பூமியை துல்லியமாக அதுவும் இரவுநேரத்தில் மேகமூட்ட காலத்திலும் கண்காணிக்கும் திறன் பெற்ற ரிசாட் 2 பி செயற்கைக்கோளை, இஸ்ரோ வெற்றிகரமாக விண்ணில் ஏவி சாதனை படைத்துள்ளது.
ரிசாட் 2 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் விரைவில் முடிவடைய இருப்பதையொட்டி, இந்த ரிசாட் 2பி செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. 2009 முதல் பயன்பாட்டில் உள்ள இந்த ரிசாட் 2 செயற்கைக்கோளின் உதவியுடன் தான் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் உள்ள பயங்கரவாத ஆயுட்காலம் 5 ஆண்டுகளாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த ரிசாட் 2 பி செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்ட நிகழ்வு, இந்திய விண்வெளித்துறையின் முக்கிய மைல்கல் நிகழ்வு ஆகும். பூமியை துல்லியமாக கண்காணிக்கும் வகையில், இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கண்காணிப்பு, வேளாண்மை, வனவியல் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட துறைகளில், ரிசாட் 2பி செயற்கைக்கோளின் பங்கு அளப்பரியதாக இருக்கும்.
615 கிலோ எடை கொண்ட இந்த ரிசாட் 2 பி செயற்கைக்கோள், முழுவதும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. பிஎஸ்எல்வி சி46ன் மூலம் ரிசாட் 2பி செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது. ஸ்ரீஹரிகோட்டா விண்வெளிதளத்தில் இருந்து ஏவப்படும் 72வது செயற்கைக்கோள் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தாண்டிலேயே 3வது முறை : 2019ம் ஆண்டில் மூன்றாவது முறையாக செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.
ஜனவரி 24, 2019 - பிஎஸ்எல்வி சி44 மூலம் மைக்ரோசாட் -ஆர் மற்றும் கலாம்சாட் -வி2 விண்ணில் ஏவப்பட்டது
ஏப்ரல் 1, 2019 - பிஎஸ்எல்வி-சி45 மூலம் எமிசாட்டும் மற்றும் 29 வெளிநாட்டு செயற்கைக்கோள்களும் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டன.
மே 22, 2019 - பிஎஸ்எல்வி சி46 மூலம் ரிசாட் 2பி ஏவப்பட்டுள்ளது.
மைக்ரோவேவ் ரிமோட் சென்சிங் செயற்கைக்கோளான ரிசாட் 1 செயற்கைக்கோள், 2012, ஏப்ரல் 26ம் தேதி விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.