Manoj CG
Priyanka Gandhi Congress Party New Chief : நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி மிகவும் குறைவான இடங்களில் வெற்றி பெற்று, யாரும் எதிர்பாராத அளவு மோசமான தோல்வியை தழுவியது.
மே 23ஆம் தேதியன்று தேர்தல் முடிவுகள் வெளியாகின. மே 25ஆம் தேதி காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் நடைபெற்றது. அதில் தலைவர் பதவியில் இருந்து விலக விரும்புவதாக ராகுல் காந்தி அறிவித்தார். மேலும் காந்தி குடும்பத்தில் இல்லாத ஒருவரை காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். அதற்கு பல்வேறு தரப்பிலிருந்து எதிர்ப்புகள் கிளம்பி வந்த நிலையில் ட்விட்டரில் தன்னுடைய கருத்துகளை வெளியிட்டு ராஜினாமா செய்வதாக கூறியிருந்தார். இந்நிலையில் புதிய கட்சித் தலைவராக யார் வருவார் என்ற எதிர்பார்ப்பு அனைவர் மத்தியிலும் இருந்து வந்தது!
உறுதியாக இவர் தான் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் என்று கூற முடியாத நிலையில், தற்போது பிரியங்கா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைமைப் பொறுப்பினை ஏற்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர்கள் பலரும் தங்களின் கருத்தினை தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து முன்னாள் மத்திய அமைச்சர் ஸ்ரீபிரகாஷ் ஜெய்ஸ்வால் கூறுகையில் “தற்போது நிறைய பேர் கூறுகின்றனர், ஏன் நானும் கூட பிரியங்கா காந்தியை நம்புகின்றேன், அவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தால் மிகவும் நன்றாக இருக்கும், அவர் மிகவும் பலம் பொருந்தியவர். ஒரு கட்சியை நிர்வகிக்க கூடிய அளவிற்கு அவருக்கு தகுதி உண்டு. அவரும் காந்தி குடும்பத்திலிருந்து வந்தவர் என்பதால் அவர் இந்த கட்சியின் தலைவராக இருந்தால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன்.” என்று கூறியுள்ளார்.
கட்சியினர் ப்ரியங்காவை புதிய தலைமையாக ஏற்பார்களா?
மூன்று முறை லோக்சபா எம்பியாக இருந்த பக்தா சரண் தாஸ் கூறுகையில் “காங்கிரஸ் கட்சியின் அடிமட்ட தொண்டர்கள் முதல் தற்போது அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருப்பது பிரியங்கா காந்தியை தான். இந்த கட்சியின் தலைவராக அவர் வரவேண்டும் என்று நாங்கள் அனைவரும் கோரிக்கை வைப்போம்” என்று கூறியுள்ளார்.
இது தொடர்பான முழுமையான செய்தியை ஆங்கிலத்தில் படிக்க :
காங்கிரஸ் கட்சியின் தலைமை பொறுப்பை மீண்டும் ராகுல் காந்தி ஏற்றுக் கொள்ளமாட்டார். அதனால் அந்த பொறுப்பினை ப்ரியங்கா காந்தி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று தாஸ் இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அறிவித்துள்ளார்.
இதற்கு முன்பு ப்ரியங்கா காந்தியின் பெரிய காங்கிரஸில் அழுத்தமாக சேர்க்கப்படவில்லை. ஏன் என்றால் ராகுல் திட்டவட்டமாக புதிய தலைவராக காந்தி குடும்பத்தில் இல்லாத ஒருவரை தான் தலைவராக தேர்வு செய்ய வேண்டும் என்று கூறிவிட்டார். அந்த ஒரு காரணத்தில் தான் கட்சியில் இருக்கும் பல நிர்வாகிகள் வெளிப்படையாக ப்ரியங்கா காந்தியின் கீழான காங்கிரஸ் தலைமை குறித்து பேச்சு எழுப்பவில்லை.
ஆனால் மூத்த தலைவர்கள் ப்ரியங்கா காந்தியின் வருகையை எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்றும் கூற இயலாது. காங்கி்ரஸ் காரிய கமிட்டியில் பேசும் போது “ கட்சியை கொன்றுவிட்டவர்களும் இங்கு தான் அமர்ந்திருக்கின்றார்கள்” என்று வெளிப்படையாக பேசினார்.
ராகுல் காந்தியின் ராஜினாவை இன்னும் காங்கிரஸ் காரிய கமிட்டி ஏற்றுக் கொள்ளாத நிலையில், இந்த வாரம் கமிட்டி கூடுகிறது. ராகுலின் ராஜினாமாவை ஏற்றுக் கொள்ளுதல், புதிய தலைவருக்கான தேடலை ஆரம்பித்தல் போன்றவை முழு வீச்சில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பொதுச்செயலாளர்கள், மாநில காங்கிரஸ் தலைவர்கள் முக்கிய முடிவுகளை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரஸ் கட்சிக்கு வரும் தலைவர் மிகவும் இளமையானவராகவும், ராகுல் போன்றே மிகவும் துடிப்பானவர்களாகவும் இருக்க வேண்டும் என்று காங்கிரஸ் தொண்டர்கள் எதிர்பார்க்கின்றனர். சச்சின் பைலட், ஜோதிராதித்ய சிந்தியா போன்றோர் அந்த வரிசையில் காங்கிரஸில் நிற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.