கடந்த ஆண்டு நவம்பர் மாதம், ராஜபுத்திரர் சமூகத்தைச் சேர்ந்த 74 வயதான ஜெகதானந்த் சிங்கை ஆர்.ஜே.டி அக்கட்சியின் மாநிலத் தலைவராக நியமித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த கட்சியின் 23 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக ஒரு உயர் சாதி அரசியல்வாதி ஆர்.ஜே.டி-யின் பீகார் தலைவராக நியமிக்கப்பட்டார்.
யாதவ் சாதி ஆதிக்கம் செலுத்தும் ஓ.பி.சி அமைப்பு என்ற கட்சியின் பிம்பத்தை மறுபரிசீலனை செய்வதற்கான ஆர்.ஜே.டி-யின் நோக்கத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. தேஜஸ்வியின் அருகிலேயே ஒரு விசுவாசமுள்ள பழைய தலைவரை வைத்திருக்க வேண்டும் என்ற குடும்பத்தின் விருப்பத்தால், அவர் இரண்டாவது முறையாக தந்தை லாலு பிரசாத்தின் கவர்ச்சி இல்லாமல் என்.டி.ஏ-க்கு எதிராக போட்டிக்கு அழைத்து செல்கிறார்.
சோசலிச அரசியல் இயக்கத்தின் ஒரு தயாரிப்பு, ஜகதா பாபு - அவர் பீகாரில் பிரபலமாக அறியப்பட்டவர் - ஆர்.ஜே.டி-யின் ஸ்தாபக உறுப்பினர்களில் ஒருவர். மத்திய பீகாரில் உள்ள ராம்கர் தொகுதியின் எம்.எல்.ஏ.வாக பல முறை தேர்ந்தெடுக்கப்பட்டுள்லார். லாலு பிரசாத்தின் கிட்டத்தட்ட அனைத்து ஆட்சியிலும் அவர் அமைச்சராக இருந்தார்.
2009ம் ஆண்டில், ஜெகதானந்த் சிங், பக்ஸர் மக்களவைத் தொகுதியில் ஆர்.ஜே.டி கட்சி சீட்டில் போட்டியிட்டு பாஜகவின் லால் முனி சௌபேவை 2,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். அந்த பிராந்தியத்தில் மிகவும் பிரபலமான தலைவரான சௌபே 1996ல் இருந்து பக்ஸர் தொகுதியில் தோற்றதில்லை. அந்த இடத்தை 2014ல் பாஜக மீண்டும் கைப்பற்றியது. 2019லும் வெற்றி பெற்று அந்த தொகுதியை தக்க வைத்துக் கொண்டது. ஜெகதானந்த் சிங் அந்த தொகுதியில் இரண்டு முறையும் தோற்றார்.
மத்திய பீகாரில் ராஜ்புத் வாக்காளர்களிடையே ஜெகதானந்த் சிங் கணிசமான செல்வாக்கைக் கொண்டிருப்பதாகக் கூறப்பட்டாலும், ஆர்.ஜே.டி-யில் அவரது முக்கியத்துவம் லாலுவின் குடும்பத்தினருக்கு அவருடைய உறுதியான விசுவாசமே காரணம். ஆர்.ஜே.டி-யின் பீகார் மாநிலத் தலைவர் பதவிக்கு ஜெகதானந்த் சிங்கின் பெயரை பரிந்துரைத்தவர் லாலு பிரசாத் என்றும் அதற்கு குடும்பத்தில் உள்ள அனைவரும் விரைவாக ஒப்புதல் அளித்ததாகவும் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உயரமான ஆனால் அமைதியான தலைவரான ஜெகதானந்த் சிங் எப்போதும் லாலுவின் குடும்பத்தை நேசித்து வருகிறார். ஆர்.ஜே.டி கட்சியின் மற்ற செல்வாக்குமிக்க ராஜ்புத் தலைவர்களைப் போலல்லாமல், சமீபத்தில் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு ஆர்.ஜே.டி-யை விட்டு வெளியேறிய ரகுவன்ஷ் பிரசாத் சிங் போலல்லாமல், ஜெகதானந்த் சிங் ஒருபோதும் எதிராக குரல் கொடுக்கவில்லை, லாலுவுக்கு சவால் விட்டதில்லை. மேலும், ரகுவன்ஷ் தனது அரசியலில் தேசிய அளவில் செல்வாக்கு பெற வேண்டு என்ற நோக்கம் உடையவராக இருந்தபோதிலும், ஜெகதானந்த் சிங் மாநில அரசியலில் மகிழ்ச்சியாக இருந்தார்.
தீவன ஊழல் குற்றச்சாட்டுகளை அடுத்து லாலு பிரசாத் ராஜினாமா செய்த பின்னர், 1997ம் ஆண்டில் ராப்ரி தேவியை முதலமைச்சராக நியமிக்க அவர் லாலுவின் குடும்பத்திற்கு முன்மொழிந்தபோது அவர் மீது லாலுவின் குடும்பத்தின் நம்பிக்கை உறுதியானது. 2010ம் ஆண்டு சட்டமன்ற இடைத்தேர்தலில், தனது சொந்த தொகுதியான ராம்கரில் தனது சொந்த மகன் சுதாகருக்கு எதிராக பிரச்சாரம் செய்தார். ஆனாலும் ஆர்.ஜே.டி-யின் அம்பிகா யாதவிடம் தனது தோல்வியை உறுதிசெய்தபோது அவரது விசுவாசத்தின் மற்றொரு முறை வெளிப்பட்டது. ஆர்.ஜே.டி சுதாகருக்கு தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்காமல் புறக்கணித்ததை அடுத்து சுதாகர் பாஜக அளித்த சீட்டை ஏற்றுக்கொண்டார். இந்த முறை, தற்செயலாக, சுதாகர் ராம்கரைச் சேர்ந்த ஆர்.ஜே.டி வேட்பாளராக போட்டியிடுகிறார்.
“ஜெகதா பாபு பீகார் மாநிலம் தழுவிய ஒரு வெகுஜனத் தலைவராக இல்லாமல் இருக்கலாம். ஆனால், அவருக்கு நல்ல அரசியல் மனம் இருக்கிறது. அவர் ஒரு கடினமான தலைவர் மற்றும் ஒழுக்கமானவர். எனவே, அவர் பீகாரில் கட்சியின் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து, விஷயங்கள் இன்னும் கொஞ்சம் முறையாகிவிட்டன. மேலும், தேர்தலுக்கான அணுகுமுறை இன்னும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. அவர் மிகவும் தர்க்கரீதியானவர். நீங்கள் அவருடன் உடன்படவில்லை என்றாலும் அவருக்கு எதிராக வாதிடுவது கடினம். அவருக்குப் பின்னால் இருக்கும் முதல் குடும்பத்தின் பலம் அவருக்குத் தெரியும் என்பதை தொண்டர்களும் அறிவார்கள்” என்று மூத்த ஆர்.ஜே.டி தலைவர் ஒருவர் கூறினார்.
ஜெகதானந்த் சிங் நியமனம் உயர் சாதியினருக்கு எதிரானது அல்ல என்ற செய்தியை சொல்வதாக ஆர்.ஜே.டி நம்புகிறது. 2019 தேர்தல்களுக்கு முன்னதாக, உயர் சாதியினருக்கான 10% EWS இடஒதுக்கீட்டிற்கு ஆர்.ஜே.டி.யின் எதிர்ப்புக் குரல் பின்வாங்கியது. என்.டி.ஏ பீகாரில் உள்ள 40 மக்களவைத் தொகுதிகளில் 39 தொகுதிகளை வென்றது (மீதமுள்ள ஒரு இடத்தை காங்கிரஸ் வென்றது). நிதீஷ் குமார் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை கையகப்படுத்திய நிலையில், ஆர்.ஜே.டி உயர் சாதியினரை ஒரு வாக்கு வங்கியாக பார்க்கிறது. இது யாதவர்கள் மற்றும் முஸ்லிம்களைத் தாண்டி தனது சமூக தளத்தை விரிவுபடுத்துவதற்கு செல்லலாம்.
“லாலு பிரசாத் பல ஆண்டுகளாக இல்லாதபோது ஆர்.ஜே.டி ஆட்சியின் போது ஜெகதா பாபு உண்மையான முதல்வராக இருந்தார் என்பதை மறக்க முடியாது. ஒரு மூத்த தலைவரும் விசுவாசியும் தேஜஷ்விக்கு தேர்தலில் வழிகாட்ட வேண்டும் என்று லாலுவின் குடும்பம் விரும்புகிறது. இது பெரிய அளவில் அவரை மேலும் நெருக்கமாக்குகிறது” என்று ஆர்.ஜே.டி தலைவர் ஒருவர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.