இந்தியாவின் லட்சிய விண்வெளித் திட்டமான சந்திரயான் -2 இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் (இஸ்ரோ) தோல்வியுற்றதாகக் கருதப்பட்ட சில மாதங்களுக்குப் பிறகு, இஸ்ரோ தலைவர் கே.சிவன் சந்திரயான் -3 திட்டம் நடந்து கொண்டிருப்பதை உறுதிப்படுத்தியுள்ளார். இருப்பினும், இந்த திட்டம் 2021-இல் செயல்படுத்தப்படும் என்று கூறினார்.
மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய் கல்லூரி பேராசிரியரா?
2020 ஆம் ஆண்டில் இந்தியா சந்திரயான் -3 ஐ அறிமுகப்படுத்தப்போவதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் நேற்று அறிவித்த நிலையில், இஸ்ரோ தலைவர் கே.சிவன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இந்த பணியின் முன்னேற்றம் குறித்து இஸ்ரோ தலைவர் சிவன் பி.டி.ஐ யிடம் கூறுகையில், “அரசு சந்திரயன் -3 க்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருப்பினும், இந்த திட்டத்திற்கு 14-16 மாதங்கள் ஆகலாம் என்பதால் அதன் பணிகள் 2021-க்கு தள்ளப்படலாம்.” என்று கூறினார்.
இரண்டாவது விண்வெளி மையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தல் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. இந்த இரண்டாவது ராக்கெட் ஏவுதளம் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமையும் என்று கே.சிவன் கூறினார்.
“நாங்கள் சந்திரயான் -2 இல் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளோம். எங்களால் வெற்றிகரமாக தரையிறங்க முடியவில்லை என்றாலும், ஆர்பிட்டர் இன்னும் செயல்பட்டு வருகிறது. இது விஞ்ஞான தரவுகளை தயாரிக்க அடுத்த 7 ஆண்டுகளுக்கு செயல்படப் போகிறது” என்று சிவன் கூறினார்.
நீண்ட நாட்களாக இந்திய விண்வெளி அமைப்பு விக்ரம் லேண்டருடன் தொடர்பு கொள்ள முடியாமல் போனதால், சந்திரனில் விண்கலத்தை தரையிறக்கும் இந்தியாவின் கனவு செப்டம்பர் 9 ஆம் தேதி நிறைவேறாமல் போனது.
விக்ரம் லேண்டருடனான தகவல்தொடர்பு இழந்துவிட்டபோதிலும், திட்டத்தின் நோக்கங்கள் 90-95 சதவிகிதம் நிறைவேற்றப்பட்டதாக இஸ்ரோ கூறியது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு, விக்ரம் லேண்டர் சந்திரனில் ஒரு கடினமான தரையிறக்கம் செய்ததாக விண்வெளி அமைப்பு ஒப்புக்கொண்டது.
இஸ்ரோ ஒரே நேரத்தில் சந்திரயான், ககன்யான் திட்டங்களில் வேலை செய்யும். மனிதனை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கு 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். நான்கு விண்வெளி வீரர்களுகான பயிற்சி ரஷ்யாவில் ஜனவரி மூன்றாவது வாரத்தில் தொடங்கும் என்று இஸ்ரோ தலைவர் கே.சிவன் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.