சந்திரயான் -3 விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்கிய வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வு நடந்து ஒரு நாள் கழித்து, விண்கலத்தில் உள்ள கருவிகள் வேலை செய்யத் தொடங்கின. மேலும், ரோவர் சந்திரனில் நடந்தது என்று இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
புதன்கிழமை மாலை லேண்டர் தரையிறங்குவதற்கு சற்று முன்னதாக, லேண்டரில் உள்ள கேமிரா மூலம் எடுக்கப்பட்ட வீடியோவை இஸ்ரோ வெளியிட்டது.
“அனைத்து நடவடிக்கைகளும் கால அட்டவணையில் உள்ளன. அனைத்து அமைப்புகளும் இயல்பாக இருக்கின்றன. லேண்டர் மாட்யூல் பேலோடுகளான ILSA, RAMBHA மற்றும் ChaSTE ஆகியவை இன்று இயக்கப்பட்டுள்ளன. ரோவர் இயக்கப்படும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. ப்ராபல்ஷன் மாட்யூலில் உள்ள ஷேப் பேலோட் ஞாயிற்றுக்கிழமை இயக்கப்பட்டது”என்று இஸ்ரோ வியாழக்கிழமை மாலை ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளது.
ரோவர் லேண்டரில் இருந்து வெளியேறி இரவு முழுவதும் நிலவில் சுற்றித் திரிந்ததாக இஸ்ரோ இன்று காலை நாட்டிற்குத் தெரிவித்தது.
“சி.எச் -3 (சந்திரயான் -3) ரோவர் லேண்டரில் இருந்து கீழே இறங்கி இந்தியா நிலவில் நடந்து சென்றது” என்று கூறியது.
சந்திரனின் மேற்பரப்பில் ரோவர் நகரும் புகைப்படங்கள் அல்லது வீடியோக்கள் வெளியாக இன்னும் காத்திருக்கின்றன.
லேண்டர் மற்றும் ரோவர் இரண்டின் நிலையும் நன்றாக இருப்பதாகவும், இரண்டும் இயல்பாக இயங்கி வருவதாகவும் இஸ்ரோ தலைவர் எஸ் சோமநாத் கூறியதாக பி.டி.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
நிலவில் புதன்கிழமை மாலை 6.04 மணிக்கு தரையிறங்கிய நான்கு மணி நேரத்திற்குப் பிறகு லேண்டர் தொகுதியிலிருந்து ரோவர் வெளிப்பட்டது. தரையிறங்குவதால் உருவான தூசி மீண்டும் தரையில் படிவதற்காக இந்த தாமதம் ஏற்பட்டது.
முன்னாள் இஸ்ரோ தலைவர் கே. சிவன், லேண்டரில் இருந்து ரோவர் வெளியேறுவதைப் பார்க்க பெங்களூரு கட்டுப்பாட்டு அறையில் புதன்கிழமை இரவு வரை காத்திருந்ததாக ஏ.என்.ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil ”