அனைத்து ஐடி-க்களையும் இணைக்கும் ஒரே ஒரு டிஜிட்டல் ஐடி; மத்திய அரசின் புதிய திட்டம்

பான் மற்றும் ஆதார், ஓட்டுநர் உரிமம் மற்றும் பாஸ்போர்ட் எண்கள் ஆகியவற்றை இணைத்து ஒரே ஒரு தனிப்பட்ட ஐடி; மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் புதிய திட்டம்

பான் மற்றும் ஆதார், ஓட்டுநர் உரிமம் மற்றும் பாஸ்போர்ட் எண்கள் ஆகியவற்றை இணைத்து ஒரே ஒரு தனிப்பட்ட ஐடி; மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் புதிய திட்டம்

author-image
WebDesk
New Update
அனைத்து ஐடி-க்களையும் இணைக்கும் ஒரே ஒரு டிஜிட்டல் ஐடி; மத்திய அரசின் புதிய திட்டம்

Aashish Aryan

IT Ministry plan: One digital ID that links, can access other IDs: மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) ஒரு புதிய மாதிரியான “ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் அடையாளங்களை (Federated Digital Identities)” முன்மொழிந்துள்ளது, இதன் கீழ் ஒரு குடிமகனின் பல டிஜிட்டல் ஐடிகள், அதாவது பான் மற்றும் ஆதார், ஓட்டுநர் உரிமம் மற்றும் பாஸ்போர்ட் எண்கள் ஆகியவை ஒரு தனிப்பட்ட ஐடி மூலம் ஒன்றோடொன்று இணைக்கப்படலாம், சேமிக்கலாம் மற்றும் அணுகலாம்.

Advertisment

தி இந்தியன் எக்ஸ்பிரஸ் மதிப்பாய்வு செய்த அமைச்சகத்தின் வரைவு முன்மொழிவின்படி, இந்த ஒரே டிஜிட்டல் அடையாளமானது குடிமகனுக்கு "அதிகாரம்" அளிக்கும் என்று அமைச்சகம் பரிந்துரைத்துள்ளது, மேலும், "இந்த அடையாளங்களை குடிமகன்களின் கட்டுப்பாட்டில் வைத்து, எந்த நோக்கத்திற்காக எதைப் பயன்படுத்த வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுக்கும் விருப்பத்தை அவர்களுக்கு வழங்குகிறது.

இந்த திட்டம் விரைவில் பொது களத்தில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் பிப்ரவரி 27ஆம் தேதி வரை அமைச்சகம் இது தொடர்பான கருத்துகளை கேட்க உள்ளது.

முன்மொழியப்பட்ட கட்டமைப்பின்படி, "ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் அடையாளம்" என்பது அனைத்து மாநில மற்றும் மத்திய அடையாளங்களையும் சேமிக்கக்கூடிய ஒரு பதிவேட்டில் ஒரு திறவுகோலாகவும் செயல்படும். "அங்கீகாரம் மற்றும் ஒப்புதல் eKYC மூலம் பிற மூன்றாம் தரப்பு சேவைகளைப் பெற" குடிமக்கள் டிஜிட்டல் ஐடியைப் பயன்படுத்தலாம்.

Advertisment
Advertisements

மேலும், ஒரு குடிமகனின் அனைத்து டிஜிட்டல் அடையாளங்களும் ஒன்றோடொன்று இணைக்கப்படலாம், இது வரைவு முன்மொழிவின் படி மீண்டும் மீண்டும் சரிபார்ப்பு செயல்முறையின் தேவையை நீக்கும்.

இந்தியா எண்டர்பிரைஸ் ஆர்கிடெக்சர் (IndEA) 2.0 இன் கீழ் அமைச்சகம் இதனை முன்மொழிந்துள்ளது.

IndEA முதன்முதலில் 2017 இல் "அரசு நிறுவனங்களின் வணிகப் பார்வையுடன் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிகளை சீரமைக்கும் நோக்கில் முன்மொழியப்பட்டு, வடிவமைக்கப்பட்டது." கட்டமைப்பானது பின்னர் புதுப்பிக்கப்பட்டது.

2.0 பதிப்பில், InDEA ஒரு கட்டமைப்பை முன்மொழிகிறது, இது பொது மற்றும் தனியார் துறை நிறுவனங்களை "வாடிக்கையாளர்களுக்கு முழுமையான மற்றும் ஒருங்கிணைந்த சேவைகளை" வழங்க "தங்கள் நிறுவன எல்லைகளுக்கு அப்பால் பரவக்கூடிய" IT கட்டமைப்பை உருவாக்கவும் வடிவமைக்கவும் உதவுகிறது.

"ஒருங்கிணைக்கப்பட்ட டிஜிட்டல் அடையாளம்" தவிர, புதிய கட்டமைப்பானது வெவ்வேறு அரசு நிறுவனங்களுக்கு மூன்று முக்கிய கட்டமைப்பு வடிவங்களையும் முன்மொழிந்துள்ளது.

டொமைன் கட்டமைப்பு முறையானது மத்திய அமைச்சகங்கள் அல்லது மாநிலத் திட்டங்களைக் கையாளும் அமைச்சகங்கள் அல்லது மத்திய அரசின் கணிசமான நிதியுதவி மற்றும் ஈடுபாடு கொண்ட அமைச்சகங்களால் ஏற்றுக்கொள்ள மிகவும் பொருத்தமானதாக இருக்கும்.

மாநில கட்டமைப்பு முறை மாநில அரசாங்கங்களால் ஏற்றுக்கொள்ளப்படும், அதே நேரத்தில் மூன்றாவது InDEA லைட் கட்டமைப்பு முறை மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் சிறிய துறைகளால் ஏற்றுக்கொள்ள பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

புதிய கட்டமைப்பின் கீழ் கட்டமைக்கப்படும் தகவல் தொழில்நுட்பத் திட்டங்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு இயங்கக்கூடிய வகையில் உருவாக்கப்பட வேண்டும் என்று புதிய வரைவு கட்டமைப்பு அறிவுறுத்துகிறது. இந்தத் திட்டங்கள் அரசாங்கத்தின் திறந்த பயன்பாட்டு நிரலாக்க இடைமுகக் கொள்கையைப் பின்பற்ற வேண்டும், இதில் திட்டத்தின் மூலக் குறியீடு அனைவருக்கும் மாற்றியமைக்கவும் மேம்படுத்தவும், முன்மொழியப்பட்ட கட்டமைப்பைக் கொண்டுள்ளது.

கட்டமைப்புத் தொகுதிகளின் வடிவமைப்பு மற்றும் மேம்பாட்டிற்கு மிகவும் தேர்ந்தெடுக்கப்பட்ட அணுகுமுறையை InDEA 2.0 அறிக்கை பரிந்துரைக்கிறது. மையக் கட்டமைப்புத் தொகுதிகள் மட்டுமே மத்திய அல்லது மாநில அரசாங்கங்களால் மையமாக வடிவமைக்கவும், மேம்படுத்தவும் மற்றும் நிர்வகிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளன. "ஒரு ஆளுகைக் கண்ணோட்டத்தில், மீதமுள்ள கட்டமைப்புத் தொகுதிகள் தொடர்பாக அரசாங்கம் செயல்படுத்தும் பங்கை மட்டும் வகிக்கிறது" என்று வரைவு அறிக்கை கூறுகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

India Digital India

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: