Advertisment

ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு - பெங்களூருவில் டாக்டரை கைது செய்தது என்.ஐ.ஏ.

NIA arrests bengaluru doctor : பஷீத், ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்கு சன்மானமாக அபுதாபியை சேர்ந்த இளைஞரின் மூலம் அவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டிருந்தது.

author-image
WebDesk
New Update
ISIS, Syria, NIA, doctor, bengaluru, arrest, nia arrests bengaluru doctor, islamic state, national investigation agency, bangalore, bangalore news, abdur rahman

Johnson T A

Advertisment

2014ம் ஆண்டில் சிரியா நாட்டில் ஐஎஸ் அமைப்புடன் தொடர்புடையவர்களுக்கு சிகிச்சை அளித்தது மட்டுமல்லாது, அந்த அமைப்புடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்ததாக, பெங்களூருவில் உள்ள கண் மருத்துவரை, தேசிய புலனாய்வு முகமை ( National Investigation Agency ) கைது செய்துள்ளது.

கர்நாடக மாநிலம் பெங்களூவில் உள்ள எம்எஸ் ராமைய்யா மருத்துவமனையில், கண் மருத்துவராக உள்ளவர் அப்துர் ரஹ்மான் (வயது 28). இவருக்கும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்த ஜஹன்ஜயிப் சமி வனிக்கு தொடர்பு இருப்பதாகவும், இவர்களுக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு இருந்தது உறுதி செய்யப்பட்ட நிலையில், கர்நாடக போலீசாரின் உதவியுடன், என்.ஐ.ஏ. அமைப்பினர், அப்துர் ரஹ்மானை கைது செய்தனர்.

இந்தியாவில் ஐஎஸ் அமைப்பு தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்ததாக சமி வனி, அவரது மனைவி ஹினா பஷிர் பெய்க் உள்ளிட்டோர், புதுடெல்லியில் கைது செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இதுதொடர்பாக, என்.ஐ.ஏ, வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, அப்துர் ரஹ்மான், ஜஹன்ஜயிப் சமி உடன் இணைந்து, ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவான நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபட்டுள்ளனர். 2014ம் ஆண்டின் துவக்கத்தில், சிரியா நாட்டுக்கு சென்ற அவர்கள், ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு சிகிச்சை அளித்ததோடு மட்டுமல்லாது, அங்கேயே 10 நாட்கள் தங்கியிருந்து ஐஎஸ் அமைப்புக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர். பின் அவர்கள் இந்தியா திரும்பியுள்ளனர்.

போரில் படுகாயமடைந்த ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள் பயன்பெறும் வகையில், மருத்துவ செயலியை , அப்துர் ரஹ்மான் உருவாக்கி அதன்மூலம் அவர்களுக்கு சிகிச்சை அளித்துள்ளார். இதன்மூலம், ஐஎஸ் அமைப்பிற்கு பெரும்பலனை அளித்திருந்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜஹன்ஜயிப் சமி, அவரது மனைவி ஹினா, டெல்லியில் தங்கியிருந்து இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர். இதற்காக என்ஐஏ உருவாக்கியிருந்த Islamic State Khorasan Province (ISKP) திட்டத்தின் படி இவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. அதில், ஐஎஸ் அமைப்பிற்கு இந்தியாவில் இருந்து ஆள் எடுக்கும் பணியில் அவர்கள் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது இளைஞன் அப்துல்லா பஷித் என்பவரே, ஐஎஸ் அமைப்பிற்காக, இந்தியாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் ஆள் என்பது தெரியவந்தது. துரிதமாக செயல்பட்ட என்ஐஏ, பஷித்தை கைது செய்து திகார் சிறையில் அடைத்துள்ளது.

பஷித், மேலும் இளைஞர்களுடன் 2014ம் ஆண்டில் ஐஎஸ் அமைப்பில் சேருவதற்காக இந்தியாவில் இருந்து செல்ல இருப்பதாக வந்த தகவலையடுத்து, உளவுத்துறை உதவியுடன் கோல்கட்டாவில் அவர்கள் கைது செய்யப்பட்டு அவர்களின் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர்

2015ம் ஆண்டு டிசம்பரில், பஷீத், மீண்டும் 2 இளைஞர்களுடன் ஐஎஸ் அமைப்பில் சேர இந்தியாவிலிருந்து வெளியேறிய நிலையில், நாக்பூரில் கைது செய்யப்பட்டான்.

பஷீத், ஐஎஸ் அமைப்பில் சேர்வதற்கு சன்மானமாக அபுதாபியை சேர்ந்த இளைஞரின் மூலம் அவருக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்பட்டிருந்தது.

பஷீத் உடன் சேர்த்து, காஷ்மீர் இளைஞர் அட்னான் ஹசன், மும்பை இளைஞர் ஷேக் அசார் உல் இஸ்லாம், முகம்மது பர்ஹான் ஷேக் உள்ளிட்டோரும் 2016ம் ஆண்டில் ஐஎஸ் அமைப்பில் சேர திட்டமிட்டிருந்தனர். இவர்களுக்கு ஷபி ஆர்மர் என்பவர் உதவியதாக தெரிவிக்கப்பட்டிருந்தாலும் அவரைபற்றிய முழுமையான தகவல்கள் வெளியிடப்படவில்லை.

இந்தியாவில் நடந்த குடியுரிமை திருத்த சட்ட மசோதா எதிர்ப்பு போராட்டத்தில் ஐஎஸ் அமைப்புக்கு தொடர்பு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருந்த நிலையில், இதற்கு காரணமாக திகழ்ந்த மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்த சாதியா அன்வர் ஷேக், மற்றும் நபீல் சித்திக் காத்ரியை என்ஐஏ கைது செய்தது.

எம்எஸ் ராமைய்யா மருத்துவ கல்லூரியின் விளக்கம்

அப்துர் ரஹ்மான், 2014ம் ஆண்டில் தங்கள் கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பை முடித்தார். 2017ம் ஆண்டில், கர்நாடக தேர்வுத்துறையின் கோட்டா முறையில் எம்எஸ் படிப்பில் சேர்ந்தார். 2020ம் ஆண்டில் அவர் எம்எஸ் ஆப்தால்மாலஜி படிப்பை நிறைவு செய்தார். கல்லூரிக்கு வெளியே அவர் இத்தகைய செயல்களில் ஈடுபட்டார் என்பது தங்களுக்கு தெரியாது என்று அக்கல்லூரி விளக்கம் அளித்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்க - NIA arrests doctor for IS ‘links’, says assisted it in Syria in 2014

Bengaluru Isis
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment