சந்திரயான் 3 விண்கலத்தின் விரம் லெண்டர் வெற்றிகரமாக நிலவின் தென்பகுதியில் தரையிறங்கியுள்ள நிலையில், தரையிறங்கும்போது லேண்டர் கிடைமட்ட வேகக் கேமராவில் பதிவான புகைப்படங்களை இஸ்ரோ தற்போது வெளியிட்டுள்ளது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ கடந்த ஜூலை 14-ந் தேதி நிலவை ஆராய்ச்சி செய்வதற்காக சந்திரயான் -3 விண்கலத்தை ஏவியது. உலகின் வளர்ந்த நாடுகளுக்கு இணையாக இந்தியா தனது விண்வெளி ஆராய்ச்சியை தொடங்கியது உலக நாடுகளை வியக்க வைத்த நிலையில், 40 நாட்கள் பயணத்திற்கு பின் சந்திரயான் 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் இன்று மாலை சரியாக 6.04 மணிக்கு வெற்றிகரமாக நிலவின் தென்பகுதியில் தரையிறங்கியது.
இஸ்ரோ தலைமையிடமாக பெங்களூருவில் உள்ள இஸ்ரோ கட்டுப்பாட்டு தலைமையகத்தில் விக்ரம் லேண்டரை தரையிறக்குவதற்கும், அதிலிருந்து பிரக்யான் ரோவர் இயக்குவதற்கும் முன்னதாக கவுண்டன் நிகழ்வு தொடங்கப்பட்ட நிலையில், மாலை 6.04 மணிக்கு விக்ரம் லேண்டர் நிலவில் மென்மையான முறையில் தரையிறக்கப்பட்டது. இதன் மூலம் நிலவின் தென் பகுதியில் கால் பதித்த முதல் நாடாக இந்தியா மாறியுள்ளது.
மேலும் அமெரிக்கா, ரஷ்யா, சீனாவுக்குப் பிறகு நிலவில் கால்பதித்த 4-வது நாடாக இந்தியா மாறியுள்ளது. அதேசமயம், நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கும் உலகின் ஒரே நாடாக இந்தியா உள்ளது. இதனிடையே சந்திரயான் 3 விக்ரம் லேண்டர் தரையிறங்கும்போது லேண்டரில் உள்ள வேக கேமராவில் பதிவான புகைப்படங்களை இஸ்ரோ நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“