வெற்றிகரமாக விண்ணில் நிலை நிறுத்தப்பட்ட ‘கார்டோசாட் – 2’ செயற்கைகோள்!

தற்போது விண்ணில் செலுத்தப்பட்டுள்ள, ‘கார்டோசாட் – 2’ செயற்கைக்கோள், இந்தியாவின், 100வது செயற்கைக்கோள்

‘பி.எஸ்.எல்.வி. – சி 40’ ராக்கெட் வெற்றிகரமாக இன்று விண்ணில் ஏவப்பட்டது.

‘பி.எஸ்.எல்.வி. – சி 40’ ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான, 28 மணிநேர, ‘கவுன்ட் – டவுன்’ நேற்று காலை, 5:29 மணிக்கு துவங்கியது.இன்று காலை 9.29 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. தற்போது விண்ணில் செலுத்தப்பட்டுள்ள, ‘கார்டோசாட் – 2’ செயற்கைக்கோள், இந்தியாவின், 100வது செயற்கைக்கோள்.

இந்திய விண்வெளி ஆய்வு மையமான, ‘இஸ்ரோ’ வர்த்தக ரீதியான ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்திவருகிறது. இதன் ஒரு பகுதியாக, இஸ்ரோவின் வடிவமைப்பான கார்டோசாட் – 2 ரக செயற்கைக்கோள் இன்று காலை 9:28 மணிக்கு, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள முதலாவது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் செலுத்தப்பட்டுள்ளது. இந்த பி.எஸ்.எல்.வி. – சி 40 ராக்கெட்டில், இந்தியா – 3, அமெரிக்கா, கனடா, பின்லாந்து, பிரான்ஸ், கொரியா மற்றும் பிரிட்டன் நாடுகளின் செயற்கைக்கோள்கள் 28 என மொத்தம், 31 செயற்கைக்கோள்கள் செலுத்தப்பட்டுள்ளன. கார்டோசாட் – 2 செயற்கைக்கோள், இந்தியாவின், 100வது செயற்கைக்கோள். இதன் எடை 710 கிலோ.

இதில், பூமியின் இயற்கை வளங்களை, பல்வேறு கோணங்களில் படமெடுத்து அனுப்பும் வகையில், சக்தி வாய்ந்த கேமராக்களும், தொலையுணர்வு கருவிகளும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த செயற்கைக்கோள், ராக்கெட் ஏவப்பட்ட 2:21 மணி நேரத்தில், பூமியில் இருந்து, 505 கி.மீ., உயரத்தில், புவிவட்ட பாதையில் நிலை நிறுத்தப்படும். இதன் ஆயுட் காலம், ஐந்து ஆண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Isro satellite launch first mission of 2018 100th satellite successfully launched today

Next Story
தாய்க்கு மணமகன் தேடி இரண்டாம் திருமணம் செய்துவைத்த மகள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com