ஜிசாட் - 6A செயற்கைக்கோள் உடனான தகவல் தொடர்பு துண்டித்துள்ளதாக இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது. செயற்கைக்கோள் உடனான தகவல் தொடர்பை சரிசெய்ய முயற்சி எடுப்பதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.
அதி நவீன தொலைத் தொடர்பு சேவைக்காக எஸ். பேண்ட் ஆன்டனாவுடன் ஜிசாட்-6ஏ செயற்கை கோளை இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகமான இஸ்ரோ உருவாக்கயது. 2,140 கிலோ எடை கொண்ட இந்த செயற்கைகோள், ஜிஎஸ்எல்வி எஃப்8 ராக்கெட் மூலம் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் ஏவுதளத்திலிருந்து கடந்த 29ம் தேதி மாலை 4.56 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது.
இந்தச் செயற்கைக்கோள் பூமியில் இருந்து புறப்பட்ட 17 நிமிஷம் 46 நொடிகளில் விண்வெளிப் பாதையில் நிலை நிறுத்தப்படும் என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்தனர். அதன்படி, வெற்றிகரமாக விண்வெளிப் பாதையில் செயற்கைக்கோள் நிலை நிறுத்தப்பட்டுள்ளது.
ஆனால், இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜிசாட் - 6A செயற்கைக்கோள் உடனான தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டது. செயற்கைக்கோள் உடனான தகவல் தொடர்பை சரிசெய்ய முயற்சி வருகிறோம் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.
இஸ்ரோ தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சிவன் பதவியேற்ற பிறகு முதல் முறையாக விண்ணில் ஏவப்பட்ட ராக்கெட் ஜிஎஸ்எல்வி எஃப்8 என்பது குறிப்பிடத்தக்கது.