சந்திரயான்-2 சாகசம்: மாணவர்களுடன் நேரில் பார்க்கிறார் பிரதமர் மோடி

Chandrayaan 2: இந்த மிஷன் நமது இந்தியாவின் திறமைகளையும், உறுதியான மனநிலையை வெளிப்படுத்துகிறது. இதன் வெற்றி கோடி இந்தியர்களுக்கு பயனளிக்கும்

By: Updated: September 6, 2019, 07:12:06 PM

பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை அதிகாலை சந்திரனில் மென்மையாக தரையிறங்கும் சந்திரயான்-2 விண்கலத்தை காண்பதற்காக பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையகத்திற்கு வருகை தருகிறார்.

ட்விட்டரில் பிரதமர், “இந்தியாவின் விண்வெளித் திட்டத்தின் வரலாற்றில் அசாதாரண தருணத்தைக் காண பெங்களூரு இஸ்ரோ மையத்தில் இருக்கப்போவதை நினைத்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அந்த சிறப்பு தருணங்களைக் காண பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த இளைஞர்களும் வருவார்கள்!  ஏன்……பூட்டானிலிருந்து இளைஞர்களும் இருப்பார்கள்” என்று மோடி தெரிவித்துள்ளார்.

“சந்திரயான் -2 தொடர்பான அனைத்து தகவல்களையும் நான் ஜூலை 22, 2019 அன்று தொடங்கியதிலிருந்து தவறாமல் மற்றும் ஆர்வத்துடன் கண்காணித்து வருகிறேன். இந்த மிஷன் நமது இந்தியாவின் திறமைகளையும், உறுதியான மனநிலையை வெளிப்படுத்துகிறது. இதன் வெற்றி கோடி இந்தியர்களுக்கு பயனளிக்கும் ” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

இந்தியா முழுவதும் 8 முதல் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக நடத்தப்பட்ட விண்வெளி வினாடி வினா வெற்றியாளர்களுடன் மோடி விக்ரம் லேண்டர் தரையிறங்கும் நிகழ்வை நேரில் கண்டுகளிக்க உள்ளார்.

இந்த வினாடி வினாவில் பெரிய அளவில் மாணவர்கள் பங்கேற்றது இளைஞர்களின் ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. இது ஒரு சிறந்த அறிகுறி! என்றும் மோதி ட்வீட் செய்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil India News by following us on Twitter and Facebook

Web Title:Isro space centre pm narendra modi about chandrayaan 2 vikram soft landing

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X