ராக்கெட் ஏவப்படுவதை பொது மக்களும் பார்த்து ரசிக்கலாம்!

5 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில், பாதுகாப்பான தனி அரங்கு தயார் செய்யப்பட்டுள்ளது.

Tamil nadu news today live
Tamil nadu news today live

இந்தியன் ஸ்பேஸ் ரிசர்ச் ஆர்கனைசேஸன் எனப்படும் ISRO, ஸ்ரீஹரிக்கோட்டாவில் இருந்து ஏவப்படும் ராக்கெட்டுகளை பொதுமக்கள் பார்க்கும்படி வழிவகை செய்துள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி கழகமான இஸ்ரோ, ஆந்திரா மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து ராக்கெட்டுகளை விண்ணில் ஏவி வருகிறது.

இதனை எப்போதும் இஸ்ரோ அதிகாரிகள், விஞ்ஞானிகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட நபர்கள் மட்டுமே இதனை ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து நேரடியாகப் பார்க்க முடியும்.

இந்நிலையில் தற்போது இதனை பொதுமக்கள் கண்டுகளிக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

நாளை பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட் விண்ணில் ஏவப்படுகிறது. இதை பொதுமக்கள் தனி அரங்கில் அமர்ந்து நேரடியாக பார்க்கலாம்.

5 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் வகையில், பாதுகாப்பான தனி அரங்கு தயார் செய்யப்பட்டுள்ளது.

இந்த ராக்கெட் ஏவப்படுவதை நேரடியாக பார்க்க இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். பார்வையாளர்கள் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவர். புகைப்படத்துடன் கூடிய அரசின் அடையாள அட்டையை அவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். குறைந்த பட்சம் 10 வயது நிரம்பியவர்கள் இதனைப் பார்க்கலாம்.

குறிப்பாக, இதில் இந்தியர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Isro people can watch rocket launch

Next Story
பாஜக வேட்பாளர் பற்றி அவதூறு செய்தி வெளியிட்ட 49 ஊடகங்களுக்கு நோட்டீஸ்Bengaluru South BJP candidate Tejasvi Surya
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X