இந்தியாவுக்கான இஸ்ரேலின் முன்னாள் தூதர் ரான் மல்கா அதானியின் ஹைஃபா துறைமுகத்தின் செயல் தலைவராக பொறுப்பேற்பதாக அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ட்விட்டர் பதிவிட்டுள்ளார். அதானி போர்ட்ஸ் மற்றும் ஸ்பெஷல் எகனாமிக் ஜோன் லிமிடெட் (APSEZ) மற்றும் இஸ்ரேலின் கடோட் குழுமத்தின் கூட்டமைப்புக்கு சொந்தமான ஹைஃபா துறைமுக நிறுவனத்திற்கு செயல் தலைவராக ரான் மல்கா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்தநிலையில் ரான் மல்கா நியமனம் குறித்த கேள்விகளுக்கு அதானி குழுமம் தரப்பில் பதில் ஏதும் அளிக்கவில்லை.
ஜூலை 2022-ல், இந்தியாவின் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட் (APSEZ) மற்றும் இஸ்ரேலின் கடோட் குழுவின் கூட்டமைப்பு ஆகியவை இணைந்து, இஸ்ரேலின் இரண்டாவது பெரிய துறைமுகமான ஹைஃபா துறைமுகத்தை தனியார்மயமாக்குவதற்கான டெண்டரை வென்றது. இங்கு இஸ்ரேலின் கண்டெய்னர் சரக்குகளில் பாதியைக் கையாளுகிறது.
1.18 பில்லியன் டாருக்கு அதானி-கடோட் கூட்டமைப்பு ஏலம் வென்று ஹைஃபா துறைமுகத்தின் உரிமையைப் பெற்று 100 சதவீத பங்குகளை வாங்கியது.
அதானி போர்ட்ஸ், சிறப்பு பொருளாதார மண்டல லிமிடெட் – கடோட் கூட்டமைப்பு ஜனவரி 10, 2023 அன்று இஸ்ரேல் அரசாங்கத்திடம் இருந்து துறைமுகத்தை கையகப்படுத்துவதற்கான நடவடிக்கையை நிறைவு செய்தது. இந்த துறைமுகத்தில் அதானி 70 சதவீதப் பங்குகளையும், கடோட் 30 சதவீதப் பங்குகளையும் வைத்துள்ளனர். ஹைஃபா துறைமுகத்திற்கான ஒப்பந்தம் 2054 வரை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வடக்கு இஸ்ரேலில் அமைந்துள்ள ஹைஃபா, இஸ்ரேலின் இரண்டு பெரிய வணிகத் துறைமுகங்களில் ஒன்றாகும். இஸ்ரேலின் கொள்கலன் சரக்குகளில் பாதியைக் கையாளுகிறது. மேலும் பயணிகள் போக்குவரத்து மற்றும் பயணக் கப்பல்களுக்கான முக்கிய துறைமுகமாகவும் உள்ளது. ஹைஃபா துறைமுகத்தில் தற்போதுள்ள உள்கட்டமைப்பில் 2 கொள்கலன் முனையங்கள் மற்றும் 2 மல்டி கார்கோ டெர்மினல்களை கொண்டுள்ளது.
2018-ம் ஆண்டு ரான் மல்கா, இந்தியாவுக்கான இஸ்ரேல் தூதராக நியமனம் செய்யப்பட்டார். இவர் தொழில் இராஜதந்திரி அல்ல, ஆனால் வலுவான வணிக மற்றும் நிதி பின்னணியைக் கொண்டிருந்தார். எம்பிஏ படித்து பொருளாதாரத்தில் பிஎச்டி பட்டம் பெற்றவர். இவர் தூதராக இருந்த காலத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார பங்களிப்பில் கவனம் செலுத்தினார்.
மேலும் அவர் தூதராக இருந்த காலத்தில் தான், இந்தியா-இஸ்ரேல் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் ஹைஃபா துறைமுகத் திட்டம் பற்றிய விவாதங்கள் வேகம் எடுத்தன. எவ்வாறாயினும், 2020-ம் ஆண்டு கொரோனா காலத்தில் இந்த பேச்சுவார்த்தையில் தொய்வு ஏற்பட்டது. 2021-ம் ஆண்டு ரான் மல்கா இஸ்ரேல் திரும்பியதும், அவர் இஸ்ரேலின் பொருளாதார அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரலாக நியமிக்கப்பட்டார். இது இந்திய அரசாங்கத்தில் வர்த்தகம் மற்றும் தொழில்துறை செயலருக்கு சமமான பதவியாகும்.
ஹைஃபா துறைமுகம் 2,900 மீட்டர் நீளம் கொண்டது. அதிகபட்ச வரைவு 11 மீட்டர் முதல் 16.5 மீட்டர் வரை இருக்கும். இது ரோல்-ஆன் ரோல்-ஆஃப் (RORO), பல்வேறு பயணிகள் வசதிகளுடன் ஒரு கப்பல் முனையம் மற்றும் அபிவிருத்திக்காக 2 கிமீ நீளமுள்ள நீர்முனையைக் கொண்டுள்ளது. 2021-ம் ஆண்டில் ஹைஃபா துறைமுகம் 1.46 மில்லியன் TEU கொள்கலன்களையும், 2.56 மில்லியன் டன் பொது மற்றும் மொத்த சரக்குகளையும் கையாண்டது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil