மட்டும் குடும்பத்தை புறக்கணிப்பது போன்றவை குடும்ப வன்முறையை நியாயப்படுத்த மேற்கோள்காட்டப்பட்ட பொதுவான காரணங்களாக அடையாளப்படுத்தியுள்ளது கணக்கெடுப்பு.

2019-21 ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட ஆய்வுகள் தொடர்பான தரவு புதன்கிழமை வெளியிடப்பட்டது. அசாம், ஆந்திரப் பிரதேசம், பீகார், கோவா, குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மணிப்பூர், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து, சிக்கிம், தெலுங்கானா, திரிபுரா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

ஆந்திரப் பிரதேசம் (83.6 சதவீதம்), கர்நாடகா (76.9 சதவீதம்), மணிப்பூர் (65.9 சதவீதம்) மற்றும் கேரளா (52.4 சதவீதம்) ஆகியவை குடும்ப வன்முறையை நியாயப்படுத்தும் மாநிலங்கள் ஆகும். ஹிமாச்சல் (14.2%) மற்றும் திரிபுரா (21.3%) ஆகிய மாநிலங்களில் இருக்கும் ஆண்கள் குடும்ப வன்முறையை ஏற்றுக் கொள்ளவில்லை.

ஜனவரி 2018ம் ஆண்டு வெளியிடப்பட்ட NFHS-4 (2015-2016)-ன் தரவுகளின் அடிப்படையில் 52% பெண்கள், கணவர்கள் மனைவியை அடிப்பது நியாயமானது என்று கூறியுள்ளனர். ஆனால் 42% ஆண்கள் மட்டுமே அதனை நியாயமானது என்று ஒப்புக் கொண்டனர்.

கணக்கெடுப்பில் பங்கேற்ற 18 மாநிலங்களில் மணிப்பூர், குஜராத், நாகாலாந்து, கோவா, பீகார், அஸ்ஸாம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தெலுங்கானா, நாகாலாந்து, இமாச்சலப் பிரதேசம், கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய 13 மாநிலங்களைச் சேர்ந்த பெண்கள் கணவர்கள் மனைவியை அடிக்க புகுந்த வீட்டு உறவுகளுக்கு மரியாதை அளிக்காமல் இருப்பது தான் காரணம் என்று தேர்வு செய்துள்ளனர்.

அதனைத் தொடர்ந்து குடும்பம் மற்றும் குழந்தைகளை புறக்கணித்தல் குடும்ப வன்முறைக்கான இரண்டாவது காரணமாக தேர்வு செய்துள்ளனர். நம்பிக்கைக்கு துரோகம் இழக்கிறார் என்ற காரணங்களுக்காக வன்முறை நிகழ்கின்றன என்பதை மிகவும் குறைவாகவே மக்கள் தேர்வு செய்துள்ளனர். ஆனால் மிசோரம் பெண்கள் மட்டுமே இதனை முதன்மைக் காரணமாக தேர்வு செய்துள்ளனர்.

பெண்கள் உரிமைகளுக்காக பணியாற்றும் பாபுலேஷன் ஃபர்ஸ்ட் என்ற தன்னார்வ நிறுவனத்தின் இயக்குநர் “குடும்பத்துக்கும் கணவருக்கும் சேவை செய்வதே தங்களின் முதல் முன்னுரிமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கும் பெண்களின் மனதில் இந்த வகையான ஆணாதிக்க மனநிலை ஆழமாகப் பதிந்திருக்கிறது” என்று குறிப்பிட்டார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Is husband justified in beating the wife survey has telling responses