/indian-express-tamil/media/media_files/2sT1vlO0DVUJCHrBMc80.jpg)
மோசடி பேர்வழி சுகேஷ் சந்திரசேகர் தன்னைப் பற்றி ஊடகங்களில் செய்தி வெளியிட தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தை நாடிய நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ்,
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், மோசடி பேர்வழி சுகேஷ் சந்திரசேகர் தன்னைப் பற்றி ஊடகங்களில் செய்தி வெளியிட தடை விதிக்கக் கோரி நீதிமன்றத்தை நாடியுள்ளார்.
ஆங்கிலத்தில் படிக்க: Jacqueline Fernandez moves court to restrain ‘conman’ Chandrasekhar from issuing statements about her to media
பொருளாதார குற்றபிரிவு அதிகாரிகள தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், இந்த வழக்கில் ஒரு முக்கியமான சாட்சி குற்றம் சாட்டப்பட்டவர்களால் துன்புறுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டது கடும் கவலை அளிப்பதாக உள்ளது என்று கூறியுள்ளனர்.
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தன் மீதான எப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்யக் கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தை செவ்வாய்க்கிழமை அணுகினார். (எக்ஸ்பிரஸ் கோப்பு புகைப்படம்)
பாலிவுட் நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ், தன்னைப் பற்றிய எந்தத் தகவலையும் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஊடகங்களுக்கு வெளியிடக் கூடாது என்று மோசடி நபர் சுகேஷ் சந்திரசேகருக்கு உடனடியாகத் தடை விதிக்கக் கோரி டெல்லி நீதிமன்றத்தில் புதன்கிழமை மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் தாக்கல் செய்த மனுவில், சுகேஷ் சந்திரசேகர் தன்னைப் பற்றி மேலும் கடிதங்கள், அறிக்கைகள் அல்லது செய்திகளை வெளியிட அனுமதிக்க வேண்டாம் என்று மண்டோலி சிறைக் கண்காணிப்பாளர் மற்றும் டெல்லி காவல்துறையின் பொருளாதார குற்றப்பிரிவு-க்கு உத்தரவிடுமாறு கோரினார்.
ஊடகங்களுக்கு அளிக்கப்படும் சிக்கலான கடிதங்கள், தேவையில்லாத தகவல் பரப்புதல் தனக்கு ஒரு துன்பமான சூழலை உருவாக்கியுள்ளது என்று நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த செய்திகள் அவரது பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை பாதித்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதற்கு பொருளாதாரக் குற்றப்பிரிவு தனது பதிலில், இந்த வழக்கில் ஒரு முக்கியமான சாட்சி குற்றம் சாட்டப்பட்டவர்களால் துன்புறுத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டிருப்பது கடும் கவலை அளிக்கிறது என்று கூறியது. மேலும், இது வழக்கு விசாரணையை பாதிக்கலாம் என்று தெரிவித்துள்ளது.
இந்த வழக்கின் அடுத்த விசாரணையை ஜனவரி 17-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
சுகேஷ் சந்திரசேகர் சம்பந்தப்பட்ட அமலாக்கத்துறை இயக்குனரகத்தின் ரூ.200 கோடி பணமோசடி வழக்கில், தனக்கு எதிரான எப்.ஐ.ஆர்-ஐ ரத்து செய்யக் கோரி ஜாக்குலின் பெர்னாண்டஸ் டெல்லி உயர் நீதிமன்றத்தை செவ்வாய்க்கிழமை அணுகினார்.
குற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தனது கணவருக்கு ஜாமீன் தருவதாக கூறி ரான்பாக்ஸி நிறுவனத்தின் முன்னாள் புரமோட்டர் ஷிவிந்தர் மோகன் சிங்கின் மனைவி அதிதி சிங்கிடம் சுகேஷ் சந்திரசேகர் ரூ.200 கோடி மோசடி செய்ததாக டெல்லி போலீசார் குற்றம் சாட்டியுள்ளனர். இலங்கை வம்சாவளியைச் சேர்ந்த நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் மிரட்டி பணம் பறிக்க உடந்தையாக இருந்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.