மத்திய பிரதேச மாநிலத்தில் ஒன்றாக பயணம் செய்த முஸ்லீம் ஆணையும், இந்து பெண்ணையும், காதலர்கள் எனக்கூறிய, பஜ்ரங் தள் உறுப்பினர்கள் அவர்களை காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் அரங்கேறியுள்ள்ளது.
மத்திய பிரதேச மாநிலத்தில், அஜ்மீர் செல்லும் ரயிலில், ஒரு முஸ்லீம் ஆணும், திருமணமான இந்து பெண்ணும், ஒன்றாக பயணம் செய்துள்ளனர். அப்போது அங்குவந்த பஜ்ரங் தள் உறுப்பினர்கள் இருவரையும் காதலர்கள் என கூறி, வலுக்கட்டாயமாக ரயிலில் இருந்து இறக்கினர். பிறகு அந்த முஸ்லீம் ஆணை “லவ் ஜிஹாத்” செய்வதாக குற்றம் சாட்டி அவரைத் தாக்கியதுடன், உஜ்ஜைனியில் உள்ள ரயில்வே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இந்தூரைச் சேர்ந்த அந்த ஆணும், பெண்ணும் மற்றும் அவர்களின் குடும்ப நண்பர்களும், அரசு ரயில்வே காவல்துறையினரால் விசாரிக்கப்பட்டு, அவர்களது பெற்றோர் வரும் வரை காவல் நிலையத்தில் அமரவைக்க பட்டனர். இந்த சம்பவம் ஜனவரி 14 அன்று நடந்தது.
விசாரணையில், அந்த முஸ்லீம் ஆண், சிறிய எலக்ட்ரானிக் கடையின் உரிமையாளர் ஆசிப் ஷேக் எனவும், அந்தப் பெண் ஒரு தனியார் பள்ளி ஆசிரியர் என்பதும் தெரிய வந்தது.
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
मुस्लिम लड़का और गैर मुस्लिम लड़की MP उज्जैन से ट्रेन में जा रहे थे, हिंदू संगठन वालों को खबर लगी तो वहाँ पहुँचकर लड़के को पीटते हुए थाने ले गए, जाँच के बाद पुलिस ने बताया कि लड़का और लड़की दोनों शादीशुदा हैं, दोनों में पारिवारिक संबंध भी है, जिसके बाद पुलिस ने उन्हें जाने दिया… pic.twitter.com/Q6u0md3pMC
— Ashraf Hussain (@AshrafFem) January 18, 2022
இந்த சம்பவத்தின் வீடியோ ஒன்றில், தங்களை பஜ்ரங் தள் தொண்டர்கள் என அடையாளப்படுத்திக் கொண்ட மூன்று பேர், ஷேக்-கை ரயில் பெட்டியில் இருந்து வெளியே இழுப்பதைக் காணலாம்.
அதேபோல், காவல் நிலையத்திற்குள் பதிவான மற்றொரு வீடியோவில், அந்த பெண் பஜ்ரங் தள் ஆட்களை நோக்கி கத்துவதைக் காணலாம். “உங்கள் ஒரு தவறான புரிதல் என் வாழ்க்கையை கெடுத்துவிடும். நான் ஒரு வயது வந்தவள், நான் ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறேன், நான் குழந்தைகளுக்கு கற்பிக்கிறேன், ”என்று அவர் கூறுகிறார்.
இந்த சம்பவம் குறித்து, ஜிஆர்பி போலீஸ் சூப்பிரண்டு நிவேதிதா குப்தா கூறுகையில், ஷேக்கும், அந்த பெண்ணும் குடும்ப நண்பர்கள், பல ஆண்டுகளாக ஒருவரையொருவர் அறிந்தவர்கள். “லவ் ஜிஹாத்” என்று, பஜ்ரங் தள் ஆட்களால் குற்றம் சாட்டப்பட்ட அவர்களை, காவல் நிலையத்திற்கு அழைத்து வந்த பிறகு, நாங்கள் அவர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்தோம். அவர்கள் இருவரும் பெரியவர்கள் என்பதால், இதில் எந்த குற்றமும் இல்லை, அவர்கள் விடுவிக்கப்பட்டனர்,” என்று குப்தா கூறினார்.
மேலும், . பஜ்ரங் தள் ஆட்கள் மீது எந்த புகாரும் இல்லாததால், நாங்கள் எந்த குற்றத்தையும் பதிவு செய்யவில்லை என்றும் அவர் கூறினார்.
இது தொடர்பாக, பஜ்ரங் தள் மாணவர் பிரிவின் அமைப்பைச் சேர்ந்த குந்தன் சந்திராவத் கூறுகையில், ஒரு இந்துப் பெண், ஒரு முஸ்லீம் ஆணால் தவறாக வழிநடத்தப்பட்டு அவருடன் அழைத்துச் செல்லப்படுவதாக நம்பகமான ஆதாரங்கள் மூலம் தகவல் கிடைத்தது”. நமது இந்து சகோதரிகளின் பாதுகாப்பிற்காகத்தான், நமது தொழிலாளர்கள் தலையிட்டனர். அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த நடவடிக்கையின் போது, அந்த நபருக்கும்ம் தொழிலாளர்களுக்கும் சிறிய தகராறு ஏற்பட்டது. ஆனால் யாரும் அடிக்கப்படவில்லை. இருவரையும் ஒப்படைத்து விட்டுச் சென்றார்கள்” என்று சந்திராவத் கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“