Advertisment

'2 வரலாற்று தவறுகளால் ஜம்மு காஷ்மீர் பாதிப்பு': அமித் ஷா

விவாதத்தின் போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த 70 ஆண்டுகளாக உரிமைகள் பறிக்கப்பட்டவர்களுக்கு இந்த மசோதா நீதி வழங்கும் என்று கூறினார்.

author-image
WebDesk
New Update
citizenship amendment bill,cab,what is citizenship amendment bill,cab bill, nrc,amit shah

முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு செய்த 2 வரலாற்று தவறுகளால் ஜம்மு காஷ்மீர் பாதிக்கப்பட்டுள்ளது என மக்களவையில் அமித் ஷா பேசினார்.

jawaharlal-nehru | lok-sabha | amit-shah | Parliament Winter Session 2023 | நாடாளுமன்ற மக்களவையில் புதன்கிழமை (டிச.6) ஜம்மு காஷ்மீர் இடஒதுக்கீடு (திருத்தம்) மசோதா 2023 மற்றும் ஜம்மு காஷ்மீர் மறுசீரமைப்பு (திருத்தம்) மசோதா 2023 ஆகியவற்றை நிறைவேற்றப்பட்டது.
இந்த மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். முன்னதாக முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு குறித்து அமைச்சர் அமித்ஷா, “ஜம்மு-காஷ்மீர் பிரதமர் நேரு செய்த இரண்டு தவறுகளால் பாதிக்கப்பட்டுள்ளது.
முதலில், போர் நிறுத்தத்தை அறிவித்து, பின்னர் காஷ்மீர் பிரச்சினையை ஐக்கிய நாடுகள் சபைக்கு எடுத்துச் சென்றது. அடுத்து, ஜவஹர்லால் நேரு சரியான நடவடிக்கைகளை எடுத்திருந்தால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்திருக்கும். இது ஒரு வரலாற்றுத் தவறு” என்றார்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன. இதனால் அவையில் இன்று கூச்சல் குழப்பம் காணப்பட்டது.

Advertisment

ஆங்கிலத்தில் வாசிக்க : 2 J&K Bills passed in LS; Oppn walks out over Amit Shah’s Nehru remark

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Amit Shah Jawaharlal Nehru Lok Sabha
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment