12 நாட்களில் 5.4 செ.மீ புதைந்த ஜோஷிமத் நகரம்: இஸ்ரோ அறிக்கை

பத்ரிநாத், ஹேம்குந்த் சாஹிப், சர்வதேச பனிச்சறுக்கு இடமான அவுலி போன்ற புகழ்பெற்ற யாத்திரை தலங்களின் நுழைவாயிலாக அமைந்துள்ள ஜோஷிமத் நகரம் நிலம் புதைவு காரணமாக பெரும் சவாலை எதிர்கொண்டுவருகிறது.

Joshimath, Joshimath land sinking, Joshimath sinking, ஜோஷிமத் நகரம், புதையும் நகரம் ஜோஷிமத், இஸ்ரோ அறிக்கை, Joshimath ISRO report, Tamil Indian Express news

பத்ரிநாத், ஹேம்குந்த் சாஹிப், சர்வதேச பனிச்சறுக்கு இடமான அவுலி போன்ற புகழ்பெற்ற யாத்திரை தலங்களின் நுழைவாயிலாக அமைந்துள்ள ஜோஷிமத் நகரம் நிலம் புதைவு காரணமாக பெரும் சவாலை எதிர்கொண்டுவருகிறது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்ட உத்தரகாண்ட் மாநிலத்தின் ஜோஷிமத் நகரத்தின் செயற்கைக்கோள் படங்கள், ஜனவரி 2-ம் தேதி தொடங்கிய நிலம் புதைவு காரணமாக ஷோஷிமத் 12 நாட்களில் 5.4 செமீ புதைந்துள்ளதாக தெரிவிக்கிறது.

பத்ரிநாத், ஹேம்குந்த் சாஹிப், சர்வதேச பனிச்சறுக்கு இடமான அவுலி போன்ற புகழ்பெற்ற யாத்திரை தலங்களின் நுழைவாயிலாக அமைந்துள்ள ஜோஷிமத் நகரம் நிலம் புதைவு காரணமாக பெரும் சவாலை எதிர்கொண்டுவருகிறது.

இஸ்ரோவின் நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டரின் (என்.ஆர்.எஸ்.சி) முதற்கட்ட ஆய்வில், 2022-ம் ஆண்டு ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் நிலம் நிலம் புதைவு மெதுவாக இருந்தது, அதிலிருந்து ஜோஷிமத் நகரம் 8.9 செ.மீ. புதைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆனால், டிசம்பர் 27, 2022 மற்றும் ஜனவரி 8, 2023 -க்கு இடையில், ஜோஷிமத் நகரத்தின் புதைவு வேகம் அதிகரித்து, கடந்த 12 நாட்களில் ஜோஷிமத் நகரம் 5.4 செ.மீ புதைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பகுதி சில நாட்களிலேயே சுமார் 5 செ.மீ. புதைந்துள்ளது. நிலம் புதைவின் பரப்பளவு அதிகரித்துள்ளது. ஆனால், இது ஜோஷிமத் நகரின் மையப் பகுதியில் மட்டுமே உள்ளது” என்று என்.ஆர்.எஸ்.சி அறிக்கை தெரிவித்துள்ளது. பொதுவான நிலச்சரிவு வடிவத்தை ஒத்த ஒரு தாழ்வு மண்டலம் அடையாளம் காணப்பட்டதாக இஸ்ரோ கூறியுள்ளது.

ஜோஷிமத் நகரின் மையப் பகுதியில் பரவியிருக்கும் நிலம் புதைவு மண்டலத்தில் இராணுவ ஹெலிபேட் மற்றும் நரசிங்கம் கோயிலை முக்கிய அடையாளங்களாகப் படங்கள் காட்டுகின்றன.

மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஆர்.கே.சிங், பூபேந்திர யாதவ், கஜேந்திர சிங் ஷெகாவத் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட கூட்டத்தில், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜோஷிமத் நிலைமை மற்றும் அப்பகுதி மக்களின் சிரமங்களை போக்க எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை வியாழக்கிழமை மதிப்பீடு செய்தார்.

169 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 589 பேர் இதுவரை நிவாரண மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஜோஷிமத் மற்றும் பிபால்கோடியில் 835 அறைகள் கொண்ட நிவாரண மையம் உள்ளது. அவற்றி ஒரே நேரத்தில், 3,630 பேர் தங்கலாம்.

ஜோஷிமத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அவர்களின் நலன்களைக் கருத்தில் கொண்டு சந்தை மதிப்புபடி இழப்பீடு வழங்குவதை ஒரு குழு தீர்மானிக்கும் என்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி வியாழக்கிழமை தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest India news download Indian Express Tamil App.

Web Title: Isro report on joshimath land subsidence

Exit mobile version