ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தின் காடுகளில் பாதுகாப்புப் படையினருடன் வெள்ளிக்கிழமை (மே5) காலை நடந்த என்கவுன்டரைத் தொடர்ந்து தீவிரவாதிகள் வெடிகுண்டுகளை வீசியதில் ஐந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். கண்டி குக்கிராமத்தின் கேசரி பகுதியில் நடந்த இச்சம்பவத்தைத் தொடர்ந்து, ரஜோரியில் மொபைல் இணைய சேவைகள் நிறுத்தப்பட்டன.
Advertisment
இது குறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் தேவேந்திர ஆனந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோட்ரங்கா துணைப்பிரிவின் கண்டி பகுதியில் பாதுகாப்புப் படையினர் கூட்டு நடவடிக்கையில் பயங்கரவாதிகளின் குழுவை சுற்றி வளைத்தனர்.
காலை 8 மணியளவில் என்கவுன்டர் தொடங்கியது. அப்போது பயங்கரவாதிகள் தாக்கினர். ஜம்மு பகுதியில் உள்ள பாடா துரியன் பகுதியில் உள்ள டோட்டா கலி பகுதியில் ராணுவ டிரக் மீது பதுங்கியிருந்து தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகள் மீது நடவடிக்கை தொடர்ந்து வருகிறது” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் புத்தால் பகுதியில் உள்ள பர்கலில் உள்ள ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் நான்கு வீரர்கள் கொல்லப்பட்டனர் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“