கொரோனா பற்றி தவறான தகவல்ளை நீக்க வேண்டும்; சமூக ஊடங்களைக் கேட்ட மத்திய அரசு

மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் சமீபத்தில் அனுப்பிய தகவலில், வகுப்புவாத பதற்றங்களை உருவாக்க வாய்ப்புள்ள URL-களை குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.

coronavirus, information technology ministry, twitter, twitter india, கொரோனா வைரஸ், கோவிட் 19, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகம், மத்திய அரசு, ட்விட்டர் இந்தியா, ட்விட்டர், IT ministry asks social media, Covid-19, Ministry of Electronics and Information Technology

மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், கோவிட் 19 விதிமுறைகள் பற்றி தவறான தகவல்கள் மற்றும் வகுப்புவாத பதற்றங்களை உருவாக்கும் பதிவுகள், பொருத்தமில்லாத பழைய பதிவுகள், தவறான கருத்துப் படங்கள் அல்லது வீடியோக்கள் என 100க்கும் மேற்பட்ட பதிவுகளை நீக்குமாறு ட்விட்டர், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக ஊடக தளங்களிடம் ஞாயிற்றுக்கிழமை கேட்டுள்ளதாக மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

“முழு நாடும் கோவிட் -19 தொற்றுநோய்க்கு எதிராக துணிச்சலாக போராடி வரும்போது, ​​சிலர் பீதியை உருவாக்க சமூக ஊடகங்களை தவறாக பயன்படுத்துகின்றனர். இந்த பதிவுகளின் காரணமாக தொற்றுநோய் மற்றும் பொது ஒழுங்கு பிரச்னைகள் அதிகரிப்பதை எதிர்த்துப் போராடுவதில் ஏற்படும் தடைகளைத் தடுக்க இந்த URL-களை (இணையதள முகவரிகளை) நீக்குமாறு மத்திய அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது” என்று தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் மூத்த அதிகாரி வட்டாரங்கள் தெரிவித்தனர்.

மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் மின்னணு மற்றும் தகவல் தொடர்பு அமைச்சகத்தின் சமீபத்தில் அனுப்பிய தகவலில், வகுப்புவாத பதற்றங்களை உருவாக்க வாய்ப்புள்ள URL-களை குறிப்பிட்டுக் காட்டியுள்ளது.

பதிவுகளை நீக்குமாறு சமூக ஊடக தளத்திற்கு அனுப்பிய நோட்டீஸ் குறித்து அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் கூறுகையில், சமூக ஊடகங்களை அரசாங்கத்தை விமர்சிக்கவும், உதவியைப் பெறவும், கோவிட் -19 தொற்றுநோயைக் கையாள்வது குறித்த பரிந்துரைகளை வழங்கவும் பயன்படுத்தப்படலாம். ஆனால், இந்த கடுமையான மனிதநேய நெருக்கடியின்போது முறையற்ற நோக்கங்களுக்காக சமூக ஊடகங்களை தவறாகப் பயன்படுத்தும் பயனர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்” என்று தெரிவித்தனர்.

கடந்த ஒரு மாதத்தில் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மூலம் மத்திய அரசு சுட்டிக்காட்டிய 50க்கும் மேற்பட்ட ட்வீட்களுக்கான அணுகலை குறைத்துவிட்டதாகவும் அல்லது தடைசெய்ததாக ட்விட்டர் நிறுவனம் அறிவித்தது. இதற்கு ஒரு நாள் கழித்து மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இந்த நடவடிக்கை வந்துள்ளது.

உலகளாவிய மைக்ரோ-பிளாக்கிங் தளம் இந்த தகவலை லுமேன் தரவுத்தளத்தில் சமர்ப்பித்திருந்தது. இது ஒரு சுயாதீன ஆராய்ச்சி திட்டமாகும். இது ஆன்லைன் உள்ளடக்கத்தை சுற்றியுள்ள கடிதங்களை நிறுத்துவதையும் விலக்குவதையும் ஆய்வு செய்கிறது.

லுமென் தரவுத்தளத்தில் ட்விட்டர் சமர்ப்பித்த தகவல்களின்படி, இந்தியாவில் இப்போது தடைசெய்யப்பட்டுள்ள சில URLகள், கோவிட் -19 தொற்றுநோயின் இரண்டாவது அலை பற்றிய தகவல்களைக் கொண்டிருந்தன. மேலும், அரசாங்கம் இதைக் கையாளுவதையும் விமர்சித்திருந்தன. வேறு சில பதிவுகள் மற்றும் URLகள், சத்தீஸ்கரில் அண்மையில் மாவோயிஸ்டுகள் பதுங்கியிருந்த படங்களையும் வீடியோக்களையும் காண்பித்தன. இதனால் 22 காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.

திரைப்பட தயாரிப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் ஒரு நடிகரின் ட்வீட்கள் ஒரு முன்னணி செய்தித்தாளின் பத்திரிகையாளரால் அனுப்பப்பட்டது. இந்த ட்வீட்டுகள் அனைத்தும் இந்தியாவில் தடைசெய்து வைக்கப்பட்டுள்ளன. அதாவது நாட்டில் ட்விட்டர் பயனர்கள் அவர்களுடைய பதிவுகளைப் பார்க்க முடியாது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில், ட்விட்டர் நிறுவனம் ஆரம்பத்தில், மத்திய அமைச்சகத்தால் சுட்டிக்காட்ட விவசாயிகள் போராட்டங்கள் குறித்த சில ட்வீட்களை எடுக்க மறுத்துவிட்டது.

மத்திய அமைச்சகம் குறிபிட்ட சில ட்வீட்களை நீக்குமாறு கேட்டபோது, சில ட்வீட்களை ஏன் நீக்கவில்லை என்பது குறித்து ட்விட்டர் பின்னர் தனது நிலைப்பாட்டை விளக்க முயன்றது. இருப்பினும், அரசாங்க உத்தரவுகளை மீறுவது தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் சரியாகப் பொருந்தவில்லை. சமூக ஊடக நிறுவனம் ட்விட்டர் ட்வீட்களை நீக்க நடவடிக்கை எடுக்கவிலையென்றால், அதன் இந்திய ஊழியர்களை சிறையில் அடைப்பதாக அச்சுறுத்தியது. இதனால், ட்விட்டர் இந்தியா பின்வாங்கியது. பின்னர், அரசாங்கம் கோரிய 95 சதவீத கோரிக்கைகளுக்கு இணங்குவதாகத் தெரிவித்தது.

இதுபோன்ற 257 கணக்குகளின் முதல் பட்டியல் ஜனவரி 31ம் தேதி அமைச்சகத்தால் அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 1,200 கணக்குகளின் பட்டியல் வெளியிடப்பட்டது. தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் அனுப்பிய இரண்டு பட்டியல்களும் இந்த ட்விட்டர் கணக்குகள் விவசாயிகளின் போராட்டம் குறித்து தவறான தகவல்களை பரப்புகின்றன என்று கூறியது. “இது நாட்டில் சட்டம் ஒழுங்கு நிலைமையை பாதிக்கும் உடனடியாக வன்முறைக்கு வழிவகுக்கும்” என்று தெரிவித்திருந்தது.

ட்விட்டர் சில பயனர்களின் கணக்குகளைத் தடை செய்தது. ஆனால், பின்னர் அவற்றைத் தடை நீக்கம் செய்தது. இதனால், மத்திய தகவல் தொடர்பு அமைச்சகத்தை ஒரு முடிவு எடுக்க தூண்டியது.

இதுபோன்ற ஒவ்வொரு அறிக்கையையும் அரசாங்கத்திடமிருந்து முடிந்தவரை விரைவாக மதிப்பாய்வு செய்வதாகவும், நிறுவனத்தின் அடிப்படை மதிப்புகள் மற்றும் பொது உரையாடலைப் பாதுகாப்பதில் அதன் அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு ஏற்ப தகுந்த நடவடிக்கை எடுப்பதாகவும் சமூக ஊடக தளம் பலமுறை கூறியுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and India news here. You can also read all the India news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: It ministry asks social media platform cos to remove more posts alleges content spreading misinformation about covid 19

Next Story
பி.எம் கேர்ஸ் நிதியை பயன்படுத்தி 551 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள்; பிரதமர் மோடி உத்தரவுpm cares fund, 551 oxygen generation plants, coronavirus pandemic, கொரோனா வைரஸ், கோவிட் 19, பிஎம் கேர்ஸ் நிதி, 551 ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையங்கள், பிரதமர் மோடி, covid 19, pm narendra modi
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X