ஆகஸ்ட் 9 ஆம் தேதி இரவு ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் 17 வயது மாணவர் விடுதி கட்டிடத்தில் ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு நிர்வாணமாக ஓடியது இரண்டு மணி நேர கொடூரம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
இளங்கலை மாணவரின் மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் கொல்கத்தா காவல்துறை, ஆகஸ்ட் 9 ஆம் தேதி இரவு, 17 வயது மாணவர் நான்கு மாடி கட்டடத்தின் இரண்டாவது மாடி பால்கனியில் இருந்து விழுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அவரது மரணத்திற்கு வழிவகுத்த, ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் மெயின் ஹாஸ்டலில் நடந்த நிகழ்வுகளின் சங்கிலியை ஒன்றாக இணைத்துள்ளது.
இதையும் படியுங்கள்: சட்டப் பிரிவு 370 நிரந்தரமாக இருக்க வேண்டும் என்று இல்லை: உச்ச நீதிமன்றம்
இதுவரை கைது செய்யப்பட்ட 12 குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ராகிங் செய்ததற்கான ஆதாரங்கள் தங்களிடம் இருப்பதாகக் கூறும் காவல்துறை புலனாய்வாளர்கள், 17 வயது மாணவனின் "உடைகளை அவிழ்த்து, கொடுமைப்படுத்தி மற்றும் ஓரினச்சேர்க்கை வன்முறைகளால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டான்," என்று தெரிவித்தனர்.
விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர் மற்றும் விடுதி மாணவர்களின் தகவலின் அடிப்படையில் மூன்று நிகழ்வுகளாக விடுதி கட்டிடத்தில் நடந்த சம்பவத்தை ஒருங்கிணைத்த போலீசார், ஆகஸ்ட் 9 ஆம் தேதி இரவு 9 மணியளவில் 17 வயது இளைஞன் அவரது சீனியர்களால் இரண்டாவது மாடியில் உள்ள அறை எண் 70க்கு வரவழைக்கப்பட்டதாக கூறுகிறார்கள். இரண்டாவது மாடியில் உள்ள அறை எண் 68-ல் அந்த மாணவர் தங்கியிருந்தார். பின்னர் மாணவரை விடுதி கட்டிடத்தின் இரண்டாவது மாடியின் தாழ்வாரத்தில் நடந்து செல்லும்படி சீனியர்கள் கூறினர். அவர் நடந்து சென்றபோது, அவரது சீனியர்கள் ஆடைகளை கழற்றியதாக கூறப்படுகிறது. தப்பிக்க, 17 வயது மாணவர், நிர்வாணமாக, முதலில் அறை எண் 65 க்கு சென்று ஒளிந்துக் கொள்ள முயன்றார், ஆனால் முடியவில்லை. சீனியர் மாணவர்கள் அவரைத் துரத்தியதால், அவர் இரண்டாவது மாடியில் உள்ள ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு ஓடத் தொடங்கினார். இது இரவு 11 மணி வரை நீடித்ததாக போலீசார் தெரிவித்தனர்.
அவர் இரவு 11.45 மணியளவில் அறை எண் 59 மற்றும் 68 க்கு இடையில் உள்ள விடுதி கட்டிடத்தின் இரண்டாவது மாடி பால்கனியில் இருந்து கீழே விழுந்தார் என்று விசாரணையாளர்கள் தெரிவித்தனர்.
“அவர் (17 வயது மாணவர்) ராகிங் செய்யப்பட்டதற்கான முதன்மையான ஆதாரம் எங்களிடம் உள்ளது. அவர் தாழ்வாரத்தில் நடந்து செல்லும்படி கேட்கப்பட்டார், பின்னர் சீனியர்கள் அவரின் ஆடைகளை கழற்றினர். மாணவர் இறப்பதற்கு முன், ஒரு அறையிலிருந்து மற்றொரு அறைக்கு ஓடியது இதுவரையிலான விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது” என்று விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
“17 வயது இளைஞன் தான் ஓரினச்சேர்க்கையாளர் அல்ல என்று தங்களிடம் கூறியதாக விடுதியில் வசிக்கும் சிலர் கூறியுள்ளனர். அப்படிச் சொல்ல அவரைத் தூண்டியதுதான் இப்போது எங்கள் விசாரணையின் மையமாக உள்ளது,” என்று விசாரணையைக் கண்காணிக்கும் ஒரு மூத்த போலீஸ் அதிகாரி தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், 17 வயதான மாணவர் எப்படி விடுதி கட்டிடத்தின் இரண்டாவது மாடியில் இருந்து விழுந்தார் என்பதை புலனாய்வாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த மரணம் தொடர்பாக இதுவரை ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் தற்போதைய மாணவர்கள் அல்லது முன்னாள் மாணவர்கள் என 13 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 12 பேரில் ஆறு பேர் தற்போதைய மாணவர்கள் மற்றும் ஆறு பேர் முன்னாள் மாணவர்கள். 12 பேர் மீது கொலை மற்றும் ராகிங் குற்றங்களுக்காக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், 2021 ஆம் ஆண்டு பட்டதாரி ஒருவர் மீது காவல்துறையை தங்கள் கடமையைச் செய்ய விடாமல் தடுத்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இறந்த மாணவர் மைனராக உள்ள நிலையில், அவரை நிர்வாணமாக நடக்க வைத்தபோதும், கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு எதிராக போக்சோ சட்டத்தின் (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கும் சட்டம்) பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகளை போலீசார் இன்னும் பதிவு செய்யவில்லை.
காவல்துறையின் கூற்றுப்படி, 2022 ஆம் ஆண்டு கணிதத் துறையில் பட்டதாரியான சௌரப் சவுத்ரி முக்கிய குற்றவாளி. சட்டவிரோதமாக விடுதியில் வசித்து வந்த சௌரப் சவுத்ரி ஆகஸ்ட் 11ஆம் தேதி முதலில் கைது செய்யப்பட்டார்.
கைது செய்யப்பட்டவர்களில் தீப்சேகர் தத்தா, இரண்டாம் ஆண்டு பொருளாதார மாணவர்; மனோதோஷ் கோஷ், இரண்டாம் ஆண்டு சமூகவியல் மாணவர்; எம்.டி.ஆரிப், மூன்றாம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் மாணவர்; எம்.டி.ஆசிப் அஸ்மல், நான்காம் ஆண்டு எலக்ட்ரிக்கல் இன்ஜினியரிங் மாணவர்; அங்கன் சர்தார், மூன்றாம் ஆண்டு சிவில் இன்ஜினியரிங் மாணவர்; சத்யபிரதா ராய், நான்காம் ஆண்டு கணினி அறிவியல் மாணவர்; முன்னாள் மாணவர்கள் சப்தக் கமிலியா, அசித் சர்தார், சுமன் நஸ்கர், எஸ்கே நசிம் அக்தர் மற்றும் ஹிமான்ஷு கர்மாகர்.
போலீஸாரின் கூற்றுப்படி, நசிம் அக்தர் மற்றும் மோனோடோஷ் மூன்றாவது மாடியில் அறை எண் 108 ஐப் பகிர்ந்து கொண்டனர், சத்யபிரதா ராய் அறை எண் 110 இல் (மூன்றாவது தளம்), ஆரிஃப் அறை எண் 74 இல் (இரண்டாம் தளம்) வசித்து வந்தனர். "இந்த முன்னாள் மாணவர்களுக்காக ஒரு பிரத்யேக அறை இருந்தது, அங்கு அவர்கள் தங்களை அறிமுகப்படுத்த புதியவர்களை அழைத்தனர்," என்று ஒரு போலீஸ் அதிகாரி கூறினார்.
விடுதி மாணவர் ஒருவர் கூறுகையில், பல மாணவர்கள், பல்கலைக்கழகத்தில் இருந்து வெளியேறிய பிறகு, விடுதி அறைகளை தொடர்ந்து ஆக்கிரமித்து வருகின்றனர். “அவர்கள் சக்தி வாய்ந்தவர்கள். அவர்கள் விடுதிக்குள் நுழைவதற்கு எந்தத் தடையும் இல்லை,” என்று ஜூனியர் மாணவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.