உத்தரகாண்ட் வெள்ளப் பெருக்கு: சேதப் படங்களை வெளியிட்டது இஸ்ரோ

ISRO releases images of Uttarakhand glacier burst damage site: பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் இதுவரை 32  பேர் உயிரிழந்ததுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை. 

கடந்த 7-ம் தேதி உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் உள்ள ரிஷிகங்கா ஆற்றின் நீர்பிடிப்பு பகுதி மற்றும் அதன் துணை ஆறு அலகண்டா ஏற்பட்ட  பனிச்சரிவு குறித்த புகைப்படங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது.

பனிச்சரிவு காரணமாக ஏற்பட்ட திடீர் வெள்ளப் பெருக்கால் இதுவரை 32  பேர் உயிரிழந்ததுள்ளனர். நூற்றுக்கும் மேற்பட்டோரை காணவில்லை.

செயற்கைக்கோள் படங்களின்படி, சாமோலி மாவட்டத்தின் ரெய்னி கிராமத்திற்கு அருகே ஏற்பட்ட பனிச்சரிவு காரணமாக, ரிஷிகங்கா மற்றும் தவுலி கங்கா நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.

தவுலி கங்கா ஆற்றில் தபோவன் பகுதியில் கட்டப்பட்டு வரும் 520 மெகா வாட் நீர் மின் நிலையத்தையும், வெள்ளம் சேதப்படுத்தியது.

 

இஸ்ரோவின் மேம்பட்ட எர்த் இமேஜிங் மற்றும் மேப்பிங் செயற்கைக்கோள் கார்டோசாட் -3 மூலம் கைப்பற்றப்பட்டன. கார்ட்டோசாட் என்பது நிலவியல் ஆராய்ச்சிக்காக விண்ணில் ஏவப்படும் புவிநோக்குச் செயற்கைக்கோள் வகை செயற்கைக்கோளாகும்

சாமோலி மற்றும் உத்தரகண்ட் மாநிலத்தை ஒட்டிய பகுதிகளில் மீட்கும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகின்றன. பனிச்சரிவு காரணத்தை கண்டறிய ராணுவ ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனம் (டிஆர்டிஓ) இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும்  நிபுணர்களுடன் இணைந்து செயல்படுகிறது.

தவுலி கங்கா ஆற்றில் தபோவன் பகுதியில் உள்ள சுரங்க பாதையில் சிக்கியுள்ளவர்களைட்ரோன்கள் மற்றும் ரிமோட் சென்சிங் கருவிகளின் உதவியுடன் மீட்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

தற்போது ஆற்றில் தண்ணீர் அளவு குறைந்துள்ளதால், வெள்ளப் பெருக்கு அபாயம் இல்லை என உத்தரகாண்ட் அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசும், மாநில அரசும் நிலைமையை தீவிரமாக கண்காணித்து வருகின்றன.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Isro releases images of uttarakhand glacier burst damage site

Next Story
குலாம் நபி ஆசாத்தின் இடத்தை நிரப்பப் போவது யார்? காங்கிரஸிடம் இருக்கும் தேர்வுகள் என்ன?Ghulam Nabi Azad replacement: Many names of heavyweights in Cong’s balancing game
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com