இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் புதிய தலைவராக கேரளாவைச் சேர்ந்த டாக்டர் எஸ்.சோமநாத் நியமிக்கப்பட்டுள்ளார். இஸ்ரோ தலைவராக அடுத்த 3 ஆண்டுகளுக்கு சோமநாத் பதவி வகிப்பார் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
இவர் கடந்த 2018 செப்டம்பரில் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராக இருந்த போது, இந்திய விண்வெளி மருத்துவ சங்கத்தின் வருடாந்திர மாநாட்டில் பங்கேற்றிருந்தார். அப்போது, மாநாட்டின் இடைவெளியில் அனைவரும் காபி ப்ரேக்கிற்குச் சென்ற சமயத்தில், இவர் மட்டும் காலியாக இருக்கும் ஹாலில் இருந்தப்படி தனது உரைக்கான விளக்ககாட்சியை சரிபார்த்துக்கொண்டிருந்தார்.
அந்நிகழ்வில் பேசிய அவர், " ஒரு செயலற்ற செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் அனுப்புவதை விட மனிதனை விண்வெளிக்கு அனுப்புவது வித்தியாசமான பந்து விளையாட்டு ஆகும். சுற்றுப்பாதை என்பது பூஜ்ஜிய ஈர்ப்புச் சூழல். விண்வெளிக்கு அனுப்பும் நபர், திரும்பும் வரை உயிருடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஒரு நபரை விண்வெளிக்கு அனுப்புவது மிகவும் எளிதானது, ஆனால் அவரை பத்திரமாக மீண்டும் அழைத்து வருவது மிகவும் கடினமானது.
உடனடி லட்சியம் என்னவென்றால், 2022க்குள் ஒரு மனிதனை சுற்றுப்பாதைக்கு அனுப்புவது தான். தற்போது நம்மிடமிருக்கும் அறிவு நிலையை கொண்டு அதை எப்படி சாத்திய படுத்துவது மற்றும் மேலும் தேவையான அறிவாற்றலை எப்படி உருவாக்குவது என்பது குறித்து பார்க்க வேண்டும்" என்றார்.
கே சிவனுக்குப் பிறகு 10வது இஸ்ரோ தலைவராக சோமநாத் பதவியேற்கிறார். ஏவுகணை தோல்விகள், கொரோனா தொற்று போன்றவற்றால் தள்ளிப்போன மனித விண்வெளி திட்டத்தை மீண்டும் வெற்றிகரமாக செயல்படுத்துவது அவர் முன்னிருக்கும் முக்கிய சவால்கள் ஆகும். மேலும், செப்டம்பர் 2019 இல் சந்திரயான் 2 ரோபோவை நிலவில் தரையிறங்கும் பணியில் ஏற்பட்ட தோல்வியையும் சரிசெய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
2018 ஆம் ஆண்டு முதல் விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்தின் இயக்குனராகவும், லிக்விட் புரோபல்ஷன் சிஸ்டம் மையத்தின் தலைவராகவும் இருந்த சோமநாத், விண்வெளி மனிதரை அனுப்பும் ராக்கெட் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் முக்கிய பணியாற்றியவர் ஆவர். அவர் திட்ட இயக்குனராகவும், ஜிஎஸ்எல்வி எம்கே-III ராக்கெட்டை உருவாக்குவதற்கான பணி இயக்குநராகவும் இருந்தார்.
சோமநாத் கூறுகையில், GSLV Mk III என்பது ஒரு அறிவார்ந்த அமைப்பு, ஆனால் இறுதி மனித மதிப்பீட்டிற்கு, தேவைப்படும் தகவல்கள் அதிக அளவில் உள்ளன. அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறோம் என்றார்.
GSLV-Mk III இன் மனித மதிப்பீடு செய்யப்பட்ட பதிப்பு, குழுவுடன் இன்னும் சோதிக்கப்படவில்லை.2024 க்கு முன் மனித விண்வெளி விமானம் பற்றிய பிரதமர் நரேந்திர மோடியின் பார்வையை நனவாக்கும் வகையில் பணியின் கடிகாரம் ஓடிக்கொண்டிருக்கிறது என இஸ்ரோ பார்வையாளர்கள் கூறுகின்றனர்.
சந்திரயான்-2 லேண்டருக்குப் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பமான த்ரோட்டில் எஞ்சின்களை உருவாக்கியது சோமநாத்தின் முக்கிய சாதனையில் ஒன்றாகும். மனித விண்வெளி திட்டத்திற்காக இஸ்ரோ உருவாக்கி வரும் சோதனை ராக்கெட்டுகளின் புதிய வகையின் முக்கிய பகுதியாக த்ரோட்டில் எஞ்சின்கள் உள்ளது.
மேலும், தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் வளரும் நாடுகளுக்கு சிறிய செயற்கைக்கோள் ஏவுதல்களை மேற்கொள்ளும் இஸ்ரோ திட்டத்தின் வளர்ச்சியில் ஒரு முக்கிய நபராக சோம்நாத் உள்ளார்.
கேரள மாநிலம் ஆலப்புழாவை சேர்ந்த சோம்நாத் 1963-ல் பிறந்தார். 10 ஆம் வகுப்பில் அறிவியல் மற்றும் கணிதத்தில் முதலிடம் பெற்ற இவர், கேரளப் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பட்டம் பெற்றார்.
பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் (IISc) ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் துறையில் முதுகலை பட்டப்படிப்பை முடித்தார். தொடர்ந்து, சென்னை ஐஐடியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் துறையில் முனைவர் பட்டமும் பெற்றவர்.
இஸ்ரோவின் முன்னாள் தலைவர் ஒருவர் கூறுகையில், சோமநாத் அறிவியல் தகவல்தொடர்பு மற்றும் அறிவியலுக்கான பூமியை நோக்கிய அணுகுமுறையைக் கொண்டவர். இது இஸ்ரோவின் வரலாற்றில் மிகக் குறைந்த கட்டத்தில் மிகவும் தேவைப்படுகிறது என்றார்.
இஸ்ரோவின் தலைவராக இருந்த போது, சிவன் தனது ஊழியர்களுக்கு அனுப்பிட கடித்ததில், "2021 ஆம் ஆண்டில் இஸ்ரோ மிகக் குறைவாகவே செயல்பட்ட உணர்வு உள்ளது. அந்த உணர்வு குறைந்த எண்ணிக்கையிலான ஏவுதல்களால் ஏற்படுகிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
விஞ்ஞானம் மற்றும் பொறியியலில் கவனம் செலுத்துவதை காட்டிலும் அரசாங்கத்திற்காக விளம்பரம் மற்றும் அரசியல் நோக்கங்களுக்கு இஸ்ரோ கவனம் செலுத்துவதாக பரவலான பேச்சு உள்ளது.
2019 ஆம் ஆண்டில் சந்திரயான் 2 திட்டம் தோல்வியடைந்ததில் இருந்து விண்வெளி நிறுவனம் எவ்வித தகவல் தொடர்பு கொள்ளாமல் உள்ளது. இது பிரதமர் மோடி கலந்து கொண்ட மிகவும் பரபரப்பான நிகழ்வாகும். கடந்த காலத்தில் வழக்கமாக செய்தது போல், பொது களத்தில் தோல்வி பகுப்பாய்வு அறிக்கையை இஸ்ரோ இதுவரை வெளியிடவில்லை.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.