/tamil-ie/media/media_files/uploads/2020/08/template-2020-08-12T094915.719.jpg)
இஸ்ரோ அமைப்பில் உளவுபார்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் விஞ்ஞானி நம்பி நாராயணனின் பெயர் தவறுதலாக சேர்க்கப்பட்டது உறுதிசெய்யப்பட்ட நிலையில், அவருக்கு கேரள அரசு ரூ.1.30 கோடியை இழப்பீடாக வழங்கியுள்ளது.
இஸ்ரோ அமைப்பின் கிரையோஜெனிக் இஞ்ஜின் குறித்த தகவல்களை உளவு பார்த்து திருடி ரஷ்யா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு விற்றதாக விஞ்ஞானி நம்பி நாராயணன் உள்ளிட்ட விஞ்ஞானிகள் மீது 1994ம் ஆண்டில் வழக்கு தொடரப்பட்டது. இது தன்மீது சுமத்தப்பட்டுள்ள பொய்வழக்கு என நம்பி நாராயணன் திருவனந்தபுரம் துணை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது மட்டுமல்லாது, தன் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விட்டதாகக்கூறி இழப்பீடும் கோரியிருந்தார்.
இந்த வழக்கு விசாரணையில், நம்பி நாராயணன் மீது குற்றம் இல்லை என்பது உறுதியானது, அவரது பெயர் இந்த வழக்கில் தவறுதலாக இணைக்கப்பட்டது தெரியவந்த நிலையில், 2019 ஜூலை மாதத்தில், அவருக்கு ரூ.1.30 கோடி நஷ்டஈடு வழங்க கேரள அமைச்சரவை உத்தரவிட்டது. நம்பி நாராயணும் இந்த வழக்கை வாபஸ் பெற்றார்.
அரசு தரப்பில் ரூ.1.30 கோடி, நம்பி நாராயணனுக்கு வழங்கப்பட்ட நிலையில், உச்சநீதிமன்ற தீர்ப்புப்படி ரூ.50 லட்சமும், தேசிய மனித உரிமை ஆணையத்தின் உத்தரவின்படி ரூ.10 லட்சம் கூடுதலாக வழங்கப்பட்டது. இந்த கூடுதல் தொகை, கேரள போலீஸ் அமைப்பின் நிதியிலிருந்து வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.